Monday, April 14, 2008

என்ன பிறப்பிதுவோ இராமா? : தியாகராஜர்

'ஏடி ஜன்மமீதி..' என்று தொடங்கும் தியாகராஜ கிருதியின் பொருள்:

என்னப் பிறப்பிதுவோ இராமா?
என்னப் பிறப்பிதுவோ?
எப்போதும் உன்னை அணுகிப்பேசிட இயலாத
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

கோடி மாரனும் ஒன்றுசேர்ந்த
அழகையும் விஞ்சிய அழகா, இராமா -
உன்னை அணுகிப்பேசிட இயலாத
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

பால் வடியும் முகமும், மணிமுத்து மார்பும்
கண்ணெல்லாம் நிறைந்தும்
மனம் நிறைவெய்யாமல்
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

இசையில் திளைப்பவனும்,
இன்னொருவர் மனதை புரிந்து
புரிந்துகொள்பவனும் ஆன இராமனை
மகிழ்ந்தணைத்து மனநிறைவுகொள்ளா
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா,
தியாகராஜரால் போற்றப்பட்டவனே,
விரைவில் உன்னை காணத்
துடிக்குதென் இதயம் - திணரும்
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

-------------------------------------

இராகம் : வராளி

தாளம் : மிஸ்ரசாபு

இயற்றியவர் : தியாகராஜர்

பாடுபவர் : திருமதி. விசாகா ஹரி

-------------------------------------

பல்லவி:
ஏடி ஜன்மமிதி ஹா ஓ ராம
ஏடி ஜன்மமு-இதி ஹா ஓ ராம

அனுபல்லவி:
ஏடி ஜன்மமிதி எந்துகு ௧கலிகெனு
எந்தனி ௨ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)
ஏடி ஜன்மமு-இதி எந்துகு கலிகெனு எந்தனி ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)

சரணம்:
ஸாதி லேனி மார கோடி லாவண்யுனி
மாடி மாடிகி ஜூசி மாடலாடனி தநக்(ஏடி)

ஸாரெகு முத்யால ஹாரயுரமு பாலு
காரு மோமுனு கந்நுலார ஜூடனி தநக்(ஏடி)

இங்கிதமெரிகின ஸங்கீத லோலுனி
பொங்குசு தநிவார கௌகிலிஞ்சனி தநக்(ஏடி)

ஸாகர சயநுனி த்யாகராஜ நுதுனி
வேகமே ஜூடக ௪வேகெனு ஹ்ருதயமு (ஏடி)

திரு. இராமநாத கிருஷ்ணன் அவர்கள் குரலில் இங்கு கேட்கலாம்.

------------------------------------------------
மேலும்:
பக்தியாளர் திரு.சுப்புரத்தினம் ஐயா தமிழ்ப்பாடல் வரிகளுக்கு மெட்டமைத்து, பாட்டாகத் தந்துள்ளார்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்:

21 comments:

 1. தமிழ் மொழிபெயர்ப்பு நல்லா இருக்கு.

  ReplyDelete
 2. மொழிபெயர்ப்புக்கு நன்றி!
  பாடகி மிக அனுபவித்துப் பாடுகிறார்.
  இவரை முதல்தடவை பார்த்துக் கேட்கிறேன்.
  சில கீர்த்தனைகளின் பொருளறிய ஆர்வம் பின்பு கேட்பேன்.

  ReplyDelete
 3. விசாகா ஹரி அனுபவித்து பாடுவதும் அழகு. நீங்கள் அனுபவித்து மொழிபெயர்த்ததும் அழகு.

  ஆம், அந்த இராமனை அணுகிப்பேசிட இயலாத என்ன பிறப்பிதுவோ! இந்த‌ வ‌ரி என்னைக் க‌ட்டிப் போட்ட‌து!

  மேலே த‌மிழில், 'கோடி மாறனும்' ங்க‌ற‌து 'கோடி மார‌னும்' என்று இருக்க‌ணுமோ, மார‌ன் ம‌ன்ம‌த‌ன்; மாற‌ன் சிவ‌ன்... கீழே தெலுகில் ச‌ரியாக‌ இருக்கிற‌து.

  பாட‌ல், மொழிபெய‌ர்ப்பு இரண்டுக்கும் ந‌ன்றி.

  ReplyDelete
 4. வாங்க சின்ன அம்மணி. முதல் வருகை நல்வரவாகுக.

  ReplyDelete
 5. வாங்க யோகன் ஐயா,
  திருமதி.விசாகா ஹரி பாடிக் கேட்பது எனக்கும் இது முதல் முறை. ஆனால் இதற்குமுன் ஹரிகதை சொல்லக் கேட்டிருக்கேன். மிகவும் உருக்கமாக இருக்கும். கேட்பாரைக் கட்டிப்போடும் இன்சொல்வன்மை கொண்டவர்.

  ReplyDelete
 6. வாங்க கேக்கே மேடம்,
  தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
  மாரனை மாற்றி மாரனை எறித்த முக்கண்ணனைச் சுட்டி விட்டேனே! - திருத்தியமைக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 7. நல்ல கீர்த்தனை, விசாகா அவர்களும் மிக அழகாக பாடியிருக்கார்.....பதிவுக்கு நன்றி ஜீவா!

  ReplyDelete
 8. வாங்க மதுரையம்பதி, வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 9. / இசையில் திளைப்பவனும்,
  இன்னொருவர் மனதை புரிந்து
  புரிந்துகொள்பவனும் ஆன இராமனை
  மகிழ்ந்தணைத்து மனநிறைவுகொள்ளா
  என்ன பிறப்பிதுவோ, என் இராமா?//

  இசையில் இணைந்தவனே ‍! என்
  இதயத்தை அடைந்தவனே !
  இன்னொருவர் மன நிலையை
  இனிதே உணர்ந்தவனே !
  இராமா ! நினை மகிழ்ந்தணைய
  இயலாத பிறவியுமென்
  இனியும் நான் வேண்டுவதோ !!
  இராமா ! என் இராமா !!

  poetic ecstasy
  என்பதும் இதுதானோ !!
  ஜீவா ! தாங்கள் தியாகராஜஸ்வாமிகள் க்ருதிகள் யாவற்றையும்
  தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.

  "எப்படித்தான் என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டையோ ஸ்வாமி!"
  ஓ.எஸ்.அருண் குரலில் கேட்கவும்.

  http://www.youtube.com/watch?v=5Eu8u7IumII

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 10. கோடி மாரனும் ஒன்றுசேர்ந்த
  அழகையும் விஞ்சிய அழகா, இராமா -
  உன்னை அணுகிப்பேசிட இயலாத
  என்ன பிறப்பிதுவோ, என் இராமா

  ஆகா என்ன அருமையான வார்த்தைகள். நல்ல பெருத்தமான மொழி பெயர்ப்பு.மற்ற சாகித்யா கர்த்தாக்களுக்கும் தியகராஜருக்கும் ஒரு வித்யாசமுண்டு. மற்றவர்கள் தம் இஷ்ட தெய்வத்தின் மீது பாடினார்கள் ஆனால் மகான் தியகராஜரோ தனக்கும் ராமருக்கும் இடையே நடந்த சம்வாதத்தையே கீர்த்தனையாக செய்தார்.
  திருமதி விசாகாஅரி மிகவும் நன்றாக உணர்ந்து பாவத்துடன் பாடியுள்ளார். இவர் திரு லால்குடி ஜெயராமனின் சிஷ்யர். அண்ணா திரு. க்ருஷ்ண பிரேமியின் மருமகள் மற்றும் ஒரு Chartered Accountant.
  நல்ல பாட்டையும் அதன் பொருளையும் தந்த ஜீவாவிற்கு நன்றி.

  ReplyDelete
 11. வாங்க சுப்புரத்தினம் ஐயா!
  OSA வின் சுட்டிக்கு நன்றி. வார்த்தைகள் அவ்வளவு தெளிவாகக் கேட்கவில்லை, மீண்டும் முயற்சிக்கணும்.

  அப்புறம் தியாகராஜ கீர்த்தனை எல்லாவற்றையும் மொழி பெயர்கணும்னா, மொதல்ல தெலுங்கு கத்துக்கணும், என்னப்போல் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்தல் வேலைக்கு ஆகாது!

  ReplyDelete
 12. வாங்க தி.ரா.ச ஐயா,
  மிக்க மகிழ்ச்சி.
  தியாகராஜரைப்பற்றி முக்கியமான கருத்தைச் சொன்னீர்கள். நன்றிகள்.

  ReplyDelete
 13. ஒரு உத்சாகம் ஒரு உந்துதலிலே உங்களது " என்ன பிறப்பிதுவோ " தியாகையாவின்
  தமிழ் மொழி பெயர்ப்பினைத் துணிந்து ' புன்னாக வராளி ' என நினைத்துக் கொண்டு
  பாடிவிட்டேன். கொஞ்சம் அங்கங்க சொற்களை மாற்றியிருக்கிறேன். ரொம்ப சில‌
  வார்த்தைகள் மட்டுமே.
  சப்ஜக்ட் டு யுவர் அப்ரூவல் எல்லாமே.
  அப்ரூவல் இல்லையெனில் உடனடியா டெலிட் செய்துவிடுகிறேன்.
  யாராவது இராமனைப் பாடினாலே ஒரு மகிழ்வு மனதிலே.
  அதன் எதிரொலி தான் இது.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.  http://www.youtube.com/watch?v=TG7RI3Uypbo

  ReplyDelete
 14. i sh ask for your approval beforehand if you could let me know your emailid

  ReplyDelete
 15. ஆகா, மிகவும் நன்றாக உள்ளது சுப்புரத்தினம் ஐயா.
  கவிதை வடிவிற்கு பாடல் வடிவம் கொடுத்து, அதை பாடியும் கேட்பதற்கு பெற்ற பேறுதான் என்னவோ என்றெனக்கு எண்ணத் தோன்றுகிறது.
  தங்கள் ஆக்கத்தினை நேரடியாக பதிவிலும் இணைத்து விடுகிறேன்.
  மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 16. மேலும், த்வஜாவந்தி இராகம் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
  இந்தப் பாடல் போல:
  ஆகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்

  ReplyDelete
 17. மொழிபெயர்ப்பு லேசுப்பட்ட காரியமில்லை; அதை மிகத் திறம்பட
  ஈடுபாட்டுடன் செய்துள்ளமை அனுபவித்து ரசிக்கத் தூண்டுகிறது.

  அடுத்து,
  நீங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதில் வல்லவர் என்பதை சமீபத்தில் 'விருபா.காம்' தளத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்.
  ஆங்கிலத்தில் பெங்களூர் பேராசிரியர்
  எம்.ஆர்.சிதம்பரா அவர்கள் எழுதிய
  "Robots and Robotics" என்னும் அறிவியல் துறை நூலை, நீங்கள்
  தமிழில் "இயந்திர மனிதனும் அதன்
  இயக்கவியலும்" என்று மொழிபெயர்த்து அதை நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கும் தகவல் அறிந்தேன். அந்தப் புத்தகத்தையும்
  புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் படித்தும் விட்டேன். குழந்தைகளுக்கான "ரோபோ"வைப் பற்றி அருமையான நூல் என்று பரிந்துரைக்கிறேன்.(பெற்றோர்களின் கவனத்திற்கு)

  வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல், மூலத்தின் முழுசெயதியும் உள்வாங்கிக்கொண்டு
  மிகப் பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். மொழிபெயர்பென்றால எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நூல்.
  ஆன்மீகத்திலும் தங்கள் பணி சிறந்து விளங்குவது கண்டு
  பாராட்டுகள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.ஜீவி ஐயா.

  ReplyDelete
 19. http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_22.html

  நேரம் இருக்கும்போது பார்க்கவும். நன்றி.

  ReplyDelete
 20. என்ன ஒரு தகவல் களஞ்சியமாக இந்தப் பதிவு வாய்த்துவிட்டது!!
  இவ்வளவு ஆன்மீகப் பெரியவர்களுடன்
  சேர்ந்து அவர்கள் உரைகளைப் படிக்கும் பாக்கியமும் கிடைத்ததே. ராமா நீ அல்லவா காரணம்.
  ஜீவா மிக்க நன்றி.
  இந்தப் பாடல் மொழிபெயர்ப்பு அழ்ழகு. விசாக ஹரியின் குரல் அழகு. தியாகய்யாவின் உருக்கமும் அழகு.
  நன்றி நன்றி நன்றி.

  ReplyDelete
 21. வாங்க கீதா மேடம்...

  வாங்க வல்லி மேடம்...

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails