எத்தனை இணைய தளங்களில் எத்தனை கடவுச்சொற்கள் (Passwords), இத்தனையும் யார் நினைவில் வைத்துக்கொள்வது என்று சலித்துக்கொள்பவரா நீங்கள்?
இணைய தளங்கள் மட்டுமல்ல, மின் அஞ்சல் முகவரிகள், ATM கணக்குகள், அலுவலக கணக்குகள் இத்யாதி, இத்யாதி - இப்படி பலதரப்பட்ட இடங்களில், பலதரப்பட்ட வகையான கடவுச்சொற்கள் நினைவில் வைத்துக்கொள்வது, கடினமே.
சிலர் எல்லா கணக்குகளுக்கும் ஒரே கடவுச்சொல் கொள்வார். சில வகையான கணக்குகளுக்கு, கடவுச்சொல்லை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஒன்றை மாற்றினால் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டிருக்கவும் முடியாது. மேலும் ஒரு கடவுச்சொல்லை யாருக்கேனும் தெரிவிக்கவும் முடியாது, ஏனென்றால் மற்றவையெல்லாம் வெளியே தெரிந்து விடும்.
வித விதமான கடவுச்சொற்களை ஒரு இரும்புப்பெட்டியில் பூட்டி வைத்துக்கொண்டு, ஒற்றைச்சாவியால் வேண்டும்போது திறந்து பார்த்துக்கொள்ளும் வசதி இருந்த்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
அதற்கும் வழி உள்ளது. இந்த மென்பொருள் இரும்புப்பெட்டியின் உதவியால்.
Password Safe எனப்படும் இந்த மென்பொருள் ஒரு SourceForge.net திட்டம். இலவசமாக இறக்கிக்கொள்ளலாம்.
அது செய்யும் வேலையெல்லாம் சுலபமானதுதான், இருப்பினும் பயனுள்ளது.
உங்களுக்குத் தேவையானவற்றை இதில் சேமிக்க, அது ஒரு கோப்பில் சங்கேத மொழியில் எழுதி வைத்துக்கொள்கிறது. இந்த மென்பொருள் இரும்புப்பெட்டிக்கு மூல கடவுச்சொல் ஒன்று கொண்டு, நீங்கள் அதை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளலாம். அதைக்கொண்டு பெட்டியைத் திறந்தவுடன், தேவையான கடவுச்சொல்லை எடுத்துக்கொண்டு பயன் படுத்திக்கொள்ளலாம்!. மேலும் நீங்கள் இந்த பெட்டியைத்திறக்கும்போது யாரேனும் அருகில் இருந்தால், அவருக்குத் தெரியாமல் கடவுச்சொல்லை மறைத்து வைத்துக்கொண்டே அதை பயன்படுத்திக் கொள்ள முடியும்!. மேலும் இது ஒரு சிறிய கோப்பிலே உங்கள் அனைத்து கடவுச்சொற்களையும் சேமித்து வைப்பதால், நீங்கள் வேறொரு இடத்திற்கு சென்றாலோ, வேறோரு கணிணி மூலமாக பார்க்க வேண்டுமானால், உங்களுக்கு தேவைப்படுவதெல்லம் இந்த ஒரு கோப்பு மட்டும்தான்!.
நகையெல்லாம் பத்திரமா இருக்கும்ன்னு பேங்க் லாக்கர்லெ கொண்டு போயி வெச்சபின்னாடி, பேங்க லாக்கரே கொள்ளை போறது மாதிரி இங்க ஏதும் ஆகாதுல்லெ ஜீவா?
ReplyDeleteஇந்த பாஸ்வேர்டு எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிக்குறது பெரிய வேலைப்பா!
எம்.கே.
எம்.கே குமார்,
ReplyDeleteஇதில் கொள்ளைபோகும் பயமேதும் இல்லை. இந்த கடவுச்சொல்லின் மூல கோப்பு உங்கள் கண்ணியிலேயே உட்கார்ந்திருக்கும். அதனால் அதை மற்றவர் யாரும் பார்க்கப்போவதில்லையே? மேலும் நான் சொன்ன மாதிரி, இந்த கோப்பை திறந்து பார்த்தால் கசமுசாவென்று இருக்கும், யாருக்கும் ஒன்றும் புரியாது. மூல கடவுச்சொல்லை யாரும் கண்டுபிடிக்காத வகையில் வைத்துக்கொண்டால் பலர் புழங்கும் இடத்திலும் பயன்படுத்தலாம்.
இதன் பொதுவான பயன் - சொந்த உபயோகத்திற்கு - அதில் எந்த விதமான அபாயமும் இல்லை.
ராம்சி,
தங்கள் ப்ளாக்கைப்பார்த்தேன், கலக்கலாக இருந்தது, வருகைக்கு நன்றி.
ஆமா, இல்ல?
ReplyDeleteபாஸ்வேர்ட் னினைவுல வச்சிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்
ஆமாங்க, பாஸ்வோர்ட் மட்டுமல்ல லாக்கின் பெயர் கூட மறந்துபோய் "Forgot Password" லிங்கை பலமுறை சுட்டியிருக்கிறேன்!
ReplyDelete