புலால் மறுப்பதற்கு ஐந்து காரணங்கள்:
1. அறம் / மறை காரணம்
புலால் உண்ணுதலை அறம் போதிக்கும் மறைகள் மறுக்கசொல்லுவதால்.
(வேதங்கள், திருக்குறள், திருமந்திரம், கீதை மற்றும் பல மறைகள்)
தன் ருசிக்காக மற்றொரு உயிரின் மாமிசத்தை உண்ணுதல் அறமாகாது.
2. வினைப்பயன் காரணம்
நாம் செய்யும் எல்லா செயல்களும், நம் உணவின் தேர்வு உட்பட வினையென்னும் விளைவாய் திரும்புகிறதென்பது. அந்த உயிரினங்களின் வதையானது ஊழ்வினையாய் திரும்பாமல் தவிர்க்க.
3. அறிவுத்தாகம் காரணம் (Supreme Conciousness)
உடலின் இரசாயனக்கூறுகளுக்கு நாம் உண்ணும் உணவே முதல். ஒருவருடைய அறிவு, உணர்வுகள், அனுபவ வினைகள் ஆகியவற்றுக்கும் அவர் உண்ணும் உணவுக்கும் தொடர்புண்டு. ஒருவர், உயர்ந்த அறிவு, சமாதானம், மகிழ்சி மற்றும் மற்ற உயிர்களிடம் கருணை கொண்டவராக இருக்கவேண்டும் என விரும்பினால், புலால் உண்ணுதல் அந்த விருப்பவத்திற்கு எதிர்வினையாகத்தான் அமையும். புலால் உண்ணுவதால், பெருங்கோபம், மன உளைச்சல், பொறாமை, சந்தேகம், இறப்பைப்பற்றிய அதீத பயம் போன்றவை அவர் உண்ணும் மாமிசத்தலேயே அவருக்கு ஏற்படக்கூடும். இன்றைய சிக்கல் மிகுந்த சமுதாய சூழ்நிலையில், மேற்சொன்ன தீக்குணங்கள் தோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காரணங்களை சொல்லலாம் என்பது வேறு விஷயம். ஆனால் அவற்றில் இதுவும் ஒன்று.
4. உடல் நலம் காரணம்
புலால் தவிர்த்த உணவு ஜீரணமானதற்கு எளிதென்றும், பலவிதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன என்றும் மருத்துவத்துறை கூறுகிறது. இன்றைய சூழ்நிலையில் மனித இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் பல்வேறு நோய்கள் புலால் தவிர்ப்பவர்களுக்கு உணவால் வரும் சாதகம் குறைவே. அவர்களிடம் நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகம்.
5. சுற்றுப்புற சூழல் காரணம்
இந்த உலகம் பெருந்துன்பத்தில் உழல்கிறது. தினந்தேறும் குறைந்துபோகும் உயிரினங்களால். மாமிசத்திற்காக உயிர்வதைப்படுவதை தவிர்ப்பதால் உயிரினங்கள் அழிவதையும், காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்ப்பதால், அதனால் அழிந்துபோகும் காடுகளை காப்பாற்றவும், ஏன் நீர், காற்று மாசுபடுவதை தவிர்க்கவும் கூட உதவும். இந்த ஒரு காரணத்திற்காகவே மாமிசம் உண்பதை நிறுத்தியவர்களும் உண்டு.
ராஜா சிம்மன் அவர்களுக்கு,
ReplyDeleteபுலால் தவிர்த்த உணவென்பது வெறும் காய்கறிகள் அல்ல.
ஐந்து வகை உணவுகள் இதில் அடங்கும்
1. முழு தானியங்கள்
2. காய்கறிகள்
3. பட்டாணி வகைகள்
4. பழங்கள்
5. பால், தயிர் வகைகள்
உடல் நலத்திற்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களும் சரிநிகர்சமானமான அளவில் இவற்றில் கிடைக்கிறது. இவற்றில் அடங்காத சத்தே இல்லை.
பனிப்பிரதேசத்தில் இருப்பவர்களுக்கும் இவையெல்லாம் இப்போது கிடைக்கிறது. அவர்களுக்கு இவற்றை எவ்வாறு சமையல் செய்து ருசிபட சாப்பிடுவதென்பது தெரியாததால், அங்கு அவ்வளவு பிரபலமில்லை. புலால் அற்ற உணவின் பெருமைகளை எடுத்துச்சொன்னால், தெரிந்துகொள்கிறார்கள். முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//புலால் உண்ணுவதால், பெருங்கோபம், மன உளைச்சல், பொறாமை, சந்தேகம், இறப்பைப்பற்றிய அதீத பயம் போன்றவை அவர் உண்ணும் மாமிசத்தாலேயே அவருக்கு ஏற்படக்கூடும்.//
ReplyDeleteஇதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க இன்றைக்கு இயலாமல் போகலாம். ஆனால் மெய்ஞானிகள் சொல்வதால், அதில் உண்மை இருக்க வேண்டும் என தோன்றுகிறது.
//(வேதங்கள், திருக்குறள், திருமந்திரம், கீதை மற்றும் பல மறைகள்)
ReplyDeleteதன் ருசிக்காக மற்றொரு உயிரின் மாமிசத்தை உண்ணுதல் அறமாகாது.//
\
ஜீவா,
வேதங்களிலிலும், கீதையிலும் புலால் மறுத்தல் இருப்பது பற்றி தரவுகள் தரமுடியுமா ?
உங்களின் இந்தப் பதிவு சிறப்பாக உள்ளது
ReplyDeleteபாராட்டுக்கள். நன்றி!
'புலால் மறுப்பு' அதிகாரத்தில் வள்ளுவர் பெருந்தகை சிறப்பாகச் சொலியிருக்கிறார்.பிற உயிர்கள் வணங்கும் என்கிறார்.
அதைச் சொன்னால் இன்று பலர் பிற உயிர்களுக்கு எப்படி வணங்கத் தெரியும்
என்று நக்கலடிப்பார்கள்!
அவர்களாகவே உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. இல்லையென்றால் நோ சான்ஸ்!
பதிவுகளைப் பற்றிய தொழில் நுட்ப உத்தி ஒன்றை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய ஈ-மெயில் முகவரியைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
SP.VR.SUBBIAH
URL: http://classroom2007.blogspot.com
email: classroom2007@gmail.com
கோவி, நீங்கள் கேட்டது:
ReplyDeleteOne who partakes of human flesh, the flesh of a horse or of another animal, and deprives others of milk by slaughtering cows, O King, if such a fiend does not desist by other means, then you should not hesitate to cut off his head.
Rig Veda Samhita 10.87.16
Protect both our species, two-legged and four-legged. Both food and water for their needs supply. May they with us increase in stature and strength. Save us from hurt all our days, O Powers!
Rig Veda Samhita 10.37.11
O vegetable, be succulent, wholesome, strengthening; and thus, body, be fully grown.
Rig Veda
Those noble souls who practice meditation and other yogic ways, who are ever careful about all beings, who protect all animals, are the ones who are actually serious about spiritual practices.
Atharva Veda Samhita 19.48.5
You must not use your God-given body for killing God's creatures, whether they are human, animal or whatever.
Yajur Veda Samhita 12.32
The ignoble ones who eat flesh, death's agents bind them fast and push them quick into the fiery jaws of hell (Naraka, lower consciousness).
Tirumantiram
In waves of ahimsa, all living beings cease their enmity in the presence of such a person.
Yoga Sutras 2.35
Ahimsa is not causing pain to any living being at any time through the actions of one's mind, speech or body.
Sandilya Upanishad
Having well considered the origin of flesh and the cruelty of fettering and slaying of corporeal beings, let one entirely abstain from eating flesh.
Manu Samhita
The purchaser of flesh performs himsa (violence) by his wealth; he who eats flesh does so by enjoying its taste; the killer does himsa by actually tying and killing the animal. Thus, there are three forms of killing: he who brings flesh or sends for it, he who cuts off the limbs of an animal, and he who purchases, sells or cooks flesh and eats it—all of these are to be considered meat-eaters.
Mahabharata, Anu. 115.40
He who desires to augment his own flesh by eating the flesh of other creatures lives in misery in whatever species he may take his birth.
Mahabharata, Anu. 115.47
Those high-souled persons who desire beauty, faultlessness of limbs, long life, understanding, mental and physical strength and memory should abstain from acts of injury.
Mahabharata 18.115.8
How can he practice true compassion who eats the flesh of an animal to fatten his own flesh?
Tirukural Verse 251
Riches cannot be found in the hands of the thriftless. Nor can compassion be found in the hearts of those who eat meat.
Tirukural Verse 252
Goodness is never one with the minds of these two: one who wields a weapon and one who feasts on a creature's flesh.
Tirukural Verse 253
If you ask, "What is kindness and what is unkind?" it is not killing and killing. Thus, eating flesh is never virtuous.
Tirukural Verse 254
Life is perpetuated by not eating meat. The clenched jaws of hell hold those who do.
Tirukural Verse 255
If the world did not purchase and consume meat, there would be none to slaughter and offer meat for sale.
Tirukural Verse 256
When a man realizes that meat is the butchered flesh of another creature, he must abstain from eating it.
Tirukural Verse 257
Greater than a thousand ghee offerings consumed in sacrificial fires is to not sacrifice and consume any living creature.
Tirukural Verse 259
All that lives will press palms together in prayerful adoration of those who refuse to slaughter and savor meat.
புலால் உண்பது
ReplyDelete1. செரிமானத்திற்கு கடினமானது-ஆனால் நாம் உண்ணும் எல்லாவகையான சைவ உணவுகளும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை அல்ல. செரிப்பதற்கு கடினமான சைவ உணவுகளும் இருக்கின்றன.
2. புலால் உணவுகளில் உடலுக்குத்தேவையான சத்துக்கள் இல்லை - சில புலால் உணவுகள் காட்டாக மீன், பால், முட்டை போன்றவை உடல்நலத்துக்குத் தேவையான உணவுகள். அதே சமயம் உடல்நலத்துக்குத் தேவையில்லாத சைவ உணவுகளும் நிறைய இருக்கின்றன.
நீங்கள் சொன்னக் காரணங்களுக்காக புலால் உண்பதை தவிர்ப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் புலால் உணவுகளையும் உண்பவர்களையும் கேவலமாக பார்ப்பது நம்மிடையே நிலவுகிறது. அதை விமர்சிப்பது என் இடுகையின் சில நோக்கங்களில் ஒன்று.
//ஆனால் புலால் உணவுகளையும் உண்பவர்களையும் கேவலமாக பார்ப்பது நம்மிடையே நிலவுகிறது. //
ReplyDeleteநீங்கள் சொல்வதும் சரிதான். ஒருவர் தனக்குத்தானே
இட்டுக்கொள்ளும் நியதிகளைக் கொண்டு, அதை பின்பற்றாத இன்னபிறரை கேவலமாக பார்ப்பது தவறுதான்.
புலால் உண்வர்களும், புலால் தவிர்பவரை கிண்டல்-கேலி செய்வதும் சாதாரணமாக நாம் பார்ப்பதுதான்.