ஆன்மாவெப் போதும் அடைந்துளதே யானாலுன்
தான்மடமை யாலடையா தாயமரு - மான்மடிய
வெய்தப்பெற் றாற்போ லிங்குந்தன் கண்டவணி
யெய்தப்பெற் றாற்போல வே.
கண்டவணி: கண்டம் + அணி = கழுத்தில் அணியும் அணிகலன் - கழுத்து மாலை / நகை
விளக்கம்:
ஆன்மா எப்போதுமே எல்லா இடத்திலேயும் அடைந்துள்ளதாகவும், எல்லா இடத்திலேயும் நிறைந்துள்ளதாகவும் இருந்தாலும்,
தன் அறியாமை என்னும் மடமையினால் தன் உண்மை நிலையை அடையாமல் இருக்கின்றது. நான் இந்த உடல் என்கிறது அந்தப் பேதை.
ஒருவர் கழுத்தில் சிறியதாய் விலை உயர்ந்த அணிகலன் அணிந்திருக்கிறார். ஒரு சமயம் அது தொலைந்துவிட்டது என்கிற எண்ணத்தில் எல்லா இடத்திலும் தேடிக்கொண்டு இருக்கிறார். திடீரென, அந்த நகை வேறெங்கும் இல்லை, தன் கழுத்தில் தான் உள்ளது என உணர்ந்தால், அவர் எப்படி நிம்மதி அடைவாரோ, அது போல,
தன் அறியாமை மடிந்தாலோ, தனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தது போல உணர்வார். ஆன்மாவின் உண்மையான சொரூபம் எப்போதும் பிரகாசித்து ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும், அறியாமையினால், அதனை அறியாமல் இருக்கின்றார்.
---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்
அருமையான உவமை.... :-).
ReplyDeleteஆம், மதுரைதம்பதி, அருமையான உவமை.
ReplyDeleteவைத்துக்கொண்டே இல்லை என்று நினைத்து எங்கெல்லாமோ தேடுகிறார் மனிதர் என்பதை நயமாக காட்டுகிறது.
நல்லாச் சொன்னீங்க.இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடுவார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
ReplyDeleteபொருத்தமான சொற்கள் தி.ரா.ச ஐயா.
ReplyDeleteஜீவா சார், இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் ன்னு நினைக்கிறேன்
ReplyDeletehttp://groups.google.com/group/illam/browse_thread/thread/39e7af7be4f10f5f/309a134f31cb992e
சுட்டிக்கு நன்றி திவா.
ReplyDeleteஅந்தக் குழுமத்திலும் இப்போது இணைந்துள்ளேன்.