Tuesday, January 02, 2007

நந்தனார் சரிதம் - இசைச்சொற்பொழிவு கேட்டீரோ

அன்பால் உருகி மருகியவனுக்கு
தன்பால் ஓடிவர வழிசெய்து
தடைகள் யாவையும் தவிர்த்த
எம்பிரானே, உன்பாதம் சரணம்.

நந்தனார் சரிதம் - இன்றைக்கும் என்றைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அதுவும் பாலு சாஸ்திரிகள் காலக்ஷேபம் பண்ணினால், அதைவிட சிறப்பு வேறு என்ன?

நான்கு பகுதிகளாக இங்கு கேட்க கிடைக்கிறது.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

இந்த பகுதிகளை அனைவரும் கேட்க மற்றும் தரவிறக்கம் செய்து கொள்ள வழிசெய்துள்ள சங்கீதபிரியா.ஆர்க் தளத்திற்கு நன்றிகள்.
(திரு.ஆர்.ஸ்ரீநிவாசன், திரு.டி.என்.பாலா அவர்களுக்கு நன்றிகள்)

5 comments:

  1. @ஜீவா. அமர்க்களமாக ஆனால் அமைதியாக ஒரு நல்ல காரியம் செய்து இருக்கிறீர்கள்.உங்களிடமிருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டும்.நான்கு பாகங்களையும் கேட்டுவிட்டு பிறகு வருகிறேன்

    ReplyDelete
  2. சங்கீதப்ரியாவின் சுட்டிகளை அறியத் தந்தமைக்கு நன்றிங்க ஜீவா!

    நந்தன் சரிதம் காலட்சேபம் கேட்க கேட்க, எளிய பக்தனின் அன்புக்கு முன்னர் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்ற ஏக்கமும் கண்ணீரும் பொங்கும்!

    இந்தச் சுட்டிகள் mp3 வேறு! download செய்தும் பொறுமையாகக் கேட்கலாம்!

    ReplyDelete
  3. தி.ரா.ச சார்:
    நீங்கள் பல கேட்டிருப்பீர்கள், இது எப்படி இருக்குன்னு சொல்லணும்.

    ரவிசங்கர்:
    ஆமாம், அதுவும் பாலு சாஸ்திரிகள் சொல்லும் விதத்தில் -

    "அப்பா, அப்பா, எனக்கு உன் தரிசனம் கிடைக்காதா அப்பா... நந்தி வழி மறிகுதப்பா..."

    என்று சொல்லும்போது, மனது உருகுகிறது!

    ReplyDelete
  4. அருமைஅருமை! இப்போதுதான் இதை பார்க்கிறேன்..நந்தனார் சரித்திரம் எனக்குப் பிடித்த ஒன்று.செவிக்கும் விருந்தாக இங்கு...நன்றி ஜீவா.
    ஷைலஜா

    ReplyDelete
  5. வருக ஷைலஜா மேடம், தரவிறக்கம் செய்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்!

    ReplyDelete