Sunday, February 20, 2005

சங்கிலி

மனமெல்லாம் மருள்
பகலெல்லாம் இருள்
உறவெல்லாம் பகை
நினைவில்லெல்லாம் மறதி.

இப்படித்தான் தொடங்கினேனா?
இப்படித்தான் தொடந்தேனா?
இப்படித்தான் தொடர்வேனா?

துணிந்த கருமம்
என்று வெற்றி எட்டுகிறது?
துணிந்த தினத்திலா, இல்லை.
துணிந்த விதத்திலா, இல்லை.
தொடக்கத்தையும்
முடிவையும்
பிணைக்கும்
சங்கிலிகளால்.
தொடர்புச்சங்கிலிகளால்.

சங்கிலியின் பயன்
ஒவ்வொரு
தொடர்பிலும்
பயணிக்கிறது.
ஆதலால்,
ஒவ்வொரு
தொடர்பிலும்
சங்கிலியின் உயிர்
பயணிக்கிறது.

செயலில்
ஒவ்வொரு
தொடர்பிலும்
உன்
உயிரை செலுத்து.
வேறெண்ணம்
பற்றாமல்
திடம், திண்ணம்
தினம் கொண்டு
தேரினை செலுத்து.

முடிவில் கவனம்
வேண்டாம் மனமே.
தொடர்பில் நினைவினை
நிறுத்திடு நிதமே.
தொடர்ந்திடும் விதமே
வெற்றியை
ஈட்டிடுமே.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete