Sunday, November 09, 2008

எல்லாம் கண்ணனுக்கே!

கண்ணனைப் பாடுவதென்றாலே, எப்போதுமே சொல்லிலடங்கா சுகம். கண்ணன் உருவம் என்றதுமே, நமக்கு பற்பலத் தோன்றும். ஒன்றா, இரண்டா, நொடியில் சொல்லி முடிக்க. ஓராயிரம் வேண்டுமே!. எதைச்சொல்ல, எதை விட!
காற்பாத விரலை வாயிலே சுவைக்கும் ஆலிலைக் கண்ணன் முதல், பார்த்தசாரதியாய், கர்மயோகம் உரைக்கும் கண்ணன் வரை, அவன் புரிந்த விந்தைகள்தான் எத்தனை, எத்தனை!. அவ்விந்தைகளில் மயங்கி, அவன் நினைவன்றி வேறொன்றும் அறியா கோபியர் போல், அவன் நினைவில் திளைத்திடும் சாதகம் போல் வேறொன்றோ, சொல் மனமே!.

இங்கே, பாபநாசம் சிவன் அவர்கள், மிக எளிதாக, கண்ணனைப் பாடுகிறார் பாருங்கள். கண்ணன் பாடலுக்கு, கர்ணரஞ்சனி இராகம்!

இராகம் : கர்ணரஞ்சனி
இயற்றியவர்: பாநாசம் சிவன்

எடுப்பு
தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே!

தொடுப்பு
கானவிலோலனே, கௌஸ்துப மாலனே,
கனகாம்பரதர வனமாலாதரனே,

முடிப்பு
சியாமள ரூபனே, சரசிஜ நேத்ரனே,
சகலபுவன பரிபாலனே சீலனே,
மாமணி வண்ணனே, மரகதக் கண்ணனே
மங்கையர் மனங்கவர் மாயனே, ஆயனே,
(தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே.)

இப்பாடலை திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.

தீன சரண்யனே தேவகி பாலனே...

இம்முறை, பாடலுக்கு விளக்கம் சொல்லும் இன்பத்தை, உங்களிடமே விட்டுவிடுகிறேன்!. வாருங்கள் அன்பர்களே!. பாடல் வரிகளுக்கு, தங்கள் விளக்கம் வேண்டும். குறிப்பாக - கானவிலோலன், கௌஸ்துப மாலன், கனகாம்பரதர வனமாலாதரன், சியாமள ரூபன், சரசிஜ நேத்ரன், இப்படியெல்லாம், சிவனார் புகழ்வதென் பொருளென்னவோ!. ஒருவரிப் பொருள்தான் என்றில்லை, கதையாக இருந்தாலும் சொல்லலாம்!

எல்லாமுமே கண்ணனுக்கே போய்ச் சேரட்டும்.

36 comments:

  1. கண்ணன்னாலே கள்மயக்கம்தான் :) பாடல் அருமையா இருக்கு. யாராச்சும் வந்து விளக்கட்டும், மறுபடி வந்து படிக்கிறேன் :)

    ReplyDelete
  2. superb song. i like it a lot. waiting fr the meanings..

    thanks fr uploading excellent songs.

    ReplyDelete
  3. ஜெயஸ்ரீ பாடினதை கேட்கவே அருமை. ரொம்ப அருமையான பாடல்னு ஓராயிரம் முறை சொல்லி, கவிநயா அக்கா பக்கத்தில் அமைகிறேன். (எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு காட்டிக்க வேண்டாமேன்னு தான்).

    ReplyDelete
  4. வாங்க கவிநயாக்கா,
    பாடல் அருமையா இருந்ததா, நல்லது.

    ReplyDelete
  5. வாங்க கெக்கே' மேடம்,
    //அருமையான பாடல்னு ஓராயிரம் முறை சொல்லி, //
    அப்படியே, அப்படியே.
    //கவிநயா அக்கா பக்கத்தில் அமைகிறேன்//
    ஆகா!
    விளக்கம் சொல்லும் இன்பம் போல, விளக்கம் கேட்கும் இன்பம் பருக, நாம ரெடி!
    பெரியவங்க வந்து, விளக்கம் சொல்வாங்க!

    ReplyDelete
  6. கேபி அக்கா எப்போ கெக்கே மேடம் ஆனாங்க? ஐ வான்ட் டு நோ திஸ்! :)

    அருமையான பாடல் ஜீவா! கர்ண ரஞ்சனி - கண்ணனுக்குப் பிடிக்குமா? கர்ணனுக்குப் பிடிக்குமா? :)

    எல்லா வரியும் னே னே-ன்னு தான் முடியுது பாத்தீங்களா? அதுனால அருள் புரி-ன்னு கூடக் கேட்கலை! அதெல்லாம் அவனே புரிவானே-ன்னு முடிச்சிட்டாரு!

    ReplyDelete
  7. //கானவிலோலன், கௌசுப மாலன், கனகாம்பரதர வனமாலாதரன், சியாமள ரூபன், சரசிஜ நேத்ரன்//

    இதெல்லாம் கண்ணன் அன்பர்கள் வந்து சொல்லட்டும்! நானும் ரெண்டு அக்கா பக்கதிலேயும் உட்கார்ந்து கொஞ்சம் காபி குடிச்சிக்கறேன்! :)

    ReplyDelete
  8. பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் மிக அருமையான பாடல். பாபனாசம் சிவன் நிறைய சம்ஸ்கிருத சொற்களை உபயோகப்படுத்தியிருப்பதால் சரியான பொருள் புரியவில்லை. கண்ணனை எந்த மொழியில் பாடினாலும் இன்பம் தான்!

    ReplyDelete
  9. //கௌசுப மாலனே,//

    கெளஸ்துப மாலனே???? இந்த இடம் சரியாப் புரியலையே???

    ReplyDelete
  10. தீன சரண்யன்= பக்தர்களுக்கு அருளுபவன்
    தேவகி பாலன்= விளக்க வேண்டாம் இல்லையா?
    கான விலோலன்= விலோம் என்பது மாறுபட்ட, என்ற பொருளில் வருமே, இங்கே எப்படி எடுத்துக்கறது?? வெவ்வேறு ராகங்களில் பாடுபவன்??? ம்ஹும் சரியாத் தெரியலை!
    கெளசுப மாலன்= கெளஸ்துப மணியையே இங்கே எடுத்துக்கிறேன். அதை அணிந்தவன் என்ற பொருளில் கொள்ளலாமா?

    கனகாம்பரதர = பொன்னாலாகிய அம்பரத்தில் வசிப்பவன்?

    வனமாலாதரனே= ஆளுயரத்திற்கு உள்ள மாலை, ஆண்டாள் மாலை போல, தென் மாவட்டங்களில் நிலை மாலை என்றும் சொல்வதுண்டு, அத்தகையதொரு மாலையை அணிந்தவனே,

    சியாமள ரூபனே= கருமை நிறத்தவனே

    சரசிஜ நேத்ரனே= தாமரைக்கண்ணன்
    சகலபுவன பரிபாலனே=இதுக்கு அர்த்தம் தேவை இல்லை, மத்ததுக்கும் தேவை இல்லை, தப்பானதுக்குப் பொற்கிழியில் கொஞ்சம் குறைச்சுக்குங்க. கொஞ்சம் வெளியே போகணும், போயிட்டு வந்து வாங்கிக்கறேன்.

    ReplyDelete
  11. வாங்க கே.ஆர்.எஸ்!, வருகைக்கு நன்றி!
    /அருமையான பாடல் ஜீவா! கர்ண ரஞ்சனி - கண்ணனுக்குப் பிடிக்குமா? கர்ணனுக்குப் பிடிக்குமா? :)
    //
    அருமையான பாடல்!
    கர்ண, கண்ணன் எல்லாம் ஒரே காலத்தவர்தானே,
    அதனால்...! ;-)
    //எல்லா வரியும் னே னே-ன்னு தான் முடியுது பாத்தீங்களா? //
    அட, ஆமாம்!
    //அதெல்லாம் அவனே புரிவானே-ன்னு முடிச்சிட்டாரு!//
    அப்படியே துவங்கியும் இருக்காரு!

    ReplyDelete
  12. வாங்க ExpatGuru!
    /பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் மிக அருமையான பாடல். //
    குரலும் இனிமை, பாடலும் இனிமை!
    //நிறைய சம்ஸ்கிருத சொற்களை உபயோகப்படுத்தியிருப்பதால் சரியான பொருள் புரியவில்லை.//
    சிலது எளிது, சிலது தெரியலை!
    //கண்ணனை எந்த மொழியில் பாடினாலும் இன்பம் தான்!//
    அப்படி போடுங்க!

    ReplyDelete
  13. வாங்க கீதாம்மா,
    //கெளஸ்துப மாலனே????//
    அப்படித்தான் இருக்க வேண்டும். பதிவிலும் மாற்றி விடுகிறேன்.

    ReplyDelete
  14. கீதாம்மா, கலக்கிட்டீங்க!
    நிறைய சரியா இருக்குன்னு நினைக்கிறேன்.
    ஆனால் பொற்கிழிகள் தரும் முன்னே, மற்ற பெரியவங்களும் என்ன சொல்லறாங்கன்னு கேட்டுக்கலாமா!

    ReplyDelete
  15. கே.ஆர்.எஸ்,
    //
    இதெல்லாம் கண்ணன் அன்பர்கள் வந்து சொல்லட்டும்! //
    இது என்ன? கே.ஆர்.எஸ் இல்லா கண்ணன் சத்சங்கமா? முழுநீள வர்ணணையோடு விளக்கம் வேண்டும்!

    ReplyDelete
  16. வாங்க லலிதா மேடம்,
    உங்க மறுமொழியை இப்பத்தான் கவனிச்சேன், மன்னிக்கவும்.
    /superb song. i like it a lot. waiting fr the meanings..//
    பொருள் வந்துகிட்டே இருக்கு!

    ReplyDelete
  17. இந்தப்பாடலை அமைதியான இனிய மாலை வேளைல கண்ணனின் சந்நிதிமுன் நின்று கண்மூடி லயித்துக் கேட்கணும் அத்தனை தெய்வீகமானபாட்டு,

    ReplyDelete
  18. //ஆனால் பொற்கிழிகள் தரும் முன்னே, மற்ற பெரியவங்களும் என்ன சொல்லறாங்கன்னு கேட்டுக்கலாமா!//

    அதான் குறைச்சுக்குங்கனு சொன்னேனே?? என்னடா இது "மதுரை"க்கு வந்த சோதனை??? சரிதான், கதை கிடையாது அப்போ! :P

    ReplyDelete
  19. //கீதா சாம்பசிவம் said...
    அதான் குறைச்சுக்குங்கனு சொன்னேனே?? என்னடா இது "மதுரை"க்கு வந்த சோதனை???//

    ஹா ஹா ஹா!
    கீதாம்மா....உங்கள் பாட்டில் பிழை இருக்கிறது!
    பிழையான ஒரு பாட்டுக்கு எங்கள் ஜீவா பாண்டியன் பரிசளிக்கின்றான் என்றால் அதைக் கண்டு முதலில் வருத்தப்படுபவனும் அடியேன் தான்! :))

    ReplyDelete
  20. தீன சரண்யன் = துன்புறுவோர்க்கு அடைக்கலம் கொடுப்பவன்

    அவன் பக்த சரண்யன் மட்டும் இல்லை! தீன சரண்யன்!
    அவர்கள் பக்தர்களா என்று பார்த்து விட்டு சரணம் அளிப்பதில்லை! தீனர்கள்-கஷ்டப்படுகிறார்கள் என்ற பார்த்த மாத்திரத்திலேயே சரண்யம்-அடைக்கலம் அளிப்பவன்! அதனால் தான் சர்வ லோக சரண்யன் என்று பெயர்!

    //தேவகி பாலன்= விளக்க வேண்டாம் இல்லையா?//

    வேண்டும்! :)
    தேவகி பாலன் என்றால் தேவகி பையன்! தேவகி புத்திரன் என்று சொல்லாமல் பாலன் என்று சொல்கிறார்! நேரடியாக வளராத பையன்! சிவபாலர்களும் குழந்தை முதல் நேரடியாக வளராமல், வளர்ந்து சேர்ந்தவர்கள் தான்!

    கான விலோலன் = கான-வி-லோலன்
    கானங்களிலேயே களித்து இருப்பவன்!
    ஸ்தீரி லோலன் என்பது போல கான லோலன்! வி என்பது Conjunction :)

    கெளஸ்துப மாலன் = கெளஸ்துபம் என்னும் மணியை அணிந்திருப்பவன்!
    கெள+ஸ்துப = இறை+மங்கல ஒலி! நல்ல ஒலி எழுப்பும் சிவப்புக் கல் மணி கெளஸ்துபம்; திருப்பாற்கடலில் அமுது கடையும் போது தோன்றியது!
    (கௌசுப அல்ல; திருத்தி விடுங்கள் ஜீவா)

    கனகாம்பரதர = கனக+அம்பர+தார
    பொன்+ஆடையை+தரிப்பவன்
    அம்பரமே, தண்ணீரே, சோறே அறம் செய்யும் என்று ஆண்டாள் பாடுகிறாள்! துணி+நீர்+அன்ன தானம் செய்கிறானாம் நந்தகோபன்.

    வனமாலாதரனே=வன+மால+தர
    வைஜயந்தி என்னும் வன மாலையைத் தரிப்பவன்! காட்டுப் பூக்களால் ஆன வனமாலை!

    சியாமள ரூபனே = இரவின் நிறத்தில் ஜொலிப்பவனே (கருப்பு, கருநீலம்)!
    யாமம், சியாமம் என்று அடிச் சொற்கள்!

    சரசிஜ நேத்ரனே = தாமரைக் கண்ணா!

    சகல புவன பரிபாலனே = அனைத்து உலகங்களையும் பரிபாலிப்பவனே!
    பாலித்தல்=காத்தல்
    பரி-பாலி=முழுமையாகக் காத்தல், தடைகளை விலக்கி விலக்கிக் காத்தல்!

    பாஹி ஹரே என்னாது, பரி-பாஹி ஹரே என்கிறார் சுப்ரபாதத்த்தில்!
    பரயா கிருபயா பரி பாஹி ஹரே! - இப்ப தான் சுப்ரபாதப் பதிவில் சொல்லிட்டு வந்தேன்! இங்கேயும் பரிபாஹி இருக்கு! :)
    http://verygoodmorning.blogspot.com/2008/11/32.html

    ReplyDelete
  21. உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
    மூச்சு வாங்குது! ஒரு ஜோடா கொடுங்க ஜீவா!

    பரிசைக் கீதாம்மாவுக்கே கொடுக்கும்படி ஜீவா பாண்டியனைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! :)

    ReplyDelete
  22. வாங்க ஷைலஜாக்கா,
    சரியாச் சொன்னீங்க, ஆர்பட்டமில்லாம, அமைதியாக கேட்க வேண்டிய பாடல்!

    ReplyDelete
  23. கீதாம்மா,
    நக்கீரனார், குறை சொன்னாலும், கொடுத்திடலாம்ன்னு சொல்லீட்டார்.
    கண்ணபிரனே சொன்ன அப்புறம் என்ன?
    பொற்கழி கிடைக்காவிட்டாலும், பொற்கழல்கள் கிடைக்கட்டும்!

    ReplyDelete
  24. அழகா விளக்கம் தந்து அருள் பாலித்த பிரானுக்கு வணக்கம்!
    //இப்ப தான் சுப்ரபாதப் பதிவில் சொல்லிட்டு வந்தேன்! இங்கேயும் பரிபாஹி இருக்கு! :)//
    தலைப்பை பார்த்து விட்டு, நமக்கு எதுக்கு வம்புன்னு வராமல் இருந்தேன், இப்ப பார்த்திருக்கலாமோன்னு தோணுது, வரேன்! ;-)

    விளக்கங்கள் எல்லாம் அருமை! ன்னு சொல்லவும் வேணுமோ!.

    ReplyDelete
  25. //உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
    மூச்சு வாங்குது! ஒரு ஜோடா கொடுங்க ஜீவா!
    //
    அடடா, தலைவரைப் பாராட்டி, பொன்னாடையை போர்த்தி, ஜோடவை உடைத்து தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்!

    ReplyDelete
  26. பாபநாசம் சிவனாரின் இன்னொரு பாட்டு:
    லக்ஷ்மி நாராயண நளினாயதர லோசன
    நமோ நமோ பாஹி பாஹி
    அப்படின்னு ஒரு பாட்டு இருக்கு. இங்கே விஜய் சிவா பாடுறார். இந்தப் பாட்டிலேயும்,
    வனமாலாதர மாதவ லக்ஷ்மி நாரணயன..
    என வரும்.

    சந்தன சர்சித நீல களேபர பீத வசன வனமாலி
    - அஷ்டபதியில் ஜேயதேவரும் அப்படியே சொல்லறாரு.

    லாலி ஓ வனமாலி -ன்னு ஒரு தியாகராஜர் கிருதியும் இருப்பதாக ஞாபகம்.

    ReplyDelete
  27. @கேஆரெஸ், வேண்டாம் போங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்களே வச்சுக்குங்க!

    அப்புறம் விலோலம்= என்றால் versatile னு படிச்ச நினைப்பு, எதுக்கும் அகராதியைக் கேட்டுடறேன். ஸ்த்ரீலோலன் என்பது போல் கானவிலோலன் என்பதை என்னால் ஏற்க முடியலை. பலரும் ரசிக்கும்படி, பலரும் புரிஞ்சுக்கிறாப்போல், இன்னும் சொல்லப் போனால் ஆடு, மாடுகள் உட்பட்ட சகல ஜீவராசிகளையும் கவரும் வண்ணம் கீதம் இசைத்தான் என்பதே இங்கே பொருந்தும்னு என்னோட எண்ணம். பரிசு கண்ணன் புகழ் பாடும் கண்ணனுக்கே. முதல்லேயே சொல்லிட்டுப் போயிருக்கலாம், என்னோட போட்டி போடறதுக்குன்னே வந்து அப்புறமாச் சொல்லி இருக்கார். அதுக்குக்கொஞ்சம் குறைங்க! :P:P:P:P:P

    ReplyDelete
  28. காலை வணக்கம் கீதாம்மா,
    அகராதியில் விலோலம் - ன்னா வேற பொருள் சொல்லறாங்களே!

    விலோலம் vilōlam

    , n. < vi-lōla. Fidgetiness, mental agitation; மனச்சஞ்சலம். (சங். அக.)

    ReplyDelete
  29. பாபநாசம் சிவன் 'விலோலன்' எனச் சொல்லும் இதர இடங்கள்:
    "கோபீ ஜன மன மோஹன முரளீ கான விலோலன்"

    "யது திலக கோபால முகுர நிப கபோலயமி ஹருதய ஸலீலா கமலஜா விலோலா"

    பாபநாசம் சிவன் 'லோலா' எனச் சொல்லும் இதர இடங்கள்:

    "நாரதாதி யோகி ப்ருந்த வந்தித
    வேணு கான லோலா"

    "ஸவாமி நீ கண் பார் ஸத்யபாமா லோலா கோபாலா"

    "ஸாமகான லோலனான தாயுமை மணாளனை"

    "வேலன் வள்ளி தெய்வானை லோலன் தாள் தொழும் அன்பர்"

    "ஸாம கான லோலனே ஸதாசிவ சங்கரனே தயாகரனே ஜய"

    ReplyDelete
  30. विलोलन्= நீங்க சொன்ன அர்த்தம் தான் அகராதியிலேயும் போட்டிருக்கு! :))))))) ஆனால் இந்த இடத்தில் எப்படி வரும்னு புரியலை, யோசிச்சப்போ लोलन्= என்றால் ஆடுபவன், ஆடுகின்ற என்றொரு பொருளும் வரதால், பாடி, ஆடிக் களிப்பவன் என்ற பொருளே சரியா இருக்கும்னு நம்பறேன். நான் பார்த்தது சம்ஸ்கிருத அகராதியிலே. ஹிந்தியிலேயும் அர்த்தம் இதேதான் கொடுத்திருக்கு! நன்றி.

    ReplyDelete
  31. //பாடி, ஆடிக் களிப்பவன் என்ற பொருளே சரியா இருக்கும்னு நம்பறேன்.//
    அப்படியா, நல்லது கீதாம்மா.

    ReplyDelete
  32. //கீதா சாம்பசிவம் said...
    முதல்லேயே சொல்லிட்டுப் போயிருக்கலாம், என்னோட போட்டி போடறதுக்குன்னே வந்து அப்புறமாச் சொல்லி இருக்கார். அதுக்குக் கொஞ்சம் குறைங்க! :P:P:P:P:P//

    ஹா ஹா ஹா!
    என் தங்கச்சி இப்படித் தான் அடிக்கடி சொல்லுவா! எனக்குக் கொடுக்க வேணாம்! ஆனால் அண்ணாக்குக் கொஞ்சம் கொறைங்க-ன்னு!
    அவ தான் சின்ன பொண்ணு! நீங்களுமா கீதாம்மா? :)))

    இதுக்கும் ஒரு கிர்ர்ர்ர்ர்ர் ஆ?
    இருங்க சாம்பு மாமா கிட்ட சொல்லுறேன்! பரிசையும் அவர் கிட்ட கொடுத்துடறோம்! அவர் வாங்கி என்சாய் பண்ணட்டும் :))

    ReplyDelete
  33. கண்ணனே குழந்தையாய் இருக்கும் போது, நாமும் குழந்தையாய் இருப்பது தவறென்ன கே.ஆர்.எஸ்?

    ReplyDelete
  34. some more thought on vi-lola

    vi=
    in some cases it does not seem to modify the meaning of the simple word at all (cf. %{vi-jAmi} , %{vi-jAmAtR}) ; it is also used to form proper names out of other proper names (e.g. %{vi-lola} , %{vi-pRthu} , %{vi-koka}). To save space such words are here mostly collected under one article ; but words having several subordinate compounds will be found s.v.

    ReplyDelete
  35. பாடலைக் கேட்டு இரசித்தேன் ஜீவா. நன்றி.

    ReplyDelete
  36. மிக்க மகிழ்ச்சி குமரன்!

    ReplyDelete