மனம் ஒரு குரங்கு என்று பாட்டொன்று உண்டு!
மனம் என்பது எங்கும் இல்லை, அது வெறும் கற்பனை என்பாரும் உண்டு!
மனதின் செயல்பாடுகளை நான்கு விதமாக பிரிக்கிறது வேதாந்தம். அவையானது:
1. அடி மனம் (மனஸ்) - உணரும் கருவி
2. சித்தம் - அனுபவ சேமிப்புக் கிடங்கு
3. அகங்காரம் - ஈகோ
4. புத்தி - அறியும் அறிவு, நிர்ணயம் மற்றும் முடிவு செய்தல்
கொஞ்சம் விளக்கமாக பார்ப்போமா?
அடி மனம் (மனஸ்):
வெளி உலக நிகழ்வுகளை இந்த மனஸ் வழியாகத் தான் மனதை சென்றடைகிறது. நமது உடல் அவையங்களுக்கு ஒரு மேற்பாற்வையாளர் போல இந்த மனஸ். புத்தி எடுக்கும் செயல்பாட்டு முடிவுகளை நமது அவையங்களுக்கு கொண்டு சென்று, அந்தந்த அவையங்களுக்கு இன்னென்ன செயல்பாடு என்று சொல்லுவதும் இந்த பகுதிதான்.
சித்தம்:
நம் அனுவங்களையும் அவற்றின் பாடங்களையும் சேமித்து வைக்கும் பகுதிதான் சித்தம். மனஸ் இந்த சேமிப்புக் கிடங்கின் அனுபவங்கள் பல சமயம் புத்தியை வழி நடத்துகிறது. புத்தியானது உயர் ஞானம் பெற்றிராவிட்டால், சித்தம் என்னும் இந்த அனுபவக் கிடங்கில் வெளிவரும் ஏதோ இரு நினைவலையில் உதவியுடன் மட்டுமே தான் செய்யவேண்டியதை முடிவு செய்ய வேண்டி வரும். அப்படிப்பட்ட முடிவு ஒரு சாதரண முடிவாகவே இருக்கும்.
அகங்காரம்:
நான், எனது என்பது போன்ற அகங்கார ஈகோ உணர்வுகளின் பிறப்பிடம் இந்தப் பகுதி. நான் தனித்துவமானவன், என் செயல்களுக்கெல்லாம் நானே மூலாதாரம் என நினைக்கச் செய்கிறது. சித்தம் பகுதியில் சேமித்த நினைவுகளில் தனக்கு வேண்டிய ஒரு நினைவைக் கொண்டு, மனஸை தவறான முடிவுகளில் கொண்டு செல்கிறது.
புத்தி:
இதுவே உயரிய அறிவென்னும் தன்னறிவை எட்டுவதற்கான வழியின் வாசற்படி. உயர் ஞானத்தின் உதவியுடன் இந்த புத்தி, சரியான முடிவு எடுக்கும் பட்சத்தில் அதன் ஆணைகளை, மனஸானது மேற்கொள்ளும். ஆனால், புத்தியானது, மாசு பட்டிருந்தால், சரியான முடிவுகளை எடுக்க இயலாது. இதனாலேயே, உயர் ஞானம் அடைய விரும்புவோரின் தலையான பணியானது, புத்தியை தூய்மைப்படுத்தல் ஆகும்.
அப்போ, மனசும், மூளையும் ஒன்றா, இன்லை வெவ்வேறா..
ReplyDeleteமூளயிலும் சிறுமூளை, பெருமூளை, முகுளம் என்று மூன்று
பகுதிகள் இருப்பதும் மூன்றும் வேறுவேறு வேலைகளைச்
செய்வதாலும்... வேதாந்ததமும், உடற்கூற்றுவியலும்
ஒன்றுபடுகிறதா அல்லது வேறுபடுகிறதா என்று தெரிந்து
கொள்ள ஆவல்
ஜீவி
மனம் வேறு, மூளை வேறு.
ReplyDelete