Wednesday, January 30, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி ஆறு

பா 35:

ஆகாயம் போல அகிலத்தினுள் வெளியான்

சாகாதான் சர்வ சமன் சித்தன் என்றேகாதி

யாவட்றும் பற்றற்றான் என்றும் அமலன் சலியான்

அவன் நானென்றே அறி.
விளக்கம்:

உள்ளேயும், வெளியேயும் எங்கெங்கும் பரவி இருக்கும் அண்ட வெளி போலானவன் வன்.

சாகாதான் - இறப்பில்லான்.
சர்வ சமன் - எல்லாவற்றிலும் சமமாக இருப்பவன்.
சித்தன் - விட்டு விடுதலை ஆகி நிற்பவன்.

உடல் தொடங்கி எல்லாவற்றிலும் ஒட்டுதல் அற்றவன் வன்.

எந்த விதத்திலும் குறைவோ அல்லது மாற்றமோ அடையாதவன் வன்.

அப்படிப்பட்ட அந்த வன் என்னும் பிரம்மமாய் நான் இருக்கிறேன் என்று அறிவாய்.

----------------------------------------------------------------------------------------------
"அகத்தில் பிரம்மமாய் இருக்கிறேன்" என்று எளிதாக சொல்லி விடுகிறோம், பிரம்மம் என்பது எப்படிப்பட்டது - எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது பாருங்கள்!
நினைவாலும் அளக்க இயலா எல்லைகளில் நிஜமாகப் பரவி இருக்கிறது அந்த பிரம்மாண்டம்!

அப்படிப்பட்ட பிரம்மாண்ட பிரம்மம் எப்படிப்பட்டது?
அடுத்த பா சொல்கிறது:

பா 36:

எது நித்தஞ் சுத்தம் எது முக்தம் ஏகம்

எது அகண்ட இன்பம் இரண்டலது எது சத்துச்

சித்தானந்தம் ஆகுன் திகழ்ப் பரபிரம்ம

வத்து யானேயா மதி.

விளக்கம்:
எது எப்போதும் சுத்தமாய், தூய்மையாய் இருக்கிறதோ,
எது எப்போதும் முக்தி அடைந்ததாய், எல்லாவற்றிலும் ஒன்றாய் இருக்கிறதோ,
எது எல்லா இடத்திலும் அகண்டு பரந்து இருக்கிறதோ,
எது பேரின்ப பெருங்களிப்பு தருகிறதோ,
எது அத்வைதமாய் இரண்டல்லவென்று இருக்கிறதோ,
எது அளவிட இயலாத சத் - சித் - ஆனந்தமாக இருக்கிறதோ,
- அந்த அது - பிரகாசமாய் ஒளி விட்டுத் திகழும் பிரம்மம்,
அது நான், நானேதான்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

13 comments:

 1. படித்து மகிழ்ந்து வருகிறேன்!:))நன்றி.

  ReplyDelete
 2. ஆகா, அப்படியா ஐயா, மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. திரு ஜெயபாரதனின் வின்வெளிக்கட்டுரைகள் படிக்கும் போது நமக்கு தெரியாமல் எவ்வளவு நடக்கிறது,என்ற ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவேன்.
  இந்த பூமியில் இருக்கும் அவ்வளவு உயிரினமும் வெளியில் இருந்து தான் வந்திருக்கவேண்டும்,அப்ப அதுக்கு முன்னாடி எங்கே இருந்தது? என்ற கேள்வி உருண்டு ஓடுது.
  வின்வெளியில் நடக்கும் அவ்வளவும் ஏதோ ஒரு சங்கிலித்தொடராக நடப்பதுக்கு என்ன காரணம் என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
  இதெற்கெல்லாம் விடை நீங்கள் விளக்கியுள்ள...
  பிரகாசமாய் ஒளி விட்டுத் திகழும் பிரம்மம்,
  அது நான், நானேதான்.
  அறியும் வரை.

  ReplyDelete
 4. ஆம், வடுவூரார்,
  நானும் அப்படியே அறிவியல் வல்லுனர் திரு.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரைகளைப் படித்து வியப்படைந்து வருகிறேன்.

  ReplyDelete
 5. படித்தேன்ன்னு மட்டும் சொல்லிக்கிறேன். :-)

  ReplyDelete
 6. வாங்க மதுரையம்பதி,
  நான் படித்தேன் + எழுதினேன் - அவ்வளவுதான்!

  ReplyDelete
 7. உலகில் நாம்(நான்) தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை உணர்த்துகிறது உங்கள் பதிவு,அருமை.

  ReplyDelete
 8. நான்கு மஹாவாக்கியங்களின் பொருளை நன்கு எளிதாகச் சொல்லப்பட்டிருக்கிறது ஜீவா.

  நிர்வாண சதகம் படித்திருக்கிறீர்களா? கேட்டிருக்கிறீர்களா?

  ReplyDelete
 9. வாங்க தி.ரா.ச,
  கற்றது எப்போதுமே கையளவுதான்.
  இந்த விஷயத்தில் கற்பினும், அதன் மேலும் அவன் அருளும் வேண்டுமே!

  ReplyDelete
 10. குமரன்,
  The Greatest Truth are the Simplest
  என்று வேதத்திரி மகரிஷி சொல்லுவார்.

  நிர்வாண சதகம் - முனொபொருமுறை ருத்ரம்/சுக்தம் முதலானவற்றை சி.டி யில் பதிவு செய்யும்போது கண்ணில் பட்டது என்று நினைக்கிறேன் - ஆனால் ஆழமாக படித்தது கிடையாது இப்போது நீங்கள் சொன்னபின் தேடிப்பார்த்த போது - இவை கிட்டியது - மிக்க நன்றி!
  * பொருள் விளக்கம்
  * யூ ட்யூப் வீடியோ-1
  * யூ ட்யூப் வீடியோ-2

  ReplyDelete
 11. எப்படி ஜீவனுள்ள உங்கள் பதிவுகளை இவ்வளவு நாள் மிஸ் செய்தேன். அருமையான விளக்கம். Oneness in everything and duality. ம்ம்ம்... அருமை! அருமை! அருமை! சுரி அவர்களின் படைப்புகள் போல அமைதியாக இருக்கிறது. அவர் உங்கள் தோழர் என்பதால் தான் கம்பேர் செய்துவிட்டேனோ? ம்ம்ம்...

  ReplyDelete
 12. வாங்க மேடம்,
  வரவு நல்வரவாகுக!
  ஆத்ம போதம் - ஆதி சங்கரரின் மூலம் - அதனை இரமணர் தமிழில் பாக்களாக வடித்திருக்கிறார். ஆத்ம போதத்தின் ஆங்கில உரைகளுடைய துணையுடன், ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய வரை - பாக்களின் சீர்களை பிரித்து பொருள் தருகிறேன் இங்கே - அவ்வளவே... (என் வதை தனைத் தாங்குமா அந்தப் பாக்கள் பார்க்கலாம்...)
  இது பெரியவர்களின் கண்ணில் பட்டு, அவர்கள் மூலம் - இந்த விளக்கங்களில் பிழைகள் ஏதும் இருப்பின் - அவை திருத்தப்படும் என்ற நம்பிக்கையில்!

  ReplyDelete
 13. எல்லாமே யான் எனும் ஆத்மநிலையைப் போதிக்கும் அற்புதச் செய்யுள்!

  நல்லதொரு பதிவைத் தொடர்ந்து வெளியிடும் உங்களுக்கு என் வணக்கங்கள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails