கிராமத்து அதிகாரி சரி, அது என்ன கிரிதாரி? கிரின்னா மலையாமே. மலைக்கு அதிகாரியா?, அல்லது மலையை தூக்கியவரா? ஓ, தன் சுண்டு விரலில், கோவர்த்தன மலையைத் தூக்கி நிறுத்தி, அங்கே இருக்கிற கிராமம், குளிர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படாம, மலையையே குடையா பிடிச்சவாரா! ஓகோ!
அப்புறம் என்ன சொல்லறாங்க, உபகாரி?, பெரிய உபகாரம் செஞ்சவராமே - அப்படி என்ன செஞ்சாரு? ஓ, கதறி அழைத்த பெண்ணின் மானத்தைக் காத்தவராமே. ஆமாங்க அது பெரிய உபகாரம் தான்.
இன்னமும் சொல்லறாங்க என்னவோ, சக்ரதாரி என்று. சக்கரம் கொண்டவரு என்ன செஞ்சாரு?. பிளிரு கேட்டபோது, பதறிப்போய் காப்பதினாராமே. அது என்ன பிளிறு, ஓ அதுவா, இந்த யானைகள் கத்துமே, அந்த சப்தம் தானே பிளிறு.
அட, களிறுனா யானை இல்லையா. களிறு - அதன் சப்தம் - பிளிறு : என்ன சொற்பொருத்தம்!.
அட, ஆமாம், அன்று, முதலை தன் காலைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்தபோது, அக்களிறின் பிளிரிடும் சப்தம் கேட்டு ஓடி வந்து, தன் சக்கரம் விட்டு, அந்தக் களிறைக் காப்பாற்றினாராமே!
இப்பேர்பட்டவரு, யாருங்க, கொஞ்சம் படம் போட்டுக் காட்டுங்களேன்?
குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி:
துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி:
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி:
ஓ, அப்படியா, இவரு கிட்ட நாம என்ன கேட்கலாம்?,
வளர்த்தென்னை இங்கு பரிபாலி. என்னை உன்பால் மிகுந்த அன்பு காட்டுமாறு வளர்த்து விடு.
உன் நாமம் அதைப்பாடி, நற்கதி பெறும் வழிகாட்டு.
களிறு மீட்டதுபோல், களபம் என் அறியாமை போக்கிடு.
துகில் மீட்டியதுபோல், என் அறிவினை மீட்டிடு.
கூக்குரல் கேட்டிட, வந்து காத்திடு.
குடை பிடித்த கிரிதாரி, துகில் மீட்டிய உபகாரி, களிறு மீட்ட சக்ரதாரி என்னை இங்கு பரிபாலி!. நம்ம தமிழ் மறை என்ன சொல்லுது பார்ப்போமா:
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.
- நம்மாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (3042)
...
எண்ணிலா வூழி யூழி
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
களைகணாக் கருது மாறே.
- தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (915)
ஆமாங்க, நீந்திக் கடக்க முடியாத, பிறவிக் கடலைக் கடக்க இவர் உதவியை நாடினால், கடக்க முடியுமாமே.
அலோ, சாரு,
கிரிதாரி - உபகாரி - சக்ரதாரி,
நேரா வந்து இங்கே என்ன பரிபாலிக்கணுமுங்க!
விருத்தம்
குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி,
துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி,
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி,
கிரிதாரி - உபகாரி - சக்ரதாரி,
வளர்த்தென்னை இங்கு பரிபாலி.
பாடுபவர்: ரஞ்சனி & காயத்ரி
குளிர் மழை |
பாடலும் அதற்கேற்ற படமும் வெகு பொருத்தம்.
ReplyDeleteஐயா...
ReplyDeleteதங்களை எனது பதிவிற்கு அழைக்கிறேன். க்ளிக்கவும். தங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். பக்கத்தின் இடதுபுறம் 'கண்ணன் என் காதலன்' என்ற லிங்க்கை க்ளிக்கினால் சில பாடல்கள் இருக்கும்.
நன்றி.
இரா. வசந்த குமார்.
கிரிதாரி ஸார் ! நீங்கள் வரும்போது ஜீவா மட்டுமல்ல, என்னையும்
ReplyDeleteசேர்த்து பரிபாலிக்கவேண்டும்
subbu thatha
http://movieraghas.blogspot.com
வாங்க திரு.வேளராசி ஐயா.
ReplyDeleteதிரு.வசந்த குமார்,
ReplyDeleteவருகைக்கு நன்றி.
தங்கள் பதிவில் கர்ணன் வர்ணணைகள் வண்ணத்தில் மின்னுகின்றன!
வாங்க சுப்பு தாத்தா,
ReplyDeleteகிரிதாரி சார் மறந்தாலும், அவருக்கு நான் ஞாபகப் படுத்துகிறேன்! :-)
அப்படியே, அவர் கிட்டே பக்குவமா சொல்லறேன், இந்த உலகம் முழுதையும் பரிபாலிக்க வேண்டும் என்று!
எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா அவர், அவருக்குத் தெரியாதா, இருந்தாலும்...! :-)
பதிவும் பாடலும் அருமை!
ReplyDeleteவாங்க அகரமார்!
ReplyDeleteExcellent write up.
ReplyDeleteIt makes a good impression when we listen to the song knowing the wording.
Pls keep it up.
வாங்க ரமேஷ் ரங்கன் சார்,
ReplyDeleteநீங்கள் தனிமடலில் சொன்ன திருத்தம் சரியாகத் தான் இருக்கிறது.
'குளிரிடை' என்பதை, 'துளிரிடை' என்று மாற்றி விட்டேன். குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள்.
ஆஹா அழகான விளக்கம். நன்றி.
ReplyDeleteவாங்க ரமேஷ்!
ReplyDeleteபதிவும் படங்களும் அருமை. நன்றி ஜீவா.
ReplyDeleteவாங்க கவிநயாக்கா!
ReplyDeleteஅப்படியே அந்த ராகங்கள் முறையே ஷண்முகப்ரியா, வலஜி, கானடா என்பதையும் சொன்னால், பதிவர்கள் தெரிந்து கொள்வார்களே.
ReplyDelete- சிமுலேஷன்
இராகங்களை கண்டு சொன்னதற்கு நன்றி சிமுலேஷன் சார்.
ReplyDelete