Monday, April 04, 2005

மும்பை எக்ஸ்பிரஸ் - பாடல்கள் - முன்னோட்டம்

மும்பை எக்ஸ்பிரஸ் பாடல்கள்களை ஒரு முறை கேட்டவுடன் செய்யும் பதிவு இது.

பூ பூத்தது என்று ஒரு மெலடி ட்யூட் பாடல் - ஆண் பாடகர் தெரியவில்லை. பெண் பாடகர் ஷ்ரேயா போலத்தெரிகிறது. intelude களில் ட்ரம்ஸ் மற்றும் பியானோ அசத்தலாகவும் நீளமாகவும் இருந்தது.

கமல் இரண்டு பாடல்களை பாடுகிறார் - அதில் ஒன்று ட்ரெயினில் பாடுவது போலும்.
படத்தோடு சேர்ந்து பார்க்க மட்டுமே இந்த பாடல் என நினக்கிறென். அன்பே சிவம் 'எலே மச்சி' போல ஆரம்பித்தாலும், பாடலில் intelude கள் நீளமாக இருக்கிறது.

இன்னொன்று 'குரங்கு கையில் மாலையை கொடுத்தது யாரு' என்று பல்லவி. இதிலும் நிறைய Rock & Roll Drums. பின்னணியில் நிறைய பியானோ. (பூ பூத்தது போலவே)
இவையெல்லாம் அக்னி நட்சத்திரத்தை ஞாபகம் செய்கிறது.

வந்தேமாதரம் என்று குழந்தைகள் பாடும் பாடலும் உள்ளது.

கமலும் இளையராஜாவும் இணைந்து எட்டாத உயரத்தையெல்லாம் தொட்டபின், இன்னும் செய்ய என்ன இருக்கிறது?
என்ன செய்திருக்கிறார்கள் இந்த பாடத்தில், பார்ப்போம்.

4 comments:

  1. ஜீவா இன்னும் பாடல்களை கேட்கவில்லை. ராகாவில் வந்திருந்தால் இன்று கேட்கிறேன்.

    ReplyDelete
  2. ராகாவில் இன்னமும் வரவில்லை, ஆனால், musicindiaonline.com இல் உள்ளது.

    ReplyDelete
  3. Anonymous10:50 PM

    உயர்தர (192 kpbs) mp3 வடிவில் http://www.swaasam.com/songs.html இணையத்தில் கிடைக்கிறது.

    அன்புடன்,
    சௌந்தர்.

    ReplyDelete
  4. 'பூ பூத்தது போலவே' பாடலைப்பாடி இருப்பது - சோனு நிகாம் மற்றும், ஷ்ரேயா கோஷல்.
    முதல் பாதியில் ஷ்ரேயா.
    அடுத்த பாதியில் சோனு நிகாம்.

    ReplyDelete