Monday, October 01, 2012

அனுமனை அனுதினம் நினை


நேற்று இங்கே திரு. ஓ.எஸ். தியாகராஜன் அவர்களது கச்சேரி நடந்தது.
என்றைக்கு சிவ கிருபை வருமோ
ஓ ரங்க சாயி
போன்ற பாடல்களைப் பாடியதோடு, விருத்தமாக "ஸ்ரீராகவம்" ஸ்லோகத்தினை இராகமாலிகையாக பாடியது இனிமையாக இருந்தது.

விருத்ததைத் தொடர்ந்து என்ன பாட்டு பாடுவார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், "அனுமனை அனுதினம்..." பாடினார்.
அப்பாடலைக் கேட்கையில் தான் உறைத்தது, இதுவரை அனுமன் பாடல் எதுவுமே நமது பதிவில் தரவில்லையே என்பது. இதோ இப்போதே, அக்குறை களைய:

இராகம்: இராகமாலிகை
தாளம்: கண்டசாபு
இயற்றியவர்: குரு சுரஜானந்தர்
பல்லவி:
அனுமனை அனுதினம் நினை மனமே
விதிவினை மறைந்திடும் இது நிஜமே

சரணம் 1:
தினம் தினம் தவறுகள் செய்கின்றோம்
மனம் குணம் மாறியே நடக்கின்றோம்
பணம் பணம் என்றே தவிக்கின்றோம்
குணநிதி அனுமனை மறக்கின்றோம்

சரணம் 2:
பக்திக்கு முதலிடம் தந்தவன்
சத்திய ராமனை கவர்ந்தவன்
பக்தரின் உள்ளத்தில் நிறைந்தவன்
பக்தியின் திலகமாய் உயர்ந்தவன்

சரணம் 3:
ராமா ராமா என பஜிப்பவன்
ராமன் சேவையை இரசிப்பவன்
ராம நாமத்தை புசிப்பவன்
ராமர் பாதத்தில் வசிப்பவன்
-----------------------------------------
ஓ.எஸ். தியாகராஜன் அவர்கள் பாடியிருப்பதை இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

மேலும், இப்பாடலை பரத் சுந்தர் பாடிப் பதிவேற்றியுள்ளது இங்கே கேட்கலாம்:

5 comments:

  1. அனுமனை தினமும் நினை மனமே !!

    அனுமனை நினைப்பதும்
    அனுமனை ஆராதிப்பதும்
    அனுமனுக்கேற்ற இசை பாடுவதும்
    அந்த அனுமனின் இதயத்திலே குடி கொண்ட
    இராமன் சன்னிதானத்திற்கு வந்தவருக்குத் தான்
    சாத்யம்.

    சிரஞ்சீவியான அனுமன்
    ஜீவியின் வலைக்குள் வரவில்லை.
    ஜீவியின் இதயத்துக்குள் வந்திருக்கிறான்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  3. அப்படியா. இங்கேயும் நடந்தது, ஆனால் எங்களுக்கு போக முடியவில்லை :(

    அனுமனைப் பணிவோம். தினம் தினம் நினைப்போம்.

    ஶ்ராம ஜெயம்.

    ReplyDelete
  4. உயர்ந்த கருத்துக்களை கொண்ட பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. அனுமனை அனுதினம் நினை மனமே
    விதிவினை மறைந்திடும் இது நிஜமே

    அருமையான நிறைவான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete