குடும்பப் பெயர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நமது மாநிலத்திலேதான் குடும்பப் பெயர்(Family Name) அல்லது சர் நேம் (Sur Name) அல்லது Last Name கிடையாதே. வெறும் இனிஷியல்தான்.
தந்தையின் பெயரை (இப்போது தாயின் பெயரோ) இனிஷியலாகக் கொள்ளும் பழக்கம் நம்மிடம் உள்ளது. நம்மூரை விட்டு வெளியே வந்தாலோ, இந்த இனிஷியலை விரிவாக்கி அதையே குடும்பப் பெயராக கொள்ளத்தொடங்குகிறோம்.
வேறுவழியில்லாமல்.
இத்தனைக்கும் இந்த இனிஷியல் பழக்கம் தொன்று தொட்டு ஏற்பட்டதல்ல. அந்தக்காலத்தில் அரசர்கள் வம்சப்பெயர்களியும், குடிமக்கள் ஊர்ப்பெயர்களையும் குடும்பப்பெயர்களாக கொண்டிருந்தனர். பின்னர் மக்கள் தொகை பல்கிப்பெருக, ஊர்ப்பெயர்கள் போதாதென்பதால், ஜாதிப்பெயர்கள் குடும்பப்பெயர்களாக வந்து ஒட்டிக் கொண்டன. இதன் வழியாக தேவையில்லாத வேறுபாடுகள் நம்முள்ளே விதைக்கப்பட்டும் விட்டது. பெயரளவில் ஜாதிப்பெயர்களை விட்டுவிட்டாலும், மனதளவில் வேறுபாடுகள் களையறுக்கப் படவில்லை என்பது வேறு விஷயம். ஊர்ப்பெயர்களும், வம்சப்பெயர்களும், ஜாதிப்பெயர்களும் வழக்கொழிந்து போக, நமக்கு மீதம் விட்டது இனிஷியல் மட்டும் தான்.
இதில் நல்லது ஏதேனும் உண்டா என்றால் இருக்கத்தான் செய்கிறது!
* வெளிநாடுகளில் மரியாதையாக ஒருவரை அழைக்க, அவரது குடும்பப்பெயர் கொண்டே அழைக்கப்படுகிறார். அப்போது நம்மை நம் பெற்றோர் பெயர் கொண்டு அழைக்கும்போது, என் பெருமையெல்லாம் என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தை/தாய்க்கேப் போய்ச் சேரட்டும் எனப் பெருமிதம் கொள்ளலாம்.
* நாங்கள் தமிழர், எங்களுக்கு தனித்துவம்தான் முக்கியம் என்று நீட்டி முழக்கலாம்!;-)
இதனால் சங்கடங்களும் வருகின்றன:
* குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே குடும்பப்பெயர் கொண்டு அழைக்க முடிவதில்லை.
* வெளிநாடுகளில் குடும்பப் பெயர் கேட்க்கப்படும் நேரத்தில், குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும் ஒவ்வொரு பெயர் கொள்வதால், மற்றவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுகிறது.
* இதனை விளக்க மற்றவர்களுக்கு, நாங்கள் குடும்பப் பெயர் கொள்ளும் பழக்கம் மற்றவர்களிலிருந்து வேறுபட்டது என மற்றவர்களுக்கு விளக்க வேண்டியுள்ளது.
* உலகத்தோடு ஒட்டி ஒழுகாதார் பல கற்றும் அறிவிலாதர் என்ற சொல் ஏற்படுகிறது.
* பெயரைக்கொண்டு ஜீனலாஜி போன்ற விஷயங்கள் செய்ய இயலாமல் போகிறது.
சரி, மாற்றம் வர வேண்டும் என்றால் என்னவாக மாற்றலாம்?
மீண்டும் வேறுபாடுகள் வராமல், அவரவருக்கு பிடித்த தம் மூதாதயர் பெயரையோ, ஏன் தங்கள் தாய் தந்தை பெயரையோ, வேறு எந்த பிடித்த பெயரையோ கொள்ளலாம். தேர்வு தம் சந்ததி அனைவருக்கும் பொருந்தும் பெயராக இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் மாற்றி விடுவார்கள்!
மேலும் 'Middle Name' ஒன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். குடும்பப் பெயர் பெற்றோர் பெயாராக இல்லாத பட்சத்தில், இந்த 'நடுப்பெயரை' பெற்றோரில் ஒருவர் பெயராகக் கொள்ளலாம்.
இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட பெயர்களால் ஏற்படும் குழப்பங்கள் குறையலாம். வலைப்பதிவுகளில் பதிவாளர்கள் பெயரில் பின்னூட்டங்களில் வராத குழப்பமா என்கிறீர்களா?
நமது மக்கள்தொகை விரிவாகும் வேகத்தில், சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' வில் வருவதுபோல், அவரவருக்கு அரசாங்கம் ஒரு அடையாள எண்ணும் இரண்டு பைட் (யுனிகோட் என்றால் மூன்று பைட் வேண்டும்) கொண்ட பெயரும் தரும்வரை தான் இந்த பெயருக்கு 'மவுஸ்'. அதற்குள் செய்ய வேண்டியதை செய்து கொள்வோம் ;-)
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Dear Jeeva
ReplyDeleteA thought provoking post. I think we, Tamilians only have this problem, I go hysteric every time when I am questioned about the first name, last name funda. I started using my father's name as my last name as it was mentioned in my passport as my surname. My first last names are printed in all possible permutation combinations in the credit and n number of other cards that I have. I even shouted at people that we dont have any such stupid practice in our part of the world. Here even the media will make it a point that 'this person has only one name only' when they can not print somebody's last name. Their attitude and expectation that all humans must have a last name irked me many a times, though the fault was with us. I am tired and sick of this first name last names fiascos. Each one of my family are having different last names. For Americans, it look like eigth wonder when they come to know about we dont keep any second name. The immediate next questio would be 'How come you differentiate between people?'. Even our Andhra neighbours looked at me starngely when I told them we dont keep last name concept. Our lenghty names create another big issue. I was thinking of writing about this for a long time. Thanks for bringing this.
Regards
Sa.Thirumalai
அட்லேண்டா ஜீவா:
ReplyDeleteஇதை படித்துப் பாருங்கள்!
கடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர், அக்கப்போர்
===
முந்தைய பின்னூட்டத்தை இட்டது அடியேன்.
ReplyDeleteவாசன்
http://vassan.weblogs.us/
திருமலை:
ReplyDeleteஉங்கள் அனுபவத்தை எங்களொட அனுபவத்தை எங்களோட பகிர்ந்துகிட்டதுக்காக நன்றி. இது மற்றவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும் என நம்புகிறேன்.
வாசன்:
ஆஹா, காசியும் என்னை மாதிரியே யேசிச்சு இருக்காரு, ஒரு வருடத்திற்கு முன்பாகவே!
.net explorer:
மேலே திருமலையின் அனுபவத்தை படிச்சிருப்பீங்க. வெத்து சுயதம்பட்டம அடிச்சு பயனில்லை.
எனினிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனே - வை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு ஜீவா.
ReplyDeleteதற்போது இருக்கும் கடைசி பெயரையே நம் குழந்தைகளுக்கும் கடைசி பெயராக வைக்கலாம்.
//* குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே குடும்பப்பெயர் கொண்டு அழைக்க முடிவதில்லை//
ReplyDeleteis it not a family if it's members have different last names?
why is it that we expect the members of the same family o have the same last name?
இதே பிரச்னை (இ)எங்கும் உண்டு. நான் எங்களுடைய மகள் பிறந்தபோது அவளுடைய பெயருக்குப்பின்னால் அப்பா பெயரின் ஒரு பகுதியை சேர்த்து - குடும்பப் பெயர் ஆக்கலாம் என்று நினைத்திருந்தேன். அப்படியானால், கடவுச்சீட்டு மற்றும் இடங்களில் அப்பா பெயர் என்று என்னுடைய பெயர் எழுதும்போது - திரும்பவும் ஒரே பெயராக கொடுத்தபெயர்+குடும்பப்பெயர்+அப்பாபெயர் என்றாகிவிடும்? இதற்கு என்ன செய்ய?
ReplyDeleteஅனுஷ்யா:
ReplyDeleteநம்மை சுற்றி இருக்கும் மற்றவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்! இப்படி இருந்தால்தான் குடும்பம் என்றில்லை.
அன்பு:
திரும்பவும் அப்பா பெயரை கட்டாயமாக ஏன் சேர்க்க வேண்டும் என தெரியவில்லை. இது சிங்கை பழக்கமோ?
ஜீவா,
ReplyDeleteதமிழ்நாட்டைத் தவிர பிற இந்திய மாநிலத்தவர் இன்னும் ஜாதிப்பெயரைத்தான் இரண்டாம் பெயராய்ப் பயன்படுத்துகிறார்கள்.
ஆமாம் முத்து.இதனால், நாம் முன்னேற்றம்(!) அடந்துள்ளோம் என்று சொல்லாமா? ஆனால் இதனால் மற்றவர்களிலிருந்து அன்னியப்பட்டு விட்டோம்!
ReplyDelete