Sunday, January 21, 2007

எங்கே சென்றீர்?

misty mountain


லீ போ என்ற சீனத்துறவி எழுதிய கவிதையின் தமிழாக்கம்.

தன் ஜென் குருவைத் தேடிப்போகையில், அவரை அவர் வீட்டில் காணாமல் திரும்பும்போது:

அந்த நீரோடையின் சலசலப்போடு
நாய் ஒன்று குரைக்கும்
சப்தமும் கேட்கிறது.
மிகுதியான பனிமூட்டம் - ஆதலால்
புதிதாய் மலர்ந்த மலர்கள்
தெளிவாய்த் தெரியவில்லை.

அடர் காடுகளுக்கிடையே
மான்கள் பல தெரிகின்றன.
உச்சிவேளை நெருங்குகையில்
நீரேடையில் கோயில்மணிஓசை
ஏதும் நான் கேட்கவில்லை.

நீள காட்டு மூங்கில்கள்
நீல மேகங்களை
துண்டாடுகின்றன.
நீல சிகரங்களிலிருந்து
நீள நீர்வீழ்சிகள்
ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.

எங்கே சென்றீர் என்றியம்ப
என்னால் இயலாது.
மனமுடைந்து - இரண்டு பைன்
மரங்களுக்கிடையே
சாய்ந்து கொள்கிறேன் -
மூன்றாவதாக.

7 comments:

  1. அருமை ஜீவா...நீங்கள் மொழிப்பெயர்த்ததா?

    ReplyDelete
  2. ஆம், ஆனால் - ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து...

    வருகைக்கு நன்றி ப்ரியன்!.

    ReplyDelete
  3. எங்கே சென்றீர் என்றியம்ப
    என்னால் இயலாது.
    மனமுடைந்து - இரண்டு பைன்
    மரங்களுக்கிடையே
    சாய்ந்து கொள்கிறேன் -
    மூன்றாவதாக.


    Very Nice.

    ReplyDelete
  4. எங்கே சென்றீர் என்றியம்ப
    என்னால் இயலாது.
    மனமுடைந்து - இரண்டு பைன்
    மரங்களுக்கிடையே
    சாய்ந்து கொள்கிறேன் -
    மூன்றாவதாக.


    - Very Nice ines:)

    ReplyDelete
  5. ஆமாம், ராம் சார், அந்த வரிகளுக்காகவே - நான் இந்த கவிதையைத் தேர்ந்தெடுத்தேன்.

    மேலும் இதுபோன்ற கவிதைகளில், நிகழ்கால அனுபவ உணர்வு, நிகழ்காலத்தில் பேசப்படுவது சிறப்பாக கருதுகிறேன்.

    ReplyDelete
  6. உங்கள் மறுமொழிக்கு நன்றி ஜீவா.உங்கள் தமிழாக்க கவிதை அருமை.நன்றி

    ReplyDelete
  7. வருக திருக்குமரன்!

    ReplyDelete