Monday, January 22, 2007

தீபக் சோப்ரா : தன் உணர்வு

நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களில் நல்லதல்லாதவற்றில் நம் கவனம் அதிகமாக செல்ல செல்ல, நமக்குத் தெரியமலே நமது உடல் நிலையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை ஏற்படுவதற்கு இதுபோன்ற நிகழ்சிகள் மறைமுக காரணமாக இருக்கிறது.

இதிலிருந்து தப்புவது எப்படி?. நமக்கென ஒரு குறிக்கோளை எடுத்துக்கொண்டு அதில் கவனம் செலுத்த வேண்டும். தனக்கென எதோ ஒரு வேலையில் ஒன்றில் கவனம் செலுத்த, அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றமும், புது தெம்பும் ஏற்படுவதை கண்கூடாக உணர்வர்.

ஒருவர் ஒரு செயலை செய்யத் தொடங்கி, அதிலேயே முழு கவனம் செலுத்தி, அதிலேயே மூழ்கி மூழ்கி, அந்த செயலில் அனைத்தும் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதில் எந்த ஒரு தடங்கல் ஏற்பட்டாலும், அது அவர்களை பாதிப்பதில்லை. அவர்களது மனமானது அமைதியான நீரோடைக்கு ஒப்பான நிலையில் இருக்கும். அவர்களையே தன்னை உணர்ந்தவர்கள் என்று சொல்லலாம்.

அதிகாரத்தின் சக்தியை அறிவீர்கள். பணத்தின் சக்தியை அறிவீர்கள். அதுபோலத்தான் தன்னை உணர்ந்தவர்கள் சக்தியும். தன்னை உணர்ந்தவர்களின் செயல்களின் சரியான விளைவுகளை ஏற்படுதுவையாகத்தான் இருக்கும்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளில்:
It's no good trying to polish stupidity, trying to become clever. First I must know that I am stupid, that I am dull. If you resist what you are, then your dullness becomes more and more.

என்ன நடக்கிறதோ அதை அப்படியே பார்க்க வேண்டும். நமது எண்ணங்களால் அவற்றை பார்க்கக்கூடாது. அப்போதுதான் நமது புரிதல் சரியாக இருக்கும்.

உணர்வுகளில் 'இளம் உணர்வுகள்' என்றொரு வகை. அவற்றிற்கு சக்தி அதிகம். ஆர்வமுடன் விளையாடும் சிறுவர்களிடமும், புதிதாக குழந்தையை ஈந்தெடுத்த தாயிடமும் இதனை நன்றாகப் பார்க்கலாம். வாழ்க்கையின் சக்தி உடலில் பாய்வதை கவனித்து உணர்பவர்களின் உடல் நலம் சிறப்பாகவே இருக்கும்.

நாம் ஒரே காரியத்தை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கும்போது, நம் கவனம் அதிலிருந்து அகல்கிறது. கவனம் அகன்றால், நம் அறிவால் அந்த காரியத்திற்கு எந்த உதவியும் செய்ய இயலாது. செய்யும் செயலில் சரியாக கவனம் செலுத்தி, உணர்ச்சி வசப்படாமல், அதிக முயற்சியில்லாமல் தானாக ஒரு செயலை செய்யும்போது, தன் உணர்வு தானக பாய்ந்தோடும். அமைதியான கவனம் செயலில் இருக்கும்போது, அச்சம், கோபம், சந்தேகம், பொறுமையின்மை, மன உளைச்சல் போன்றவற்றிற்கு இடமில்லை. அவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

நமது குறைபாடுகளைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்ற நினைப்பிலேயே நாம் நடந்து கொண்டிருக்கிறோம். நமது குறைபாடுகளோடு சண்டை செய்வதில் பயனில்லை. நமது குறைபாடுகளை பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால், அவை வளர்ந்து கொண்டே இருக்கும். தன் உணர்வை வளர்க்கும் முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம், அதுவே குறைபாடுகளை வேரறுக்க சரியான வழி.

- சமீபத்தில் தீபக் சேப்ராவின் புத்தகத்தில் படித்தது.

3 comments:

  1. நல்ல பதிவு ஜீவா.
    தீபக் சோப்ராவின் குரலைவிட புத்தகம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. வாங்க வல்லிசிம்ஹன்!
    நான் குரலை கேட்டதில்லை! தற்போது அவரது ஒலிப்புத்தகம் ஒன்றைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன், ஆனால் அவரது குரலில் அல்ல.
    இது அவர் ஆங்கிலப் புத்தகத்திலிருந்து தமிழாக்கம்.

    ReplyDelete
  3. Anonymous10:31 PM

    அந்த புத்தகத்தின் பெயர் என்ன? குறிப்பிடவும்.
    "தன் உணர்வா" ?

    ReplyDelete