Monday, June 15, 2009

Humility - தமிழில் என்னங்க?

Humility - ஆங்கிலத்தில் அழகானதொரு சொல்!

தமிழில் எப்படிச் சொல்வது?

அகராதியைப் புரட்டிப் பார்த்தால், அது சொல்வது:

தாழ்வு
பணிவு/பவ்யம்/தலைவணக்கம்
செருக்கின்மை

இவற்றைக் காட்டிலும், எனக்குப் பிடித்தது : விநயம்!

அட, விநயம், என்ன அழகான சொல்!

"வித்தைக்கு அழகு விநயம்" என்பார்கள்.

பல கற்று அறிந்து இருந்தாலும், அதனால் தலைக்கனம் இல்லாமல் இருப்பது விநயம்.
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
என்பார் வள்ளுவப் பெருந்தகை.

ஆனால், பல சமயம் இதனை தாழ்வு மனப்பான்மை/கோழைத்தனம் எனச் சிலர் குழப்பிக் கொள்வதும் உண்டு.

எப்படி இதனில் வேற்றுமை அறிவது?
விநயம் உண்டெனில், அங்கு தாழ்வில்லை. ஒருவர் தன் பெருமையை விட்டுவிடுவதில்லை. ஆனால், அப்பெருமை தரும் கர்வமோ, அகங்காரமோ அவரிடம் இருப்பதில்லை. மாற்றாக, அவரிடம் தன்நம்பிக்கை சுடர் விடும்.
நிறைய சாதித்தவர் பெற்றிருக்கும் நிறைவு, அவரது விநயத்தினால் வெளிப்படும்.

இருவரிடையே வாக்குவாதம் ஏற்படும்போது, கோபத்தினால் ஏற்படும் இறுமாப்பு, அவர்களின் வாக்குவாதத்தினையே வளர்க்கிறது. பெரும்பாலும், இதனால், வேறுப்பும், வேதனையுமே மிஞ்சுகிறது. அதற்கு பதிலாக, அவர்கள் விநயத்துடம் அணுகினால், அங்கே நன்மையே பயக்கும்.

எந்த அளவிற்கு அன்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு, அவர்களிடம் விநயம் அதிகமாக வெளிப்படும். ஏனெனில், அகங்காரம் குறைய, ஈகோவின் வெளிப்பாடுகள் குறைய, விநயம் அங்கே அதிகம்.

நமது சமுதாயத்தில், மற்றவர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்களான பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது தலைவர்கள் போன்றவர்கள், விநயத்தோடு செயல்படுவது அவசியம். ஏனெனில், சமுதாயத்தில் இவர்களின் பணி, இறைவனின் பணிக்கு ஒப்பானது. தங்களுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தும் அதே சமயம், அவர்கள் விநயத்தின் அவசியத்தினை அறிந்திருப்பார்களா? உண்மையான அன்பிருந்தால், அறிந்திருப்பார்கள். அன்பு, இறைவனின் பணிக்கு ஒப்பானதொரு செயலினை ஆற்றிடும் பொறுப்பினை அவர்களுக்குத் தந்திடும். அன்பு வார்த்திடும் விநயமானது மனிதனை இறைவனுக்கு ஒப்பானதொரு நிலைக்கு கொண்டு செல்லக் கூடியது.

இறைவனுக்கு ஒப்பானதொரு நிலைக்கு மட்டுமல்ல, இறைவனை உணரவும், இறைவனை அடையவும், வழி வகுக்கிறது.

நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த வமுதனே யமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகி னோக்கிநீ யருள்செய் வாயே.
- திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை.

"நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கி விட்டாய்."
என நாவுக்கரசர் நவில்வது இவ் விநயத்தினால்தான்.

51 comments:

  1. நல்ல சிந்தனை; அழகான விளக்கம் :)

    ReplyDelete
  2. இறைவனுக்கு ஒப்பானதொரு நிலைக்கு மட்டுமல்ல, இறைவனை உணரவும், இறைவனை அடையவும், வழி வகுக்கிறது.//

    காலையில் நல்ல ஆன்மீகம்!!

    ReplyDelete
  3. Anonymous10:08 PM

    அருமை.

    ReplyDelete
  4. விநயம் தூய தமிழ்ச் சொல் இல்லை என்று நினைக்கிறேன்.

    Humility = அடக்கம்

    என்பது பொருத்தமாக இருக்கும். அடக்கமுடைமை என்று ஒரு குறள் அதிகாரமே உள்ளது.

    "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்"

    என்ற குறளை ஒப்பு நோக்கலாம்.

    ReplyDelete
  5. // ஏனெனில், சமுதாயத்தில் இவர்களின் பணி, இறைவனின் பணிக்கு ஒப்பானது. தங்களுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தும் அதே சமயம், அவர்கள் விநயத்தின் அவசியத்தினை அறிந்திருப்பார்களா? உண்மையான அன்பிருந்தால், அறிந்திருப்பார்கள். அன்பு, இறைவனின் பணிக்கு ஒப்பானதொரு செயலினை ஆற்றிடும் பொறுப்பினை அவர்களுக்குத் தந்திடும்.///


    ” வித்யா ததாதி விநயம், விநயாத் பாத்ரத்வாம்” என்கிறது வடமொழி சுபாஷிதம்.

    பாத்ரத்வாம் -அருகதை அல்லது தகுதி உடையவனாதல். இதிலிருந்து கல்வி கற்றதன் இலட்சணமே பணிவுதான் என்பது புரிகிறது. பணிவுடையவன் தான் உலக காரியங்களில் பொறுப்பு ஏற்க தகுதி உடையவன்.

    பணிவற்றவர் கல்வி தகுதிகள் பல இருப்பினும் கல்லாதவரே.

    நாவுக்கரசரின் நல்லதொரு பாடலை எடுத்து சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  6. வாங்க கவிநயாக்கா.

    வாங்க தேவன்மயம்.

    வாங்க புகளினி.

    ReplyDelete
  7. வாங்க ரவிசங்கர்!

    அரசவையில் மன்னன் அரியணையில் அமைதியாய் அமர்ந்திருக்கிறான். அவனை பாடி பரிசு பெற புலவர்கள் வந்திருக்கிறார்கள்.
    ஒரு புலவர் மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கிறார். அவரைப் பார்த்து, ஆகா, இந்தப் புலவர் அடக்கமாய் இருக்கிறார் என்று சொல்லலாம்.
    ஆனால், அதே சமயம், மன்னனை எல்லோரும் புகழ்ந்து பாடி இருப்பினும், அவனுக்கு செருக்கு ஏற்படாமல், அமைதியாய் இருக்கிறான் என்றால், அப்போது - அட, இந்த மன்னனுக்கு அடக்கம் அதிகம் எனச் சொல்லுவதில்லை. அந்நிலைக்கு சரியான சொல் 'விநயம்'.

    ReplyDelete
  8. வாங்க கபீரன்பன் ஐயா,
    மேற்கோளுக்கு நன்றி.
    பணிவே பாங்கெனக் கொண்டாற்பின்
    பாரினில் உண்டோ பகை!

    ReplyDelete
  9. மிக அருமையான கட்டுரை ஜீவா சார்.
    நாவரசரின் இந்தப் பாடலும் எளிதாகப் புரிகிறது.

    விநயம்/அடக்கம்/பணிவு போன்றவை எல்லாம் எதோ கோழைத்தனத்தால் வருவதாக ஓர் எண்ணத்தையும் உருவாக்கிடுகிறது. எல்லாம் ஒருநாள் புரியும் என்றே செல்ல வேண்டியிருக்கிறது. :)


    நல்ல சிந்தனையைப் பகிர்ந்தமைக்கு நன்றி. :)

    ReplyDelete
  10. அருமை

    /வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
    விநயம் நின்ற நாவினாய் வா வா வா/

    என்று சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.

    ஞாலத்தின்
    ஞானத்திற்கு
    வினயமே
    வித்து என்பதை
    விளக்கமாக
    விரிவாக சொல்லுகிறது.

    ReplyDelete
  11. அனைவரின் விநயமும் ரசிக்கும்படி இருக்கின்றது. நன்றி.

    ReplyDelete
  12. வாங்க மௌலி சார்! நன்றி!

    ReplyDelete
  13. வாங்க திகழ்மிளிர்,
    பாரதியின் வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள்!
    விநயம் 'நின்ற' நா பாரதி விளிக்கிறான்.
    விட்டு விலகாமல், நிற்க வேண்டுமாம்!

    ReplyDelete
  14. வாங்க கீதாம்மா, நன்றி!

    ReplyDelete
  15. சொல்ல வேண்டுவனவற்றையும் வெகு விநயமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    அதுவும் இக்கட்டுரையின் சிறப்புக்களில் ஒன்று.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. விநயம் மிகவும் பொருத்தமானதுதான்.

    ReplyDelete
  17. வாங்க ஜீவி ஐயா,
    வாழ்த்துக்களுகு நன்றிகள்.

    ReplyDelete
  18. வாங்க டாக்டர் ஐயா,
    வருகைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  19. வித்யா ததாதி விநயம் எனும் சுபாஷிதத்தை கபீரன்பன் ஐயா மேற்கோள் காட்டியதைப் படித்தபோது 1994ல்
    நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது.

    நான் 1994ல் தஞ்சையில் ஹெச்.ஆர்.மேலாளர் எனும் நிலையிலிருந்து சென்னைக்கு அலுவலர்
    பயிற்சிக்கல்லூரிக்கு பேராசிரியராக மாற்றப்பட்டேன். அங்கு ஒரு காலை கல்லூரி வாயில் நுழைந்த உடனேயே கண்ணில் பட்டது கல்லூரி துவக்க வாயிலில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம்.

    அது " வித்யா ததாதி வைபவம் " என்பதாம். நான் உள்ளே சென்று கல்லூரி முதல்வரிடம்
    இந்த சொற்தொடரில் வைபவம் என்று இருக்கிறது. சுபாஷிதானியில் விந்யம் என்று தான்
    இருக்கிறது என்றேன்.

    முதல்வர் என்னைப்பார்த்தார். இன்னமும் நீங்கள் உங்கள் பதவியில் பொறுப்பு ஏற்றுக்கொள்ள‌
    க்கூட இல்லையே ! அதற்குள் குற்றம் சொல்லத்துவங்கிவிட்டீரே ! என்றார்.

    பொறி தட்டியது போன்ற உணர்வு ஏற்பட்டது எனக்கு.

    தெரிந்தவர் தெரிந்ததை தெரியாதவருக்குத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் விதத்தில்
    தகுந்த நேரத்தில் எடுத்துரைப்பது அல்லவோ சரியாகும் ! நாம் உண்மையிலேயே கல்வியாளர் என்பதற்கு ஒரு சான்றாகும் . ஆதலின் மெளனமானேன்.

    அவர் தொடர்ந்து
    விநயம் என்று இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இங்கு நுழைபவர்களுக்கு
    நாம் தரும் பயிற்சியினால் அவர்கள் வாழ்வுக்கு ஒரு ப்ரயோஜனம் லாபம் இருக்கவேண்டும்.
    அதனால் வைபவம் ( சிறப்பு ) எனும் சொல்லும் சரியே. இது ஒரு கான்டக்சுவல் அபரேஷன்
    அவ்வளவுதான் என்றார். possibly intentional .

    நுணங்கிய கேள்வியர் அல்லார், வணங்கிய‌
    வாயினர் ஆதல் அரிது

    எனும் வள்ளுவம் நினைவுக்கு வந்தது.
    நமக்கு என்னதான் தெரிந்திருந்தாலும், " வணங்கிய வாயினராக " இருத்தலே தெரிந்ததற்கு
    அடையாளம்.

    விந‌யம் எனும் சொல்லில் வணங்கிய வாயினராக இருத்தல் எனும் பொருளும் அடங்கும்.

    நிற்க. விநயம் எனும் சொல் தமிழ்ச்சொல்லா ? இல்லை போல்தான் இருக்கிறது. இருப்பினும்
    ஒரே தமிழ் வார்த்தையில் விநயம் என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியுமா
    என்றும் தெரியவில்லை.

    சுப்பு ரத்தினம்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  20. ஆகா, அருமை!
    அருமையான சம்பவத்தினை மேற்கோள் காட்டியது, பதிவுக்கு மேலும் மெருகூட்டுகிறது, மிக்க நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  21. Vinayam - A great description of the inherent quality of Tamil people! The attribute that allows us to scale great heights and contribute to the world. Thanks for the description and bringing it up to our consciousness.

    ReplyDelete
  22. Thanks Tamil Nadu Blog!

    ReplyDelete
  23. ஆஹா எனக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை இந்த விநயம்.. இதைச்சொல்லும்போதே ரொம்ப ஒய்யாரமா அதே சமயம் தன்னடகத்தோட இருக்கற மாதிரி தெரியும்...

    ReplyDelete
  24. வாங்க கிருத்திகா மேடம், அழகாச் சொன்னீங்க, விநயத்தின் சொல் நயத்தினை!

    ReplyDelete
  25. विनय=humility சரியானு ஆழ்ந்து யோசிச்சாப் புரியலை. humility=meekness of mind or spirit அப்படினு எடுத்துக்கும்போது வருமா??? புரியலை, கற்றறிந்தோரே சொல்லணும்.

    மாணவனை அல்லது சீடனை विनेय: என்று குறிப்பிடுவதுண்டு. இந்தப் பதிவைப் படிச்சதிலே இருந்து மனசைக் குடைகிறது அர்த்தம் பொருந்தி வருமானு! :))))))))))))

    ReplyDelete
  26. //மாணவனை அல்லது சீடனை विनेय: என்று குறிப்பிடுவதுண்டு//

    வினேயஹ எனும் சொல் இருப்பதாகத் தெரியவில்லை. பண்டர்கரை கன்ஸல்ட் செய்தேன். விதேயஹ என்ற சொல் இருக்கிறது.
    " தங்கள் விதேயன் " என்று பல திருமணப் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். விதேய ( நான்காவது 'த' ) எனும் சொல்லுக்கு
    பணிவுள்ள, அடக்கமுள்ள, சொற்படி நடக்கின்ற எனும் பொருள் வரும்.

    ஹ்யுமிலிடி எனும் சொல்லின் மூலத்தை ஆராய முற்படின் ஒரு பண்டோராஸ் பாக்ஸை திறக்கும் கதை தான்.
    அதை ஆராயுமுன் ஹ்யுமிலிடி எனும் சொல்லுக்கு சமீபத்தில் இருக்கும் மற்ற சம்ஸ்க்ருத சொற்கள்.
    विनय vinaya m. humility
    नति nati humility
    नम्रता namrataa f. humility
    अनुत्सेक anutseka m. humility
    अमानित्व amaanitva n. humility
    शालीन zaaliina n. humility
    विनीतत्व viniitatva

    சம்ஸ்க்ருத அகராதிகளில் வினயம் என்ற சொல்லுக்கு ஹ்யுமிலிடி என்றே பொருள் சொல்கிறார்கள். ஆயினும்
    humility
    க்கு மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்லும் பொருளான meekness of mind or spirit
    அதுவும் இவ்வார்த்தையின் மூலமான
    ஹ்யுமிலிஸ் என்பதற்கு உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    சொல்லப்போனால், இது போன்ற பல வார்த்தைகள், ஆங்கிலத்தில் இருக்கின்றன. இவற்றினை
    double-edged sword words
    எனவும் சொல்வார்கள். பாஸிடிவ் ஆகப் பேசும்பொழுது ஒரு பொருளும் நெகடிவ் ஆக பேசும்பொழுது மற்றொரு பொருளும்
    தெரியப்படும் வார்த்தைகள் இவை. இதே போல்
    pride
    என்று ஒரு வார்த்தையும் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த வார்த்தை
    may, which means both may and may not.

    இன்னொரு செய்தி. பல சொற்கள் ஆங்கிலத்தில் விக்டோரியன் ஈராவில் அல்லது அதற்கு முன்பே கொண்ட பொருட்களைத்
    தற்சமயம் த்யாகம் செய்துவிட்டன. சில சொற்கள் மூலப்பொருளுக்கு முற்றிலும் எதிர்மறையான பொருளையும் கொண்டுள்ளன.


    இருந்தாலும், ஹ்யுமிலிடி என்னும் சொல்லுக்கு,
    being humble, modest, ability to control one's pride
    எனும் பொருளே தற்சமயம் பெரும்பாலும் கையாளப்படுவதாக மாக்மிலன் தொகுப்பு கூறுகிறது.
    இன்னொரு இடத்தில்,
    Humility is the ability to be corrected or accept correction. To listen to reason. Modesty, lack of pride. Lack of vanity.
    என்றும் உள்ளது.
    என்ன ஆச்சரியம் என்றால்,
    humiliate , that is to humble others
    எனும் வார்த்தைக்கும் இதே லத்தீன சொல் ஹ்யுமிலிஸ் தான் மூலச்சொல்.

    The term "humility" is derived from the Latin word "humilis", which is translated not only as humble but also alternatively as "low", or "from the earth", and "humus", humid, which in the past it was believed that emotions, diseases, and depressions were caused by imbalances of body waters.[1] Because the concept of humility addresses intrinsic self-worth, it is emphasized in the realm of religious practice and ethics where the notion is often made more precise and extensive. Humility as a religious or spiritual virtue is different from the act of humiliation or shaming though the former may follow as a consequence of the latter.[dubious – discuss]

    பைபிள் எழுதப்பட்ட காலத்தில் இந்த வார்த்தைக்கு பொருள் கொள்ளப்பட்டது எவ்வாறு என்பதை இங்கே பார்க்கலாம்:
    http://www.answers.com/topic/humility

    என்ன இருந்தாலும், ரவீந்த்ரனாத் தாகூர் வாசகம் ஒன்று கண்ணில் பட்டது.
    "We come nearest to the great when we are great in humility." - Rabindranath Tagore

    இந்தப் பொருளிலே தான் நண்பர் ஜீவா எழுதியிருக்கிறார் .

    எடிமலாஜி, ஃபிலாலஜி, லிங்குஸ்டிக்ஸ் எல்லாமே ஒரு கடல்.
    அடிக்கடி உள்ளே போவேன். வெளிலே வரமுடியாது திணறி நிற்பதும் உண்டு.
    அவை
    அரபிக் கடலா இல்லை அட்லாண்டிக்கா !!
    அது எதுவோ !
    அந்தக் கடலுக்குள்ளே அமிழ்ந்தால்,
    பஜகோவிந்தத்தில் சொன்ன கதை ஆகிவிடுகிறது. !
    ஆமாம். டுக்ரங்கரணே ஆகிவிடும். ( எனக்கு )

    இது ஒரு உரத்த சிந்தனையே.
    முடிவல்ல.
    துவக்கமாகவும் இருக்கலாம்.
    எனிவே ஹைலி இன்டரஸ்டிங்.
    தேங்க் யூ மேடம் கீதா ஸாம்பசிவம்
    ஃபார் ஸ்டார்டிங் எ ந்யூ மீனிங்ஃபுல் டிஸ்கஷன்.

    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com








    Contents
    [hide]

    Humility is the ability to be corrected or accept correction. To listen to reason. Modesty, lack of pride. Lack of vanity.

    ReplyDelete
  27. கீதாம்மா,
    பதிவைக் காட்டிலும் பெரிய மறுமொழியினையும் விளக்கங்களையும் சூரி ஐயாவிடம் இருந்து வரவழைத்தமைக்கு, தங்களுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  28. நீண்ட விளக்கங்களை அடுக்கடுக்காய் அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சூரி ஐயா.
    குறிப்பாக >>"ரவீந்த்ரனாத் தாகூர் வாசகம் ஒன்று கண்ணில் பட்டது.
    "We come nearest to the great when we are great in humility."<<
    அருமை!

    ReplyDelete
  29. विनेय: என்னோட அகராதி சென்னை Samskri t Education Society, compiled by S.V.Radhakrishna Sasthri, அதிலே விதேயன், விநேயஹ இரண்டும் இருக்கு.

    विनेय: = "ய" வுக்கு அடுத்துள்ள":" விஸர்கம் அடுத்த வாக்கியத்துக்கு ஏத்தாப்போல மாறுமோனு நினைக்கிறேன். எனக்கு இலக்கணத்தில் கொஞ்சம் அறிவு குறைச்சல் தான். அதனாலே சரியாச் சொல்லத் தெரியலை. :(((( மற்றபடி சூரி சாரின் விளக்கங்கள் எப்போவும் போல் அருமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.

    ReplyDelete
  30. Some thoughts on vinayam.
    Sri Vijayendrar of kanchi mutt composed a verse on Maha peryavaa during his 100th year Jayanthi. The concluding verse says "vinayEna PraarthayEham vidhyayaam bOdhayamE kuru" (I pray with vinayam, that I may be blessed with Knowledge).

    There is an incident about Vinayam in Adhi shankara's life. We all know the Kanadhara sthothram he composed for which lakshmi conferred the boon. There is a last stanza in that which is not found in the sthothra books and which people generally don't recite. It is a personal appeal by Shankara asking for "Vinayam".

    After praying to Lakshmi to bestow riches to the poor lady, Shankara realized that he did not ask anything for himself. Lakshmi has come by obliging his call. If he tells her that he has called her to help someone else, what would she think? "I know what to do for that lady. What do you want from me, since you called me." If he says that he does not want anything - truly he was not in need of any material thing- that would amount to insulting her. So he must ask for some boon from her.

    What is that he is in need of - shankara quickly thinks. Then he realizes that he is proud that his prayers are immediately answered and Gods are ready to heed his call. But this pride is not good. Thinking on these lines, Shankara understands what he is in need of. He needs to have 'vinayam'. This vinayam is that which neutralizes pride. His power of prayer or worship or meditation should not make him proud of what he is capable of. He must have vinayam all the time he prays or worships or when gods appear to him in response to his prayers. He then prays to Lakshmi to grant him 'Vinayam'.

    I think one can understand what is meant by vinayam from this. This explanation has been given by Paramacharya

    ReplyDelete
  31. //I think one can understand what is meant by vinayam from this. This explanation has been given by Paramacharya //

    Of Course, Thank You, for sharing this.

    ReplyDelete
  32. Anonymous11:25 AM

    tamil font giving maximum trouble. So proceeding with English.

    Let me thank Ms.Jayashree for the information that KANAKADHARA STOTRAM contains yet another stanza which is not found in usual books. I know so far that the last stanza is
    STHUVANTHI YE STHUTHIBIRMOOBIRANVAHAM
    THRAYEEMAYEE THRIBUVANA MATHARAM RAMAM
    GUNAADHIKAA GURUDHARA BHAGYA BHAJINO
    BHAJANTHI THE BHUVI BHUDHABHAVINAASHAYAAHA.
    In case, there is one more stanza after this, I would request Madam Jayashree to please illustrate the same here.
    It is also said, that Adhi Sankara, when he completed all the One Hundred Stanzas of Soundarya Lahari, could not offer a nivedhanam to the Goddess suited enough for the occasion. What he says at the last stanza is: I am giving therefore as the nivedhana the very ability You showered on me to compose these above stanzas. ( 99 of the Soundarya Lahari). This is also usually quoted as the Best Example of Vinaya .
    subbu rathinam.

    ReplyDelete
  33. Anonymous11:40 AM

    கனகதாரா ஸ்தோத்திரத்தின் கடைசி ஸ்லோகம்
    ஸ்துவந்தி யே என துவங்குவது . இதற்குப்பிறகும்
    ஒரு பாரா இருக்கிறது என்பதை நான் இப்பொழுது
    தான் கேள்விப்படுகிறேன். இந்தச் செய்திதனைத்
    தந்த மேடம் ஜெய ஸ்ரீ அவர்கட்கு உளமார்ந்த
    நன்றி.

    இயன்றால் அந்த பாராவை எடுத்து எழுதினால்
    நல்லது.

    சுப்பு ரத்தினம்.
    unicode font suddenly gives problems after updating iE8.

    ReplyDelete
  34. I feel bad to say that I am not able to give it readily. It is found in Deivatthin Kural.I don't have the book with me right now.If someone has Deivatthin kural, kindly refer to it for the last satnza. An artist made a depiction of this prayer for vinayam, for display in the Arts exhibition conducted in Hosur in connection with the 100th jayanthi of ParamacharyaL.

    ReplyDelete
  35. தெய்வத்தின் குரலில் தேடுகின்றேன். கனகதாரா ஸ்தோத்திரத்தில் இல்லை, தெய்வத்தின் குரல் என்னிடம் இருக்கும் பாகங்கள் அனைத்திலும் பார்த்து விடுகிறேன். நன்றி திரு சூரி அவர்களுக்கும், ஜெயஸ்ரீ அவர்களுக்கும்.

    ReplyDelete
  36. "ஸம்பத்கராணி ஸகலேந்த்ரியா நந்தநாநி
    ஸாம்ராஜ்ய தாந நிரதாநி ஸரோருஹாக்ஷி
    த்வத் வந்தநாநி துரிதோத்தரணோத்யதாநி
    மாமேவ மாதரநிசம் கலயந்து நாந்யே"

    என்பது கடைசி ஸ்லோகம். இது பல புத்தகங்களில் இருப்பதில்லை. இது தெய்வத்தின் குரல் 5 ஆம் பாகத்தில் இருக்கிறது. அதில் இருப்பதை அப்படியே சுருக்கி கீழே தருகிறேன். பரமாசார்யார் பேசுவது போலவே புத்தகத்தில் இருப்பதால், அப்படியே கீழே சொல்லியிருக்கேன்.

    ஆசார்யார் ஸ்தோத்ரம் பண்ணினார், கனகவர்ஷம் ஆச்சு, ஆனா தனக்குன்னு ஏதும் கேட்காம ஸ்தோத்ரத்தை முடிக்கறது சரியல்ல, அவ்வாறு செய்தால் அது லக்ஷ்மிக்கு அவமரியாதை செய்தது போல என்று நினைத்தாராம். ஆனால் சன்யாசியான தனக்கு எதற்கு பொருள், வேறு என்ன கேட்பது என்று நினைத்து, க்ஷண நேரத்தில், முடிவாக "என்றும் உனக்கு நமஸ்காரம் பண்ணுவதே எனக்குப் பெரிய செல்வம், அந்த நமஸ்காரத்தை என்றும் பண்ண அனுக்ரஹி" என்கிறார்.

    ReplyDelete
  37. மதுரையம்பதி அவர்கள் குறிப்பிட்ட‌
    ஸம்பத்கராணி சகலேந்திர்ய நந்தனானி என்று துவங்கும் ஸ்டான்ஸா கனகதாரா ஸ்தோத்திரத்தில்
    ஏற்கனவே 13வது ஸ்டான்ஸாவாக இருக்கிறது.

    திருமதி ஜெயஸ்ரீ குறிப்பிட்டது, ஸ்துவந்தி என்று துவங்கும் 21வது ஸ்டான்ஸாவுக்குப் பிறகு
    இன்னொன்றும் இருக்கிறது என்றார்கள். அது மதுரையம்பதி குறிப்பிடுவது அல்ல. மேலும்
    மதுரையம்பதி குறிப்பிடும் ஸ்டான்ஸா கனகதார ஸ்தோத்திரத்தில் மட்டும் இல்லாது
    கல்யாண விருஷ்டி ஸ்தவஹ என்னும் பாமாலையிலும் (அதுவும் ஆதி சங்கர க்ரந்தாவளிதான்)
    21வது ஸ்லோகமாக உள்ளது.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  38. மெளலி சொன்னதைச் சரிபார்த்துட்டு மறுக்கணும்னு நினைக்கிறதுக்குள்ளே சூரி சார் முந்திண்டிருக்கார். என்னுடைய தேடல் தொடர்கிறது. புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார நேரம் அரிதாய் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு. கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு

    ReplyDelete
  39. வணக்கம் சூரி சார்.

    நீங்க 13வது ஸ்டான்ஸா என்கிறீர்கள், என் தாய் 16ஆம் வரி என்கிறார்.
    [மொத்தமாக அவர் சொல்லச்-சொல்ல எழுதிவிட்டேன். பின்னாடி 2 பதிவாகப் பொருளுடன் எழுத எண்ணம்:)]

    ஆனால் கல்யாண விருஷ்டி ஸ்தவத்திலும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. தெரிவித்தமைக்கு நன்றி.

    கீதாம்மா,

    ரொம்ப மெனக்கிட வேண்டாம்,
    நான் எனது முந்தைய பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேனே?, தெய்வத்தின் குரல் 5ஆம் பாகம், 259ஆம் பக்கம் பார்க்கவும். :)

    ReplyDelete
  40. என் கிட்டே இருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் உள்ள அனைத்துப் புத்தகங்களிலும் பதினாறாவது ஸ்லோகமாய்
    "ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனானி" என ஆரம்பிக்கும் ஸ்லோகம் உள்ளது. ஆனால் திருமதி ஜெயஸ்ரீ சொன்னது அது இல்லைனு நினைக்கிறேன். தெய்வத்தின் குரல் ஐந்தாம்பாகத்தில் இதைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரை படிச்சிருக்கேன். அதையும் திரும்ப ஒருமுறை பார்க்கிறேன். நன்றி.ம்ம்ம்ம் ஒன்றாம் பாகத்தில் கூட வந்திருக்கோ??? சங்கர விஜயம் எழுதி இருக்கும் பாகத்தில் இருக்குனு நினைவு.

    ReplyDelete
  41. மெளலி தேடினாப்போல் நானும் நான்காம்பாகம் ஐந்தாம்பாகம இரண்டிலும் தேடினேன். நான்காம் பாகத்தில் குரு என்ற தலைப்பில் கீழ்க்கண்டவைகள் இடம் பெற்றிருந்தன.தெரிந்த மட்டும் பதில் சொல்கிறேன் என்று உபநிஷத் ரிஷி சொன்னாரே, அந்த உண்மை உள்ளம், அதோடு குரு ஸ்தானத்திலிருந்த போதிலும் அவருக்கு இருந்த humility (விநய ஸம்பத்) இந்த நாளில் பார்க்க முடியுமா?? சிஷ்யன் என்றாலே விநீதன். அவன் விநயரூபமாக இருக்கவேண்டும் என்பதோடு நிற்காமல் இப்படி குருவும் விநயமாயிருந்திருக்கிறார்.
    தெய்வத்தின் குரல் நான்காம்பாகம்
    குரு ஸ்ரத்தை பரிப்ரச்னம்


    கீழே உள்ளவை ஐந்தாம்பாகத்தில் சங்கரரின் சரிதத்தில் பொன்மழை பொழிந்தது பற்றிய அத்தியாயத்தில் கண்டவை! இவைகளைத் தவிர திருமதி ஜெயஸ்ரீ சொன்ன ஸ்லோகம் கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் சொல்லிக் கொள்கிறேன். நன்றி,பின்னூட்டங்களைப் பொறுமையாப் படிச்சதுக்கும், பின்னூட்டங்களை வெளியிட்ட ஜீவாவுக்கும்




    இந்த ஸ்தோத்தரத்தில் ஒரு பாடப்படி 18 ஸ்லோகம்,
    இன்னொன்றின்படி 20-21 ச்லோகம் என்று இருந்தாலும் இந்த
    ஒரு ஸ்லோகத்தில்தான் செல்வத்துக்கு அதிதேவதையான
    லக்ஷ்மியிடம் பொருட் செல்வம் வேண்டுவது. அடுத்த
    ஸ்லோகத்தில் வேண்டுமானால், "இஷ்டாம் புஷ்டிம்
    க்ருஷீஷ்ட மம"என்று தாம் விரும்பிக் கேட்கிற (தமக்காக
    அல்ல, அந்த ப்ராம்மண தம்பதியை முன்னிட்டுக் கேட்கிற)
    செழிப்பைத் தரட்டும் என்று சொல்லும்போதும் தனத்துக்கான
    ப்ரார்த்தனையை லீவீஸீt செளிணிதிருப்பதாக
    வைத்துக்கொஷீமீளலாம். மற்றபடி ஸ்தோத்ரம் முழுக்கப்
    பெருமாளும் தாயாரும் எப்படிச் சேர்ந்து சேர்ந்து அநுக்ரஹ
    மூர்த்திகளாக இருக்கிறார்கஷீமீ, (அவர் கார்மேகம் போல
    வ்யாபித்து இருக்கும்போது, மேகத்துக்கு நடுவில் மின்னுகிற
    மின்னலைப்போல் இவஷீமீ எப்படி அவருடைய
    வக்ஷஸ்தலத்தில் ஸ்வர்ண காந்தியுடன்
    ப்ரகாசிக்கிறாஷீமீ-என்பது போன்ற விஷயங்கஷீமீ), ஸர்வ
    சக்தியான பராசக்தியின் ஒரு ரூபமாகவே இருக்கப்பட்ட

    ஸர்வ
    சக்தியான பராசக்தியின் ஒரு ரூபமாகவே இருக்கப்பட்ட
    லக்ஷ்மி இன்னும் என்னென்ன மூர்த்திகளாக இருக்கிறாஷீமீ,
    11/3/2008 12:21 றிவி
    லக்ஷ்மீ ரூபத்தில் அவளுடைய வர்ணனை என்ன, பெருமை
    என்ன-என்றிப்படியான ஸமாசாரங்கஷீமீதான் இருக்கின்றனவே
    தவிர திரவியத்திற்கான ப்ரார்த்தனை இல்லை.
    இப்படி அநேக விஷயங்களை, கவிதை அழகுகளை, பக்தி
    பாவங்களைத் தெரிவித்து ச்லோகங்கஷீமீ சொல்லிக்கொணடு
    போகும்போது ஒரு ச்லோகத்தில்தான், எதற்காக ப்ரார்த்திக்க
    ஆரம்பித்தாரோ அந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.
    'லோக மாதாவிடம் போளிணி ரொம்ப ஒன்றும் முறையிட
    வேண்டியதில்லை. துளிப்போறக் காட்டி விட்டாலே
    போதும்'என்கிற ரீதியில் பாடியிருக்கிறார். அதிலேயே
    முறையீட்டை ஸாரமாக வடித்துக் கொடுத்து விட்டார்!
    'ரொம்ப தீனமாக, பக்ஷிக் குஞ்சு மாதிரி ஸ்வயமாக ஒன்றும்
    பண்ணிக்கொஷீமீளத் தெரியாமலிருக்கும் இந்த அம்பாளுக்கு

    பி.கு. இதிலே வரும் எழுத்துப்பிழைகள் ஃபாண்ட் மாற்றத்தின்போது ஏற்பட்டது. சரிசெய்யலை, மன்னிக்கவும்.

    ReplyDelete
  42. இங்கே தேடலின் நல்ல சுலோகங்களை மறுமொழிகளாய் வாசிக்கும் அனுபவத்தினைத் தந்தமைக்கு அனைவருக்கும் - ஜெயஸ்ரீ அவர்கள், சூரி ஐயா, கீதாம்மா மற்றும் மௌலி - அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
    தேடல் தொடருட்டும், அதனால் அனைவருக்கு நன்மையே பயக்கும்.
    பரமாச்சாரியாரின் அருளாசி அனைவரையும் சென்றடையட்டும்.

    ReplyDelete
  43. தேடல் தொடர்ந்தது, என் அண்ணாவிடம் கேட்டதில் அவர் சொன்னது எல்லா ஆதிசங்கரர் ஸ்லோகங்களிலும் சொல்லப் படுவதாய் அவர் இன்னொரு தேவி ஸ்லோகத்தின் கடைசியில் சொன்ன "ந ஜானே மந்த்ர, ந ஜானே தந்த்ர, ந ஜானே பூஜா விசாரம்/விதானம்(??)" என ஆரம்பிக்கும் ஸ்லோகத்தைத் தான் சொல்லுகின்றார். இன்னும் இரண்டு நாட்களுக்குள் அந்த ஸ்லோகத்தைப் பூரணமாகப் போடுகின்றேன். சம்ஸ்கிருத மொழி மாற்றத்தோடு. நன்றி. மூலம் தேவி பாத ஸ்லோகம்?? சரியா நினைவில் இல்லை, அதையும் பார்த்துட்டுப் போடுகிறேன்.

    ReplyDelete
  44. न जानामि दानं न च ध्यान योगम्
    न जानामि तन्त्रं न च स्तोत्रमन्त्रम
    न जानामि पूजां न च न्यासयोगम
    गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी

    न जानामि पुण्यं, न जनामि तीर्थम्
    न जानामि मुक्तिं लयं वा कदाचित्
    न जानामि भक्तिं व्रतं वापि माता
    गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी

    இந்த சுலோகங்களையா தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இவை பவானி அஷ்டகத்தில் வருவது. ஆதிசங்கரர் சொல்லியது தான்.

    ReplyDelete
  45. இதே தான் கபீரன்பம் முந்திக்கிட்டார்! :P
    இந்த ஸ்லோகங்கள் அனைத்து ஸ்லோகங்கள் முடியும்போதும் கடைசியில் சொல்லப் படுகிறது.

    ReplyDelete
  46. இங்கே சொடுக்கினால் பவானி அஷ்டகம் முழு தோத்திரத்தையும் கண்ணால் படித்தும் காதால் கேட்டும் அனுபவிக்கலாம்.

    ReplyDelete
  47. பாவனி அஷ்டக சுலோகங்களை தேடித்தந்தமைக்கு மிக்க நன்றிகள் கபீரன்பன்!

    ReplyDelete
  48. பவானி அஷ்டக ஸ்லோகமும் என் மனசுக்குப் பொருந்தி வரலை, இன்னிக்குத் தெய்வத்தின் குரல் முதல் பாகம் படிக்கும்போது பவானித்வம் என்னும் அத்தியாத்திற்கு அடுத்த இரு அத்தியாயங்களிலே செளந்தர்ய லஹரியின் கடைசி ஸ்லோகமும் அதற்கான அர்த்தங்களையும் படிச்சேன். இதுவே ஆதி சங்கராசாரியாரின் விநயம் என்றும் பரமாசாரியார் சொல்லி இருக்கிறார்.




    செளந்தர்ய லஹரி கடைசி ஸ்லோகத்தில் ஆதிசங்கரர் மிகவும் விநயமாகச் சொல்லுகின்றார். ப்ரதீப ஜ்வாலாபி: என்று தொடங்கும் அந்த ஸ்லோகத்தில்

    "அம்மா, வாக்கு தேவதை ஆன உன்னை வாக்கினால் துதிக்கின்றேன், இது எவ்விதம் இருக்கிறதென்றால், சூரியனுக்கே கர்பூர ஹாரத்தி காட்டுகிறாப் போல் தான். உன்னை என் வாக்கினால் நான் வர்ணிக்கப் பார்த்தது அப்படிப் பட்ட காரியமே என்கின்றார்.

    மேலும் சந்திர காந்தக் கல்லானது பெளர்ணமி அன்று சந்திரன் தோன்ற ஆரம்பித்ததும், அந்த நிலவொளியை உள் வாங்கிக் கொண்டு நீரை வடிய விட ஆரம்பிக்கும். அது சந்திரனுக்கு அர்க்கியம் கொடுக்கிறாப்போல் இருக்கிறதல்லவோ? அந்த மாதிரியும் உன்னை, உன் அருளை என் உள்வாங்கிக் கொண்டு நான் என்வாக்கினால் துதிக்கிறேன்.

    அடுத்து சமுத்திரத்துக்கு அதன் நீரையே எடுத்து அபிஷேஹம் செய்விக்கிறாப்போல் உன்னை நான் இந்த ஸ்துதியால் புகழ்கின்றேன். அதாவது வாக் சமுத்திரமான உன்னிடமிருந்து பெற்ற வாக்கினாலேயே உன்னையே நான் துதிக்கிறேன். இதில் நானாகச் செய்தது எதுவுமே இல்லை. எல்லாமே உன் அருள் என்கின்றார் ஆசாரியர். இது தான் ஜெயஸ்ரீ விநயத்திற்குக் குறிப்பிடும் ஸ்லோகமாய் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.


    செளந்தர்ய லஹரியில் இரண்டு இடங்களில் இவ்வாறு அதிவிநயமான மனோ பாவத்தை ஆதிசங்கரர் காட்டி இருக்கின்றார். ஓரிடத்தில் த்ருசா த்ராகீ யஸ்யா என அம்பாளின் கடாக்ஷத்தை வேண்டிப் பிரார்த்திக்கிறார். மற்றதில் த்ருதீனாம் மூர்த்தானோ என அவளுடைய சரணாரவிந்த ஸ்பரிசத்தை வேண்டுகிறார். அதுவும் எப்படி?? என்னையும் கூட என்ற அர்த்தம் வரும்படியாக மாமபி எனக் கேட்டுக் கொள்ளுகின்றார். தமக்கும் கூட அந்த அம்பாளுடைய அனுக்கிரஹம் வேண்டும் என ஆதிசங்கரர் மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றார். இதன் மூலம் நாமும் அடக்கத்துடன் எவ்வாறு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும் என நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்…..
    கடைசி ஸ்லோகம்:
    "ப்ரதீப ஜ்வாலாபிர் -திவஸகர-நீராஜநவிதி:
    ஸூதாஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலைவ-ரர்க்யரசநா
    ஸ்வகீயை-ரம்போபி: ஸலிலநிதி-ஸெளஹித்யகரணம்
    த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்!!

    ஆதவனுக்கவன் கிரணத்தங்கியைக்கொண்டாலாத்தி சுழற்றலென்கோ

    சீதமதிக்கவனிலவினொழுகுசிலைப் புனல் கொடுப சரிப்பதென்கோ
    போதியமைக் கடல்வேந்தையவன் புனலான் முழுக்காட்டு முறைமையென்கோ
    நீ தரு சொற்கவிகொடுனைப் பாடியுனத்ருள் பெருமென் நீதியம்மே!!

    ReplyDelete
  49. பதிவாப் போச்சோ?? :(((((((

    ReplyDelete
  50. விளக்கம் அருமையாக இருந்தது கீதாம்மா, மிக்க நன்றி!

    ReplyDelete
  51. நன்றி சொல்லவேண்டியது பரமாசாரியாருக்கும், இன்று எனக்கு இணையம் வெகு நேரம் வராமல் இருந்ததுக்கும். :))))))))))))))

    ReplyDelete