Wednesday, April 06, 2005

iTunes

ஆப்பிள் நிறுவனத்தின் iTunes மென்பொருள், உங்கள் mp3 க்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுத்துக்கொள்ள உதவுகிறது.
மேலும், பாடல் பற்றிய தகவல்களை நேரடியாக யுனிகோடில் செலுத்திக்கொள்ளவும் முடியும்.
இதன் பயன்பாடுகள்:
1. பாடல்களை தொகுத்துக்கொள்ளுதல். இந்த தொகுதி வழியாக, உங்கள் கோப்புத் தொகுதிகளையும் (folder) மாற்றி அமைக்க முடியும்.
2. உங்களுக்கேற்ற கலவையை ஏற்படுத்தி, அவற்றை மட்டும் பாடச்செய்தல்
3. mp3 ID Tag களை யுனிகோடில் மாற்றி அமைக்க முடியும்.
4. CD க்களை கொளுத்திக்கொள்ளவும் முடியும்.
5. CD யின் அட்டையை ப்ரிண்ட் செய்யும்போதும், இதே யுனிகோடில் இருக்கிறது.

ஆக பாடல்களை பாடச்செய்யவும், தொகுத்துக்கொள்ளவும், IDTag களை மாற்றவும், CD யில் கொளுத்தவும் இந்த ஒரு மென்பொருள் போதும் உங்களுக்கு.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இது இலவசம்.

ஆப்பிள் தளத்திலிருந்து நீங்கள் iTunes-ஐ இறக்கிக்கொள்ளலாம்.


iTunes Posted by Hello

14 comments:

  1. நன்றி ஜீவா! 'CD burning ் என்பதை அப்படியே 'CD கொளுத்துதல்' என்று மொழிபெயர்ப்பது அவ்வளவு சரியாக இருக்காது. 'குறுந்தகட்டில் எழுதிக் கொள்ளலாம்' என்பதே எளிமையாகவும் புரியும்படியும் இருக்கிறது.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி சுதர்ஸன்.
    'கொளுத்துதல்' என்ற சொல்லை நகைச்சுவைக்காக மட்டுமெ நான் பயன்படுத்தினேன்.
    மேலும் 'குறுந்தகடில் எழுதுதல்' என்பது 'CD burning' ஐ முழுமையாக குறிப்பதாக எனக்கு படவில்லை.
    எளிமையை விட, சரியான பொருளை தரவேண்டும் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்.
    இன்றைக்கு 'குறுந்தகடு' என்று எளிதாக சொல்லி விடலாம். உதாரணத்திற்கு நாளைக்கே தமிழன் ஒருவன் சிறிய அலுமினியம் தகடு கண்டுபிடித்தால் அதற்கென்ன பெயர் வைப்பான்?

    ReplyDelete
  3. //'கொளுத்துதல்' என்ற சொல்லை நகைச்சுவைக்காக மட்டுமெ நான் பயன்படுத்தினேன். //

    அப்படியானால் :-) ;-) மாதிரி முகக்குறி போடுங்கள், இல்லையானால் தேவையற்ற குழப்பம் வரும்.

    இதில் நிறைய விஷயம் இருக்கிறது, ஜீவா.

    1. 'பர்னிங்' என்பதற்கு 'எரித்தல், கொளுத்துதல், கருக்குதல்' போன்ற, சற்று வேற்றுமை உள்ள பல சொற்கள் தமிழில் இருக்கும். ஏன் 'burn' என்பதற்கு ஆங்கிலத்திலேயே தீயுடன் சம்பந்தப்படாத பொருளும் உண்டே: அகராதி பார்த்தால்:

    burn v.tr.

    To cause to undergo combustion.
    To destroy with fire: burned the trash; burn a house down.
    To consume (fuel or energy, for example): burned all the wood that winter.
    Physics. To cause to undergo nuclear fission or fusion.
    To damage or injure by fire, heat, radiation, electricity, or a caustic agent: burned the toast; burned my skin with the acid.

    To execute or kill with fire: burning heretics at the stake.
    To execute by electrocution.

    To make or produce by fire or heat: burn a hole in the rug.
    To dispel; dissipate: The sun burned off the fog.

    To use as a fuel: a furnace that burns coal.
    To metabolize (glucose, for example) in the body.
    To impart a sensation of intense heat to: The chili burned my mouth.

    To irritate or inflame, as by chafing or sunburn.
    To let (oneself or a part of one's body) become sunburned.
    To brand (an animal).
    To engrave or make indelible by as or as if by burning: The image of the accident was burned into my memory.
    To harden or impart a finish to by subjecting to intense heat; fire: burn clay pots in a kiln.
    To make angry: That remark really burns me.

    To defeat in a contest, especially by a narrow margin.
    Sports. To outplay or score on (an opponent), especially through quick or deceptive movement.
    To inflict harm or hardship on; hurt: “Huge loan losses have burned banks in recent years” (Christian Science Monitor).
    To swindle or deceive; cheat: We really got burned on the used car we bought.
    To record data on (a compact disk, for example).
    ---------------
    burn v.intr.

    To undergo combustion.
    To admit of burning: Wood burns easily.
    To consume fuel: a rocket stage designed to burn for three minutes before being jettisoned.
    Physics. To undergo nuclear fission or fusion.

    To emit heat or light by or as if by fire: campfires burning in the dark; the sun burning brightly in the sky.
    To become dissipated or to be dispelled by or as if by heat: The fog burned off as the sun came up.
    To give off light; shine: a light burning over the door.
    To be destroyed, injured, damaged, or changed by or as if by fire: a house that burned to the ground; eggs that burned and stuck to the pan.

    To be very hot; bake: a desert burning under the midday sun.
    To feel or look hot: a child burning with fever.
    To impart a sensation of heat: a liniment that burns when first applied.

    To become irritated or painful, as by chafing or inflammation: eyes burning from the smoke.
    To become sunburned or windburned.
    To be consumed with strong emotion, especially:
    To be or become angry: an insult that really made me burn.
    To be very eager: was burning with ambition.
    To penetrate by or as if by intense heat or flames: enemy ground radar burning through the fighters' electronic jammers; a look that burned into them.
    To be engraved by or as if by burning: shame burning in my heart.

    To suffer punishment or death by or as if by fire: souls burning in hell.
    To be electrocuted.
    ---------

    இத்தனை பொருள் இருக்கும்போது CD burning என்றவுடன் எது நம்மை To record data on (a compact disk, for example). என்பதை மட்டும் எடுத்துக்கொள்ளத் தூண்டுகிறது? அதுதான் சூழல் மற்றும் வழக்கம். context and experience. அது போல 'பதித்தல்' (recording) அல்லது 'எழுதுதல்' (writing) என்று சொல்ல ஆரம்பித்தால் அதுவே நம் வழக்கமானால் அது நிலைக்கும், பலருக்கும் புரியும்.

    //மேலும் 'குறுந்தகடில் எழுதுதல்' என்பது 'CD burning' ஐ முழுமையாக குறிப்பதாக எனக்கு படவில்லை.//

    ஆங்கிலத்திலேயே 'burning' கொச்சையாகத்தான், பேச்சுவழக்கில்தான் பயனாகிறது. பெரும்பாலான எழுத்து வழக்கில் 'writing' (CD-Writer, CD read-write) என்பதே பயன்படுத்தப்படுகிறது. நாம் ஏன் 'எழுதுதல்' என்று சொல்லக்கூடாது என்று விளக்குவீர்களா?

    //எளிமையை விட, சரியான பொருளை தரவேண்டும் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்.
    இன்றைக்கு 'குறுந்தகடு' என்று எளிதாக சொல்லி விடலாம். உதாரணத்திற்கு நாளைக்கே தமிழன் ஒருவன் சிறிய அலுமினியம் தகடு கண்டுபிடித்தால் அதற்கென்ன பெயர் வைப்பான்?//

    CD என்பதற்கு பலரும் இப்போது குறுவட்டு/குறுந்தகடு இரண்டையும் பயன்படுத்துகிறார்கள். நாளடைவில் இதில் ஒன்று நிலைக்கலாம். ஏன் ஒரு ஆங்கிலேயனோ அமெரிக்கனோ அதே சிறிய அலுமினியம் தகடு கண்டுபிடித்தால் அது 'compact' 'disc' ஆக இருந்தும் என்ன செய்வானோ அதையே தமிழனும் செய்துவிட்டுப்போகிறான்.

    நல்ல தமிழில் ஆர்வமாக நிறைய எழுதுகிறீர்கள். என் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும். ஆனாலும் ஏனோ ஒரு அவநம்பிக்கை தொனிக்கிறது உங்கள் இந்த மறுமொழியில், எனவே தான் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    அன்புடன்,
    -காசி

    ReplyDelete
  4. காசி,

    ஆக, ஆங்கிலத்தில் அவர்கள் தவறாக பெயர் வைத்தார்கள் என்றாலும், அதை அப்படியே மொழி பெயர்த்துக்கொள்வோம் என்று சொல்லும்போது, 'கொளுத்துதல்' என்று மட்டும் ஏன் சொல்லக்கூடாது?
    ஆங்கிலத்தில் எண்ணற்ற வினைச்சொற்கள், இடத்திற்கு ஏற்ப பொருள் தரும். தமிழிலும் அப்படி உண்டு. உடனடியாக நினைவுக்கு வருவது - 'வீடு'.
    சிடி கொளுத்தினேன் என்று சொல்லும்போது குழப்பம் ஏதும் வருவதாக எனக்கு தெரியவில்லை. சிடியில் எழுதினேன் என்று சொல்லும் போது, அதில் மற்ற காலங்களுக்கான (நிகழ், எதிர்) சாத்தியமும் உண்டு. ஆனால் CD-R இல் ஒருமுறைதான் எழுத முடியும். இந்த இடத்தில் கொளுத்தி முடிச்சாச்சுப்பா, இனிமே மறுபடியும் இதே சிடியை கொளுத்தமுடியாதப்பா, என்ற பொருள் தர 'கொளுத்துதல்' இடமளிக்கிறது!

    மேலும் 'சிடி burner' என்னும் சொல் வெறும் வழக்குச்சொல் அல்ல ஆங்கிலத்தில்;
    அகராதி:
    a device that can record data to a compact disc using a laser to etch the data into the disc

    http://dictionary.reference.com/search?q=cd+burner

    லேசர் கதிர்கள் கொளுத்துதல் போன்ற வேலையை செய்கிறது.

    மேலும்,'விசிடி' என்னும் சொல்லும் வழக்கில் உள்ளது. 'சிடி' என்னும் சொல் குறுந்தகடு என்று 'தகடு தகடு' செய்வதைக் காட்டிலும் பொருள் தருவதாகத் தெரிகிறது;-).
    'சிடி' போன்ற ஆங்கில மூல பெயர்சொற்களை தமிழில் பெயர்க்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. சரியான பொருள் தராத மொழிபெயர்ப்பை விட அப்படியே ஆங்கிலச்சொல்லை பயன்படுத்துவதால், தமிழ் பொருளற்றுப் போவதை தவிர்க்கலாமே. இதுவே என் ஆதங்கம், அவநம்பிக்கையல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி காசி.
    அப்போதுதானே நானும் கற்றுக்கொள்ள முடியும்!
    பின்னூட்டம் என்னும் சொல்லே நான் வலைப்பதிவு செய்யத்தொடங்கியபின் கற்றுக்கொண்டதுதான். சரியான பொருள்தரும் புதிய சொல் எதையும் ஏற்றுக்கொள்வதில் மறுப்பில்லை.

    ReplyDelete
  5. முன்னூட்டத்தில் இல்லாத பல விஷயங்களும் விவாதங்களும் பின்னூட்டத்தில் உள்ளன. சில சமயங்களில் ஆங்கில மொழியைப் போல் தமிழ் மொழியும் ஏன் பிற மொழிகளின் வார்த்தைகளை அப்படியே வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றும், உண்மையில் சொல்லப் போனால் ஜா, ஹா, ஷா, ச்ரி போன்றவவை தமிழ் எழுத்துக்களே இல்லாத போதும், பிற மொழி உச்சரிப்பிற்கு ஏற்றவாறு தேவைக் கேற்ப தமிழில் புது எழுத்துக்களே உருவாக்கப் பட்டது.

    ஆனால், இன்றைய நாகரிக தமிழோ, சுத்தத் தமிழ் என்ற பெயரில் நஷ்டம், நட்டம் ஆகிறது, கஷ்டம், கட்டம் ஆகிறது இதை எங்கே சொல்லி அழுவது. :-)

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. கங்கா கஷ்டம் பற்றித் தெரியாது. ஆனால் ஈழத்தமிழர் எப்போதும் நட்டம் என்றுதான் பாவிப்பார்கள். நஷ்டம் பின்புதான் வந்து ஒட்டிக்கொண்டது.

    ReplyDelete
  8. //ஆக, ஆங்கிலத்தில் அவர்கள் தவறாக பெயர் வைத்தார்கள் என்றாலும், //

    யார் இப்படிச் சொன்னார்கள் என்று எனக்குப் புரியவில்லை...

    //அதை அப்படியே மொழி பெயர்த்துக்கொள்வோம் என்று சொல்லும்போது, //

    இதுவுமே...

    //'கொளுத்துதல்' என்று மட்டும் ஏன் சொல்லக்கூடாது?//

    சமைத்தலுக்கும் வேகவைத்தலுக்கும் என்ன வேறுபாடு?

    வேகவைத்தல் என்பது நுணுக்கமான ஒரு செயல். வறுத்தல், தாளித்தல் எதுவுமே சமைத்தலில் அடங்கும். அதுப்போலவே இங்கு writing & burning. பொதுப்படையான சொல்லாட்சியால் நல்லதும் உண்டு தீமையும் உண்டு. இடம், பொருள் அறிந்து பொதுப்படையான சொல்லோ, நுணுக்கமான சொல்லோ கையாளலாம்.

    அப்படி நுணுக்கமான சொல் வேண்டினால், இங்கு burningக்குக்கு 'கொளுத்துத'லைவிட 'கருக்குதல்' பொருந்தலாம். கொளுத்துதல் எரிந்து சாம்பலாகிப் போதல். To cause to undergo combustion என்று முதலில் ஒரு பொருள் தரப்பட்டிருக்கிறதே அந்த பொருள் வரும் சொல்லே கொளுத்துதல். 'கருக்குதல்' அப்படி சாம்பலாக்காமல் ஒரு பொருளை நிலைமாற்றும் (பெரும்பாலும் கரிக்கட்டையாக).

    //சிடி கொளுத்தினேன் என்று சொல்லும்போது குழப்பம் ஏதும் வருவதாக எனக்கு தெரியவில்லை.//

    கொளுத்தவேண்டிய சிடிக்கள் சில சமயம் கண்ணில் படுவதுண்டு, இருந்தாலும் மனம் வருவதில்லை;-) நான் சொல்லவரும் கொளுத்துதல் என்னவென்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    //சிடியில் எழுதினேன் என்று சொல்லும் போது, அதில் மற்ற காலங்களுக்கான (நிகழ், எதிர்) சாத்தியமும் உண்டு. ஆனால் CD-R இல் ஒருமுறைதான் எழுத முடியும். இந்த இடத்தில் கொளுத்தி முடிச்சாச்சுப்பா, இனிமே மறுபடியும் இதே சிடியை கொளுத்தமுடியாதப்பா, என்ற பொருள் தர 'கொளுத்துதல்' இடமளிக்கிறது!//

    'அதைக் கருக்கியாச்சப்பா, இனிக் கருக்கமுடியாதப்பா'ன்னு சொல்லலாம், கொளுத்துவதைவிட நன்றாகவே பொருள்தரலாம். நான் தமிழறிஞனல்ல, மேலும் தமிழறிந்தவர் இன்னும் சாத்தியங்களை ஆராயலாம்.

    //மேலும் 'சிடி burner' என்னும் சொல் வெறும் வழக்குச்சொல் அல்ல ஆங்கிலத்தில்;
    அகராதி:
    a device that can record data to a compact disc using a laser to etch the data into the disc

    http://dictionary.reference.com/search?q=cd+burner//

    வழக்குச் சொல் என்பது அகராதியில் இல்லாதது என்று நான் சொல்லவில்லை. பெரும்பாலும்manuals/specification/orders போன்ற இடங்களில் writer தான் பயன்படுத்தப்படுகிறது என்ற பொருளில் சொன்னேன். ஆனால் அதனால் மட்டுமே வைத்து 'எழுதுதலை' சரியென்று எண்ணவில்லை. அதன் கருத்தை உள்வாங்கிக்கொண்டதில் நான் புரிந்துகொண்டதை வைத்து சொன்னது அது.

    //லேசர் கதிர்கள் கொளுத்துதல் போன்ற வேலையை செய்கிறது.//
    செய்ய முடியும், ஆனால் இங்கே கொளுத்தவில்லை.

    //மேலும்,'விசிடி' என்னும் சொல்லும் வழக்கில் உள்ளது. 'சிடி' என்னும் சொல் குறுந்தகடு என்று 'தகடு தகடு' செய்வதைக் காட்டிலும் பொருள் தருவதாகத் தெரிகிறது;-).//

    இது வேறு தளத்தின் விவாதம். என் ஆதரவும் இதற்கே. ஈரெழுத்து மூன்றெழுத்து சுருக்கங்களை, ஒலிப்பியல் சிக்கல் இல்லாதவரை (www மூன்றெழுத்தை ஒலித்தால் டபுள்யூ டபுள்யூ டபுள்யூ = 9 துண்டுகள்-syllables- வரும், ஆகவே அவ்வளவு விரும்பத்தக்கதல்ல, ஆனாலும் தவிர்க்கமுடியாது, தவிர்க்க முடிந்த இடங்களில் இம்மாதியான ஒலியைத்தரும் சுருக்கங்களை சற்று மாற்றலாம், 'யூஆரெல்' என்பதை 'உரல் என்பதுபோல) அப்படியே எடுத்துக்கொள்வதுதான் சரி. ஆகவே விசிடி, சிடி என்பதை அப்படியே பயன்படுத்தலாம். இதேபோல wiki-விக்கி...போன்றவையும் சரியே, இதையெல்லாம் மொழிபெயர்த்தால் முழிபெயர்ந்துவிடும்:-D

    //'சிடி' போன்ற ஆங்கில மூல பெயர்சொற்களை தமிழில் பெயர்க்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து.//
    ஆனாலும் 'compact disc' க்குக் 'குறுவட்டு' அல்லது 'குறுந்தகடு' சரிதானே;-)

    // சரியான பொருள் தராத மொழிபெயர்ப்பை விட அப்படியே ஆங்கிலச்சொல்லை பயன்படுத்துவதால், தமிழ் பொருளற்றுப் போவதை தவிர்க்கலாமே. இதுவே என் ஆதங்கம், அவநம்பிக்கையல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

    புரிகிறது, நன்றி.

    ReplyDelete
  9. //ஆனால், இன்றைய நாகரிக தமிழோ, சுத்தத் தமிழ் என்ற பெயரில் நஷ்டம், நட்டம் ஆகிறது, கஷ்டம், கட்டம் ஆகிறது இதை எங்கே சொல்லி அழுவது. :-)//

    கறுப்பி சொன்னதே தான் தமிழ்நாட்டிலும் ஊர்ப்புறங்களில். 'லாப நட்டக் கணக்கு' என்றுதான் பேசுவார்கள்.

    தமிழறிஞர்களுக்கு 'இலாப நட்டம்' படித்த நாக்குக்களுக்கு 'லாப நஷடம்'!

    பாமரனுக்கு என்றுமே 'லாப நட்டம்'தான்:-)

    ReplyDelete
  10. இந்த burning என்பதன் நேரடி அர்த்த சொல்லுத்தான் ஜோ;மானிய மொழியிலும் பாவிக்கப்படுகிறது.

    ஈழத்து புலம் பெயா; தமிழர்கள் நல்லதமிழில் பதிதல் என்றும் பேச்சுத்தமிழில் குத்துதல் என்றும்(சீல் குத்துதல் என்ற தொடரிலிருந்து வந்திருக்கலாம் என எண்ணுகிறேன்)சொல்வார்கள்

    ReplyDelete
  11. அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி.

    //ஆகவே விசிடி, சிடி என்பதை அப்படியே பயன்படுத்தலாம். இதேபோல wiki-விக்கி...போன்றவையும் சரியே, இதையெல்லாம் மொழிபெயர்த்தால் முழிபெயர்ந்துவிடும்:-D//
    அதுவே என் கருத்தும். ஆனால் பல இடங்களில் இன்னமும் தேவையில்லாமல் பெயர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றைப்பற்றி இன்னொரு சமயம் விவாதிப்போம்!

    'நட்டம் பற்றி'
    நஷ்டம்/நட்டம் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள். கேட்பவர்களுக்கு, புரியும்படி, சொல்வதுதான் மொழியின் நோக்கம். ஒவ்வொன்றும் பார்ப்பவர் கண்களுக்கு ஏற்ப அழகு, தூயதமிழ் உட்பட. மொழியின் இயல்பே மாறிக்கொண்டே இருப்பது தான். மொழிக்கும் நதிமோலம், ரிஷிமூலம் பார்க்கத் தேவையில்லை. என்னைப் பொருத்தவரை, நான் சொல்லவந்த விஷயம் சரியாக போய்ச்சேர்ந்தால் அதுவே அழகு.

    ReplyDelete
  12. 'interface' என்பது 'இடைமுகம்' என்று அப்படியே மொழிபெயர்க்கப்பட்டது போல ஒரு புதிய மொழிபெயர்ப்பு உருவாகிறது போலும் என்று பயந்துதான் நான் அப்படி எழுதினேன். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லியிருந்தால் காசி சொல்வது போல ;-) குறியை போட்டிருக்கலாம்.
    //என்னைப் பொருத்தவரை, நான் சொல்லவந்த விஷயம் சரியாக போய்ச்சேர்ந்தால் அதுவே அழகு//
    உங்கள் நகைச்சுவை எங்களுக்கு புரியாமல் போய்விட்டது பார்த்தீர்களா? ;-)

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையைப் போட்டு எழுதினால் படிப்பவருக்கு குழப்பம்தான் மிஞ்சும். கலைச்சொற்களைக் கையாளும்போது சற்று கவனம் தேவைப்படுகிறது.

    மற்றபடி, CDயை குறுந்தகடு என்று பரவலாக சொல்வதாலேயே நானும் எற்றுக் கொண்டேனே தவிர எனக்கும் அதில் சில குழப்பங்கள் உண்டு. Mini-CD, DVD, BluRay் Disc எல்லாமே குறுந்தகடுகள் தானே, CD-யை எப்படி இனம் பிரிப்பதூ இதில் என்று.

    ReplyDelete
  13. இலங்கையில் இதை 'இறுவட்டு' என்று பாவிக்கிறார்கள். compact என்பதை இறுக்கப்பட்ட என்ற அர்த்தத்தில் போலும்.

    ReplyDelete
  14. முன்னிட்ட பின்னூட்டம் வராமலே போய்விட்டது. அதனால் மறுபடியும் இடுகிறேன்.

    சுதர்ஸன்,
    நான் முகக்குறியிட்டுருந்தால் இந்த விவாதமே எழுந்திருக்காது;-) அதனால், இதுவும் நல்லதே.
    மேலும், 'கொளுத்துதல்' என்ற சொல் மேலும் நுண்ணிய சொல் தேவைப்பட்டதாலே பயன்படுத்தினேன். காசி அண்ணன் 'கருக்குதல்' என்ற சொல்லை முன் வைத்துள்ளார். அதுவும் நல்ல தேர்வே.

    வசந்தன்,
    'இறுவட்டு' ட்டின் விளக்கம் நீங்கள் சொன்னபின்தான் புரிகிறது! ஆனால் இதுவும் பொதுவான சொல்லே. சுதர்ஸன் கூறுவதுபோல் இது எந்த மாதிரியான தட்டு, சிடியா, டிவிடியா, விசிடியா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவற்றை அப்படியே ஆங்கில குறுக்கெழுத்து வடிவில் எழுதலாம், நீள் வடிவ சொற்களை தவிர்க்கலாம் என்பதே என் கருத்து.

    மேலும் Audio CD க்கு இசைத்தட்டு என வழங்குகிறார்கள். நல்லது. இறு/குறு குழப்பமெல்லாம் இதில் இல்லை. வேண்ட்மென்றால் அந்த காலத்து க்ராமஃபோன் இசைத்தட்டுக்களை 'வினையல் இசைத்தட்டு' என வழங்கலாம்.

    நன்றி.

    ReplyDelete