Sunday, January 07, 2007

சந்தன சர்சித நீல களேபர...

radheshyam07.jpg
சந்தன சர்சித நீல களேபர பீத வசன வனமாலி

கேலி சலன்மணி குண்டல மண்டித கண்டயுகஸ்லித ஸாலி

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே

பீன பயோதர பார பரேண ஹரிம் பரிர்ரபய சராகம்

கோப விதுர் அனுகாயதி காசிதுண்சித பஞ்சம ராகம்

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே

காபி விலாசவி லோல விலோசன கேளன ஜனித மனோஜம்

தியாயதி முக்தவ பூரவிபாகம் மது சூதன வதன சரோஜம்

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே

.....

.....

இஷ்யதி காமபி சும்பதி காமபி ரமயதி கமாபிராம

பஷ்யதி சஸ்மித சாருதராம் அபராமனு கஸ்யதிராம

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே

ஸ்ரீஜெயதேவ பணிதம் இதம் அத்புத சேகவ கேளி ரஹஸ்யம்

பிருந்தாவன விபினே லலிதம் விதானோது சுபானி யசஸ்யம்

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே


இது ஜெயதேவர் எனப்பெயர் பெற்ற ஞானியின் சமஸ்கிருத படைப்பான 'கீத கோவிந்தம்' - அதிலிருத்து நான்காவது பாடல். 24 பாடல்கள் கொண்ட இந்த இசைப்படைப்பில் ஒவ்வொரு பாடலும் 8 சரணங்களை கொண்டிருக்கும். அதனால் இவற்றிற்கு அஷ்டபதி என்று பெயர்.

ஜெயதேவரின் பாடல்களை கேட்ட சோழ மன்னன் (அப்போது கலிங்கமும் சோழ சாம்ராஜியத்தின் ஒரு பகுதி), தான் சிவ பக்தனாயிருந்தும், கண்ணன் பாடல்களை கேட்டு வைணவத்தின்பால் ஈர்ப்பு கொண்டானாம்.

கண்ணனை வர்ணிக்கும் இந்த அஷ்டபதியை கேட்டால் மயங்காதவர் யாருளரோ?
இதில் ராதை தன் தோழியுடன் உரையாடுவதாக அமைந்துள்ளது.

இதை கர்நாடக சங்கீதப்பாடலாக பாடியும் கேட்டிருக்கிறேன்.
பரதமாய் இந்த பாடல் அரங்கேறியபோது, நாட்டியமாடியவர் தன் பரதபாவத்தில் இந்த அஷ்டபதியின் அத்தனை ரசங்களையும் குன்றிடை விளக்காய் காட்டியதில் அதன் பொருள் யாவும் உணர்ந்தேன்.

பொருள்:

சந்தன சர்சித நீல களேபர பீத வசன வனமாலி:
சந்தனம் அணிந்த, நீல நிற வண்ணா, பட்டாடை உடுத்தி, துளசியும் மலர்களையும் அணிந்தவனே!

கேலி சலன்மணி குண்டல மண்டித கண்டயுகஸ்லித ஸாலி:
உன் காதில் ஆடும் குண்டலத்தின் பட்டொளி, உன் கன்னத்தில் மின்னுகிறதே!

பீன பயோதர பார பரேண ஹரிம் பரிர்ரபய சராகம்
கோப விதுர் அனுகாயதி காசிதுண்சித பஞ்சம ராகம்

சகியே, அங்கே பார், கோபியரில் ஒருவர் கண்ணனை அணைத்துக் கொண்டிருப்பதைப்பார். கண்ணன் ஐந்தாம் ராகத்தில் பாடுவதைக் கேள். அதைக்கேட்டு, அந்த பேதைக் கோபியும் அதுபோலவே பாடுவதைக்கேள்!

காபி விலாசவி லோல விலோசன கேளன ஜனித மனோஜம்:
அவன் அசைந்தாடும் பெரு வழிகள் காந்தமாய் கோபியரை கவர்ந்திழுக்குதே!

தியாயதி முக்தவ பூரவிபாகம் மது சூதன வதன சரோஜம்:
தாமரை முகம் கொண்ட மதுசூதனனின் அழகால் கோபியரும் அவனைக் கண்டு லயிக்கின்றனரே!

ஹரிவிஹமுக்த்தவ தூணிகரே விலாசினி விலஸ்பதி கேளிபரே:
சாதாரண கோபியர்கள் கண்ணனை கவர்ந்திழுக்கும் கலையேதும் அறியார். அவர்களிடம் இருந்ததெல்லாம் சாதாரண அன்புதான். அந்த அன்பால் கண்ணனை அடைவதே ஒவ்வொருவரின் நோக்கம்.
கண்ணனை சுற்றி கோலாட்டமிடும் கோபியர் ஒவ்வொருவருக்கும், அவனே அவர்களின் உடமையாய் தெரிகிறானே!

இஷ்யதி காமபி சும்பதி காமபி ரம்யதி கமாபிராம
பஷ்யதி சஸ்மித சாருதராம் அபராமனு கஸ்யதிராம

கோபியரில் ஒருவர் கண்ணன் தனக்கு முத்தமிடுவதாக கொள்கின்றனர். இன்னொருவரோ கண்ணனை தங்கள் மார்பகத்தில் காண்கின்றனர். இன்னொருவரோ அவன் அழகு முழுதும் கண்டு இன்புறுகின்றார்.

இப்படி கோபியரில் ஒவ்வொருவரும் அவனை அடைய முயல்கின்றனர். ஒவ்வொருவரும் அதில் வெற்றியும் பெருகின்றனர். ஒவ்வொருவரையும் மகிழ வைக்கும் அவன் பெருந்தன்மை தான் என்னே!

ஸ்ரீஜெயதேவ பணிதம் இதம் அத்புத சேகவ கேளி ரஹஸ்யம்
பிருந்தாவன விபினே லலிதம் விதானோது சுபானி யசஸ்யம்


இவ்வாறாக ஜெயதேவர், இந்த பாடலை முடிக்கிறார். இதோ இந்த பாடலில் பாருங்கள் கேசவனின் அற்புத லீலைகளை!. எப்படி ஒரு கண்ணன், பல நூறு கண்ணன்களாக மாறி ஒவ்வொரு கோபியருக்கும் 'அவர்களுக்கு மட்டுமே உரித்தானவன் கண்ணன்' என்று நினைக்கும்படி செய்கிறான்!. அவரவர் மன ஆசைகளை தீர்ப்பவன் அல்லவா அந்த மாயன்!

1956 இல் வெளிவந்த தெலு(ங்)கு படம் 'தெனாலி ராமகிருஷ்ணா' வில் இந்த பாடலை P.சுசீலா பாடியிருக்கிறார்!
இந்த பாடலின் பரத விளக்கம் ஜப்பானிய மொழியில். அதன் ஆங்கில மொழியாக்கம்.

2 comments:

  1. ஜீவா மிக நல்ல காரியம் செய்து இருக்கிறீர்கள்.எனக்கு மிக நாட்களாக ஆசை அஷ்டபதியின் பொருளைக் கேட்கவேண்டும் என்று.மீதி பாடல் களையும் போடுங்கள்

    ReplyDelete
  2. மகிழ்சி தி.ரா.ச சார்.
    இந்த பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதும், இந்த பாடலின் பொருளை முழுதும் படித்து பதிய வேண்டும் என்பது அவா. இப்போதுதான் முடிந்தது.
    இந்த பாடல்தான் அதிக பிரபலமான அஷ்டபதி என நினைக்கிறேன். மற்றவற்றை இனிமேல்தான் பொருள் உணர படிக்க வேண்டும்.

    ReplyDelete