Thursday, September 11, 2008

வயலினை கொன்னக்கோலாக்கிய குன்னக்குடி!

குன்னக்குடி, குன்னக்குடி எனச் சொல்லி, குன்றக்குடியில் பிறந்தவருக்கு, அவர் பெயரே குன்னக்குடியாகி விட்டது!

இசை மேதை குன்னக்குடி வைத்யநாதன், வயலின் வாத்தியத்தில் கோலோச்சி உயர் நிலையில் வீற்றிருந்தார் என்பது நாமெல்லாம் அறிந்திருந்தது.


அது மட்டுமல்லாமல் திரை இசையிலும் அவர் பங்கேற்று பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
இது அவர் இசை அமைத்த ஒரு பாடல்: படம்: திருமலை தேன்குமரி (1970)


அவரது பன்னிரெண்டு வயதினிலேயே, அரியக்குடி இராமானுஜ ஐய்யங்கார், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம் போன்ற புகழ்பெற்ற இசை விற்பன்னர்களுக்கு, பக்க வாத்தியமாக வயலின் வாசித்த பெருமை, இவரைச் சாரும். பின்னாளில் வயலினை முதன்மையாகக் கொண்டு, வயலின் கச்சேரிகளை பெரிதும் நடத்தி, தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். அந்த தனி இடத்தில் அவரது தனி பாணியும், தனித்தன்மையுடன் பிரகாசிக்கும். திரு.ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாயன வித்தவான்களுடன் சேர்ந்தும், திரு.வளையப்பட்டி சுப்ரமணியன் போன்ற தவில் வித்வான்களுடன் சேர்ந்தும் கச்சேரிகளை நடத்தி, இசைக் கருவிகளில் இசை மழைகளை பொழிந்திருக்கிறார். பண்டிட் ஜாகீர் ஹூசைன் போன்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுடன் இணைந்து ஜுகல்பந்தி நிகழ்சிகளையும் தந்திருக்கிறார். தர்பாரி கானடாவில், இவர் இசையமைத்த 'மருதமலை மாமணியே முருகய்யா' பாடல், பாரெங்கும் பிரசிதம். இசையின் மருத்துவ குணங்களில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.

இசையில் தனிப் பெருமையுடன் திகழ்ந்த பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவுக்குப் பின்னர், அவரைப்போல் அந்த வயலினை எடுத்து யார் வாசிப்பார்கள் என்று கேட்கிறார், திரு.சுப்புரத்தினம் ஐயா: துன்பம் நேர்கையில்....

திரு. குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவுக்கு நம் இதய அஞ்சலிகள்.

2 comments:

  1. முதல் வீடியோ ஏனோ சரியாக இயங்கவில்லை. ஆனால் மதுரை அரசாளும் அரசியை மனங்குளிர பார்த்து/கேட்டு மகிழ்ந்தேன். குன்னக்குடி அவர்கள் இடத்தை நிரப்புவது கடினம் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி ஜீவா.

    ReplyDelete
  2. வாங்க கவிநயாக்கா,
    முதல் பாடல் அருணகிரியாரின் 'முத்தைத்தருபத்தித் திருநகை...'
    திருமுருகன்...எனத் தொடங்கி சின்ன சொற்பொழிவே செய்கிறார், பெரிய பொட்டுக்காரர்!
    மீண்டும் முயன்று பார்க்கவும்!
    அசை படத்தின் நேரடி சுட்டி:
    http://www.youtube.com/watch?v=XI2uUjC5Xao

    ReplyDelete