Saturday, April 30, 2005

எதிர்பார்ப்புகள் - கவிதை

1.
இரவெல்லாம் விழிமூடி விழிப்பில்லை
பகலெல்லாம் விழிதிறந்தும் விழிப்பில்லை
இடையிடையே விழித்துக்கோண்டேனே
எதிர்பார்ப்பை விலக்கியபோது.
2.
மணிமணி எண்ணம்
மணிரதம் நடை
மான் துள்ளல்
கூடவே கரையான் எதிர்பார்ப்்புகள்.
3.
உருண்டோடிக்கொண்டு இருக்கையில்
நேற்றை அசைபோடுகையில்
நாளையை எதிர்பார்க்கையில்
இப்பொழுதை தொலைக்கிறேனே.

1 comment:

  1. படுக்கையில் இருந்து எழுந்துகொள்ள சோம்பேறித்தனமாய் இர்க்கும்போது இரண்டு ஹைகூ கவிதைகள் தோன்றின. உடனே இத எழுதிவிட வேண்டும் என்று எழுந்தேன். ஆனால் பல் தேய்த்துவிட்டு வருவதற்குள் ஒன்று மறந்து விட்டது. பின்னல் யோசித்து பார்க்கையில் அது வரவேயில்லை, ஆனால் இன்னும் இரண்டு வந்தது.
    ஆக இந்த மூன்றை பதிவு செய்கிறேன்!

    ReplyDelete