உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?
உள்ளதை உள்ளபடி காட்டிடும் கண்ணாடி போன்ற
கன்னங்களுடைய உன் மேனியைக் காண
வாடிடும் என் அருகினில் இன்னும் வராதது ஏனோ?
உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?
உறக்கம் துறந்து, யாழினை மீட்டி,
தூய உள்ளத்தினில் சுத்த ஸ்வரத்துடனும்,
வேளை தவறாமல் பஜனை செய்யும்
உன் தொண்டர்களை நாளும் காப்பாற்றும்
தயையுள்ளம் பெற்றவன் நீயன்றோ?
தியாகராஜனால் போற்றப் பெற்றவனே!
உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?
இது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவாரான தியாகராஜர் என்னும் ஏழையின் கீர்த்தனம் - கத்தனு வாரிகி.
அவரிடம் பொருள் ஏதும் இருந்ததில்லை, ஆனால் இராமனை போற்றிப் பாடாத நாளில்லை.
அவரன்பு இராமனை தூக்கிப்போட்டதில் அவர் கதறியது காவிரி அறியாததில்லை.
அந்த காவிரி பாயும் தமிழகம் மட்டும் மறந்ததேனோ?
ரொம்பவே அமைதியா ஆடம்பரமே இல்லாமல் நல்லா எழுதறீங்க. கொஞ்சம் விளம்பரம் வேணும்னு நினைக்கிறேன். இனிமேல் கட்டாயம் முடிஞ்சப்போ எல்லாம் வரேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்டேதி ராமுடு என்ற அவ்ர் கீர்த்தனையின் தமிழாக்கமா இது அருமை..... அருமை.....
ReplyDeleteவாங்க கீதா மேடம், அடிக்கடி வாங்க!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்!
தி.ரா.ச சார்:
ReplyDeleteஇந்த பாடல் - 'கத்துனு வாரிகி' என்ற தோடி ராக கீர்த்தனை.
பாடலை இங்கே பதிந்துள்ளேன்.
மிக நன்றாக எளிமையாக தெளிவாக எழுதுகிறீர்கள். எவரொருவருக்கும் பன்முகமிருப்பது உண்மைதான். ஆனால் அனைத்தையும் வெளியிடவேண்டிய அவசியமும் தேவையும் இல்லை என்று நினைக்கிறேன். பொன்னியின் செல்வன், கதைகள், திரைப்படப்பாடல்கள் போன்றவற்றை பற்றி எழுத பலர் இருக்கிறார்கள்.
ReplyDeleteதங்களுக்கு சங்கீதமும், தத்துவமும் வாய்த்துவந்துள்ளதாகவே கருதுகிறேன். தங்கள் சக்தியையும் முயற்சியையும் சங்கீதமும், தத்துவமும் சம்மந்தப்பட்ட கட்டுரைகள் எழுத பயன்படுத்தினால், உங்களால் பலர் பயன்படுவார்கள்.
உண்மையை சொல்வதானால்,இம்மாதிரியான விஷயங்களை எந்தஒரு பயாஸும் இல்லாமல் எழுதுவதற்கு ஆளில்லை என்பதுதான் நிஜம். அப்படி இது சம்பந்தமாக எழுதுபவர்கள்கூட போலியான வார்த்தைகளுடன், Bizarre effect க்குகாக கண்டதை எழுதிவிடுகிறார்கள்.
"wide range of interests from arts to science to sprituality." என்று சொல்லும் போது உங்கள் விரிந்த ஞானமும் விருப்பமும் புலப்படுகிறது.
நான் சொல்வதெல்லாம், தங்கள் energyயை இசை, கலை, தத்துவம் ஆகியவற்றில் focus செய்யமுடிந்தால் நன்றாக இருக்கும். இசை, கலை, தத்துவம் என்பதுதான் இல்லை... ஏதாவது ஒரு விஷயத்தில் focus செய்து எழுதுங்களேன்.
இப்படி பல விஷயங்கள் எழுதுவதால், உங்களது நண்பர்கள், உங்களை புரிந்தவர்கள் மட்டுமே படிக்கும் ஒரு இடமாகிவிடவும் வாய்ய்ப்புள்ளது. :)
நல்வாழ்த்துக்கள்.
ராம்.
/* இது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவாரான தியாகராஜர் என்னும் ஏழையின் கீர்த்தனம்.
ReplyDeleteஅவரிடம் பொருள் ஏதும் இருந்ததில்லை, ஆனால் இராமனை போற்றிப் பாடாத நாளில்லை.
*/
ஐயா,
தியாகராஜர் என்னும் ஏழையின் என்பது ஒரு தவறான சொற்றொடர்.
அவரிடம் பொருள் ஏதும் இருந்ததில்லை என்பது ஒரு தவறான தகவல்.
நன்றி
ராம்.
ராம் ஐயா,
ReplyDeleteமிக்க நன்றி - தங்கள் அறிவுரையின் சாரத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
பலதரப்பட்ட விஷயங்களை எழுதினாலும், எல்லாவற்றிலும் நான் மாணவன் தான்.
இசையிலும், ஆன்மீக தத்துவத்திலும் சமீப காலமாக நாட்டம் அதிகமாவதை நான் உணர்கிறேன். அதனாலேயே, இவ்விரு பிரிவிற்கும் வோர்ட்பிரஸில் தனியாக இரு ப்ளாக்களை உருவாக்கியுள்ளேன்.
இன்னிசை
அருள்
மற்றபடி, அறிவியல் செய்திகளில் தமிழில் தருவதிலும் பயனிருக்கும் என்று தந்திருக்கிறேன்.
எல்லாவற்றிலும் ஏதேனும் பயனிருக்கும் என்ற நம்பிக்கை இருப்பினும், நீங்கள் சொல்லும் focus- இன் முக்கியத்துவம் புரிகிறது.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்...குறள் ஞாபகம் வருகிறது.
இடிப்புரைக்கு நன்றிகள் பலப்பல.
//தியாகராஜர் என்னும் ஏழையின் என்பது ஒரு தவறான சொற்றொடர்.
ReplyDeleteஅவரிடம் பொருள் ஏதும் இருந்ததில்லை என்பது ஒரு தவறான தகவல்.
//
அப்படி எங்கோ படித்ததாக ஞாபகம்...
இப்போது தேடியதில் இந்த சுட்டி கிடைத்தது!
பாடல் தமிழில் அழகாக மிளிருகிறது!
ReplyDelete