தொடக்கமும் முடிவும் இல்லாமல்
தொடரும் சங்கிலியாக
தொடர்ந்து ஓடிக்கொண்டே
இருக்கும் நதிநீராக
இப்போதும் அப்போதும்
எப்போதும் நகரும் நேரமாக
அசைவாகவும் அசைவற்றதிலும்
எங்கேயும் நிறைந்திருக்க
தன்நிகரில்லாமல் தன்னறிவாய்
தகைசான்றோரில் விளங்கிட
முன்வினைகளை இப்பொழுதில்
நற்செயலில் போக்கி
அகமும் புறமும் மாறுதலற்ற
பூரணமாய் ஆனந்தமடைய
நிர்குண பரிபூரணா,
நின் தாள் சரணம்.
நிர்குணம் எனச் சொல்லிவிட்டீர்கள். ஆகவே அது நிராகாரம்.
ReplyDeleteஅதனை பரிபூரணம் என்றும் வர்ணித்தவிடின், by deduction ,
அதனுள்ளே எல்லாம் அடங்கும் எனவும் சொல்லியாகிவிட்டது.
சொன்னபின்னே, " நானும் " அதனுள் தானே
இருக்க இயலும். இன்னமும் நினைத்துப்பார்த்தால்
நான் தானே அது எனவும் புரிந்தபின்னே
நான் அதற்கு சரணம் என்பது ஏன்?
நிர்குணவானுக்குத் தாள் ஏது ? தாள் என்று சொன்னால்
அவன் சகுணப்பிரும்மன் ஆகிவிடுகிறானே ! Then அவன் தாள்
சரணம் எனச் சொல்லுங்கள். ஆட்சேபணையில்லை.
இரண்டாவதாக, இன்னும் ஒரு கண்ணோட்டத்தில்,
எங்கேயும் அவன் தான் இருக்கிறான் என்று சொன்னபின்,
மரத்தில் இருக்கும் பூவிலும் அவன் இருக்கிறான். மரமும் அவன் தான்.
பூவும் அவன் தான். அப்படி இருக்கும்போது, அந்தப்பூவை எடுத்து
இங்கே ஒரு "அவனை" ஸ்தாபித்து, அந்த "அவனுக்கு" , "அவனேயான
அந்தப்பூவையே" எடுத்து ப்போட செய்கிறோம் ? உலகாயதமா?
ஆக, ஒன்று பிரும்மனை மாயா ரஹித ( நீங்கிய ) நிர்குணவானாக சொல்லுங்கள். அப்பொழுது,
அவன் வேறு, நீங்கள் வேறல்ல. எல்லாமே ஒன்றுதான். அது ஞானமார்க்கம்.
அல்டிமேட் ஆனந்தம்.
இல்லை. மாயை கூடிய பிரும்மனை அதாவது ஈச்வரனை தியானிக்கிறேன்
எனச்சொல்லுங்கள். இப்பொழுது அவன் சரணம் எனச் சொல்லுங்கள்.
இதுவும் சரியே. இது கர்ம மார்க்கம்.
இது இன்டிமேட் இசை.
இரண்டையும் கலந்து உணர்வது
தங்க்லீஷ். இருப்பினும் இதிலும் ஒரு இலக்கிய நயம் இருக்கிறது.
"தான்" என்பதை விடவேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.
இதுவும் சரியே..ஏனெனின் இது லோகாயதம்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பரிபூரணத்தினை உணர்ந்து, அவன் வேறல்ல, என் சுயம் வேறல்ல என்று வந்துவிட்டால், இந்த பதிவேது? அதில் மறுமொழிக்கு பதில்மொழி ஏது?
ReplyDeleteநிர்குணத்தானுக்கு தலையும் இருக்காது, தாளும் இருக்காதுதான். இருப்பினும் அவன் தாள் பணிவேன் என சொல்லத் துணிவதற்கு காரணம் - அவன் அருளை நாடிட - அந்த அருள் இல்லாமல் - அவனை அறிவது இயலாதது என்பதால். அவன் எல்லாமுமாய் இருந்தாலும்,
அடி முடி காண இயலாதவானாய் இருந்தாலும்.
- அதற்குத்தானே இந்த சகுணபிரம்மம் என்கிற வார்த்தை விளையாட்டுக்கள் எல்லாம்! :-)
எல்லாம் அறிந்திருந்தாலும், நான் என்ன சொல்கிறேன் என்று பார்க்கிறீர்கள் போலும்.
எந்த மார்க்கம்? முதன் முதலில் மனத்துக்கண் மாசிலனாய், அறம் செய்தல்
ஒன்றே, ஒன்றை அறிவதற்கான தொடக்கம். அதன் பின் மார்க்கமெல்லாம் தானாக வரும்.
லோகாயுதம் - அப்படி என்றால் என்னவென்று தேடிப்பார்த்தால் - ஜெயமோகன் சொன்னது
அகப்பட்டது.
உங்கள் பதிலை சரியெனவோ தவறு எனவோ கூற இயலவில்லை. ஏனெனின்
ReplyDeleteஎன் கருத்தும் அவ்வாறே.. ஒரு நிலைக்குப் பின்னே எல்லாமே அவரவர் அனுபவம் தான்.
நிற்க. பிருஹத் ஆரண்யகத்தில் பூர்வ பக்ஷிகள் எனச் சொல்லப்படும்
தர்க்கவாதிகளுக்கும் ஆதி சங்கரருக்கும் நடக்கின்ற வாதத்தினில் எது
சரி, எது தவறு என்பது அவரவர்கள் நம்புகின்ற, மேலும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில்
உணர்ந்ததைப் போன்றதே இது ஆகும்.
கருமங்கள் இல்லாது, ஞானத்தினை அடைய இயலாது. இது சரி.
ஞானத்தினை அடந்தவனுக்கு கருமங்கள் உண்டா? என்ற கேள்விக்கு,
பதில் கேள்வியாக, இந்த மனித உருவில் இருந்துகொண்டே ப்ரும்மானுபவத்தினைப்
பெற இயலுமா என வருகிறது. இன்னும் பிரும்மவித், பிரும்மைவ பவதி எனும் வாக்கியமும்
(பிரும்மனை அறிந்தவன் பிரும்மனே ஆகிறான்) இருப்பதால், ப்ரும்மத்தை அடையவேண்டும்
என வைராக்கியம் கொண்டு அந்த முயற்சியிலே தொடர்ந்து இருப்பவன், கருமங்களையும்
தொடர்ந்து கொண்டே ஞான வழியில் செல்ல யத்தனிக்கிறான். ( It is something like a professor of Astronomy explaining as to how and why lunar and solar eclipses occur in the solar system, of which our earth is a part,
but coming to the house later to perform pithru tharpanas at the end of the eclipse period)
அதனால்தான், இறுதியில் ( not in between the two, but both inclusive)
நீங்கள் சொன்னது சரிதான். லோகாயதம் என்றேன்.
லோகாயதம் எனும் வார்த்தைக்கு வலிந்து பொருள் கூறுகிறது நீங்கள் குறிப்பிட்ட இடம்.
லோகம் ஆயதனம் எனும் இரு வார்த்தைகளில் ஆயதனம் எனும் சொல் பொருளைத்தேடி
சேகரிப்பது என்றாலும் அந்தப் பொருள், பிரும்மத்தின் அறிவை ( ஞானம் ) விழைபவர்க்கும்
பொருந்தும். ( நான் முதல் பாராவில் குறிப்பிட்ட பூர்வ பக்ஷிகள் (objectionists ) நாத்திகர்கள் அல்ல.)
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் = பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் " எனும் வள்ளுவனின் வாக்குக் கேற்ப
நடப்பதுவே லோகாயதம். குறைந்த பட்சம் என் அறிவிற்கு எட்டிய வரை. ( For a limited analogy, you may refer to introduction to Philosophy by Des Carte)
//நிற்க. எந்த மார்க்கம்? முதன் முதலில் மனத்துக்கண் மாசிலனாய், அறம் செய்தல்//
அறவழியில் நடக்கவேண்டும். இதில் மாற்றுக்கருத்து என்ன இருக்க இயலும்?
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் வள்ளுவர்.
அறவழி mostly a zone of ethics and morality and by extension universal Love.
தேவர்களுக்குச் செய்யப்படும் "சிறப்பொடு பூசனையும்" அதில் அடங்குமோ ? தெரியவில்லை.
அறவழியில் நிற்பவனுக்குத்தானே ஆனால் கருமங்களைப் பற்றிய சிந்தனைகளும் வரும்.
மேலும் சிந்திக்கவேண்டும். நீங்கள் அல்ல. நான்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
அப்படியா ஐயா - பொருளியலோர் என்ற பொருளில் உலகாயதம் - நல்லது - பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை எனினும், பொருளினும், அருள் இல்லாமல் இருத்தல் அதினும் கொடிது.
ReplyDelete