ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு குறிக்கோளோடு நாம் செயல்படுகிறோம். இளம் பருவத்தில் கல்வி கற்பதும் (எனக்கு விளையாடுவதுதான் என்கிறீர்களா, எனக்கும் அப்படித்தான்), பின்னர் வேலை கிடைக்க முயல்வதும், பின்னர் பணம் ஈட்டுவதும், ஈட்டிய பணத்தை சேமிப்பது/பெருக்குவதும், மண வாழ்க்கையில் இல்லறம் நடத்துவதும், முதுமைப்பருவத்தில் தம் சந்ததியருக்கு வழிநடத்துதலும் பொதுவான குறிக்கோள்களாக நம் சமூகத்தில் இருந்்து வருகின்றன.
மேலே சொன்னது, எழுதுவதற்கும், படிப்பதற்கும் எளிதாக இருந்தாலும், இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் தான் எத்தனை அல்லல்கள், எத்தனை தடுமாற்றங்கள்? நாம் நினைத்த காரியம் நடக்காவிட்டால், எதற்காக வாழ்கிறோம் என்ற கேள்வி நம்முள் பெரிதாக எழுகிறது. நம் மொத்த வாழ்க்கையும் எதோ ஒரு சிறு நிகழ்வினால் நிர்ணயக்கப்பட்டுள்ளதுபோல். நம் தோல்விகளும், ஏமாற்றங்களும் நம்மை வாழ்க்கையின் குறிக்கோள்தான் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றன.
வேடிக்கை என்னவென்றால், தேல்விகளும் ஏமாற்றங்களும் ஏற்்படும்போதுதான் இவற்றைப்பற்றி சிந்திக்கிறோம். இயற்கையாகவே நாம் ஏமாற்றங்களை தவிர்த்து வாழ முடியாதா? அல்லது தோல்விகள் ஏற்பட்டாலும் நம் மனதை பாதிக்காத வகையில் நம் மனதை பக்குவப்படுத்திக்கொள்ள முடியாதா?
இந்த கேள்விக்கும் இன்ன பிறவற்றிற்கும் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விடைபெயர முயல்கிறேன்.
முடியும். நம் மொத்த வாழ்விற்கும் குறிக்கோள் இதுவென்று ஒன்றினைக் கொண்டோமாயானால், அது முடியும். எந்த சூழ்நிலையிலும், எந்த தடுமாற்றம் ஏற்பட்டாலும் , என் வாழ்க்கைக் குறிக்கோள் நிறைவேற என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினால் போதும், தெளிவு பிறந்துவிடும்.
என்னது, நம் மொத்த வாழ்வுக்கும் ஒரு பெரிய குறிக்கோள் உண்டா?
ஆம். தமிழில் இதனை அழகாக ' அறம் பொருள் இன்பம் வீடு' என்பார்கள். பகவத் கீதையும்் இதையே, 'தர்மம் அர்தம் காமம் மோக்க்ஷம்' என்கிறது.
ஏதோ பெரிதாக சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி சுலபமாக இருக்கிறதே?
உலகத்தின் மிக உன்னதமான கருத்துக்கள் எல்லாமே சுலபமானதே. நாம் தான் அவற்றின் மதிப்புத் தெரியாமல் உதாசீனப்படுத்தி வந்துள்ளோம்.
பொருள் மற்றும் இன்பம் பெறுவது நம் மானிடப்பிறப்பின் இயல்பான குணமே. புத்த மதம் சொல்வதைப்போல் அவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. இந்து மதத்தின் உயரிய வழிமுறை அறம் வழியே பொருள் மற்றும் இன்பம் ஈட்டுவதே. அதுவே வாழ்க்கையின் முக்கிய நெறிமுறை.
அறம் என்றால் என்ன?
முதுபெரும் இந்தியாவில் அறம் என்னவென்று எடுத்துரைக்கும் நூல்களை பட்டியலிடத்தொடங்கினால் எண்ணி மாளாது. நாம் அனைவரும் கொஞ்சமாவது படித்திருப்போம். ஆனால் அவை ஏட்டுச் சுரைக்காயாகவே விட்டு விட்டோம். அவற்றைக் கூட்டுச் சுரைக்காயாக பயன்படுத்திக்கொள்ளும் கலை நம்மிடமே உள்ளது. அறம் என்றால் என்னவென்று திருவள்ளுவர் 380 குறள்களில் சொல்லியிருக்கிறார். கசடற கற்போம், கற்ற வழி நிற்போம்.
வாழ்க்கையின் இறுதியான குறிக்கோள் வீடுபேறு அடைதல். எல்லாவற்றையும் துறந்த துறவியால் மட்டும் தான் வீடுபேறு (மோக்க்ஷம்்) அடைய முடியும் என்பதல்ல. அறம் வழி நின்றவர் அனவரும் அடையலாம். மேலும் மோக்க்ஷம் என்பது உண்மையில் ஒரு இடமல்ல, அது ஒரு நிலை. குழந்தைப்பருவம் போல ஒரு நிலை. என்ன, ஒரே ஒரு வேறுபாடு. மோக்க்ஷம் என்னும் நிலையை அடைந்தவர் குழந்தை அல்லது மற்ற நிலைகளை மீண்டும் மீண்டும் அடைய வேண்டியதில்லை. இந்த கடைசி நிலையைப் பற்றி அறிந்து கொள்ளவோ, யொசித்துக்கொண்டு இருக்கவோ வேண்டியதில்லை. நம் செயலிகளில் தினம் தினம் அறம் வழி நடந்து நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வதால், தானாகவே அந்நிலை நமக்குத் தெளிவு பெறும். தன்னை அறிதல் வேண்டும் என்ற உந்துதல் தானாகவே ஏற்படும்.
If Winter comes, Can Spring be far behind?
நல்ல பதிவு
ReplyDeleteநல்ல கருத்துக்கள், சிந்தனைகள்
தொடர்ந்து எழுதுங்க...
(இதற்கு யாரும் நட்சத்திரத்தில வாக்கோ, பின்னூட்டமோ கொடுக்கவில்லையென்றாலும் கவலைப்படத்தேவையில்லை (ஒருவேளை நீங்கள் அப்படி நினத்திருந்தால்) கண்டிப்பாக பலராலும் படிக்கப்பட்டிருக்கும்...)
அதனால் தொடர்ந்து எழுதுங்கள்.
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அன்பு அவர்களே.
ReplyDeleteஇந்து மதத்தின் உன்னத கருத்துக்களை எடுத்து இயம்பியதற்காக நன்றி ஜீவா.
ReplyDeleteப்
Jeeva
ReplyDeleteExcellent post man.
Man prefer or turn to God only when misfortune happens, in success and enjoyment there is no place of God. But only in pain,death people turn inside, things starts to flash before them and the God comes.
Self introspection is so much needed at this time, many of us dont bother and move on.
உள் திரும்புதல் பற்றி சுட்டியதற்கு நன்றி கேகே.
ReplyDeleteஇது ஒரு தொடக்கமே.
மேலும் எழுத எண்ணம்.
ஜீவா,
ReplyDeleteதிடீர்னு இப்படி அழகா தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டீங்க. நல்லா இருக்கு. தொடருங்கள்.
:-)
ReplyDeleteஇப்படி சொல்லுவீங்கனுதான் அப்படி எழுதாமல் இருந்தேன், முத்து.
பாரதி படத்திலே ஒரு வசனம் வரும்.
''நம் சமுதயாத்திலே எத்தனேயோ உன்னதங்கள் இருந்தாலும் எத்தனையோ அவலங்கள் இருக்கத்தான் செய்கிறது'' என்று.
அவலங்களை எழுத நிறையபேர்கள் இருக்கிறார்கள். ஊடாக, உன்னதங்களை உயர்த்திப் பிடிக்க ஒரு சிலராவது வேண்டுமே.
நன்றி.
என்ன ஜீவா, வீட்டுல பொண்ணு கிண்ணு பார்த்துட்டாங்களே. தத்துவமா கொட்டிறீங்க. வழக்கமா கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தான் இப்படி பேசுவான். அதுக்கு முன்னாடியவே :-)
ReplyDeleteமேல சொன்னது சும்மா கிண்டலுக்கு தான். நல்லாயிருக்கு பதிவு.
அப்படியா? விஜய்,
ReplyDeleteஅந்த அறிகுறியேதும் உங்க பதிவுகளிலில் தென்படலேயே?;-)
ஜீவா, நீங்க சொல்வது எல்லமே சரிதான். ஆனால் இந்த காலத்தில் ஒருவர் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வாழ்வதே மிகக் கடினமாக இருக்கும்போது, தர்மத்தைக் கடைபிடிப்பதைப் பற்றி பேசினால் பைத்தியம் என்று சொல்கிறார்கள். எனக்கு பாரதியார் என்றால் அவ்வ்வளவு இஷ்டம். உங்கள் பதிவுகளை நான் விரும்பிப் படிப்பதற்கான ”ஒரு” காரணம் அதுதான். முதல் காரணமும் அது தான். என் வாழ்க்கைப் பாதையில் நடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் நான் கடக்கும் ஒவ்வொரு மனிதரைப் பார்த்த போதும் எனக்கு பாரதியின் பாடல்கள் தான் நினைவிற்கு வரும். “நெஞ்சு பொருக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டல்” என் பாரதி தொலைநோக்கில் வல்லுனன் என்று நிரூபிப்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்! நான் ஏதேனும் தவராகக் கூறியிருந்தால், மன்னிக்கவும். மிகவும் நல்ல பதிப்பு!
ReplyDeleteபல வருடங்களுக்கு முன்னால் பதித்தை இப்போ(தும்) வந்து ரசிச்சிருக்கீங்க! மிக்க நன்றிகள்!
ReplyDeleteபாரதியின் பாதிப்பினை ஆங்காங்கே பார்க்கலாம்.
"பாரதி" பகுதியினை சுட்டினால், அவர் பற்றியான எல்லா பதிவுகளையும் பார்க்கலாம்.
தர்மம் என்பது ஒரு அடிப்படை. அஸ்திவாரம் போல.
அது எந்த அளவிற்கு நிலையாக இருக்கிறதோ அதைப்பொருத்து அதன் மேல் கட்டப்படும் கட்டிடம் நிலை பெறும்.