Friday, June 03, 2005

மரபணுவியல் - கடந்துவந்த பாதை

1951 - ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் க்ரிக் டி.என்.ஏ மாதிரி வடிவம் செய்கிறார்கள்.


Watson and Crick Posted by Hello

1952 - ரோசாலிந் ஃபிராங்க்ளின் என்ற பெண்மணி டி.என்.ஏ வை எக்ஸ் கதிர்கள் கொண்டு படம் பிடிக்கிறார்.


XRayImage Posted by Hello

- மேலே உள்ள படத்தில் இரண்டு சங்கிலிகளே தெரிகின்றன. வாட்சன் டி.என்.ஏ வில் மூன்று சங்கிலிகள் கொண்ட தன் மாதிரியை இன்னமும் நிரூபணம் செய்ய இயலவில்லை.

1953 - லினஸ் பாலிங்க் டி.என்.ஏ வில் மூன்று சங்கிலித் தொடர்புகள் உள்ளன என உறுதியாக சொல்கிறார்.

- பிப்ரவரி 28: திடீரென தோன்றிய 'யுரேகா' எண்ணத்தில் தன்னுடைய மாதிரியில் சிறிது மாற்றி அமைக்க, எல்லாம் சரியாக வருகிறது. க்ரிக்-கும் அதை ஆமோதிக்கிறார்.

- ஏப்ரல் 25: 'நேச்சர்' சஞ்சிகையில் தன் கண்டுபிடிப்பை வெளியிடுகிறார்கள் வாட்சனும் கிர்க்கும்.

1959 - 'டவுன் சிண்ட்ரோம்' குரோமோசோம்-தனின் குறைபாடுதான் என கண்டறிகிறார்கள்.

1960 - டி.என்.ஏ வுக்கும் புரதம் உருவாகும் செல்களுக்கும் இடையே இருக்கும் ஒரு 'தூதுவன் ஆர்.என்.ஏ' கண்டுபிடிக்கப்படுகிறது.

1962 - வாட்சன், க்ரிக் மற்றும் வில்கின்ஸ் மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


medal Posted by Hello


1967 - அலான் விட்சன், வின்செண்ட் சாரிச் ஆகியோர் ஐந்து மில்லியன் வருடங்களுக்கு முன்னாலே மனித இனமும் மனித குரங்கு இனமும் பிரிந்திருக்க வேண்டுமென்று கணக்கிடுகின்றனர்.

1970 - விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் மரபணுவை முழுமையாக உருவாக்குகிறார்கள்.

1975 - ஆராய்சியாளர்கள் கலிஃபோரினியா கூட்டத்தில் மரபணு ஆராய்சிகள் வழிநெறிமுறைப்படுத்த வேண்டும் என்று முட்வெடுக்கிறார்கள்.

1976 - பாயர் மற்றும் ராபர்ட் ஸ்வான்சன் உலகின் முதல் மரபணு ஆராய்சி நிறுவனத்தை நிர்மாணிக்கிறார்கள்.

1978 - முதன்முதலாக மரபணுவிலிருந்து மனித இன்சுலின் தயாரிக்கிறார்கள்.

1982 - முதல் மரபணு மூலமாக உருவாகப்பட்ட இன்சுலின் மருந்து அனுமதிக்கப்படுகிறது.

1983 - கேரி முலிஸ் என்பவர் PCR என்னும் பாலிமெரீஸ் தொடர் வினையால் டி.என்.ஏ துண்டுகள் வேகமாக பல்கிப்பெருகும் வழி கண்டு பிடித்தார்.

1984 - அலெக் ஜெஃப்ரிஸ் டி.என்.ஏ கொண்டு ஒரு நபரை அடையாளம் கண்டு கொள்ளும் வழியை உருவாக்கினார்.

1985 - ராபர்ட் காலோ மற்றும் லூக் மாண்டாக்நீர் தனித்தனியே ஹெச்.ஐ.வி. வைரஸின் மரபணுத் தொடரினை பதிப்பிக்கிறார்கள்.

1986 - லெராய் ஹூட் உலகின் முதல் தானியங்கி மரபணு தொடர்பு உருவாக்கியை வடிவமைத்தார்.

1988 - ஹார்வார்ட் பல்கலைக்கழகம், மரபணு மாற்றியமைக்கப்பட்ட முதல் எலிக்கான உரிமைக்காப்பு பெறுகிறது.

1989 - பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் சோதனை முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது.

1990 - மனித டி.என்.ஏ தொடர்புச் சங்கிலியை நிறைவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

1993 - ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்சியாளர்கள் மனித கருவை இன்னொரு மனித கருவிலிருந்து க்ளோன் செய்து சில நாட்களுக்கு வளர்த்தனர்.

1994 - மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட தக்காளிப் பழம் சந்தைக்கு வருகிறது.

1997 - இயான் வில்மட் என்பவர் ஆட்டின் கருவை க்ளோன் செய்து இன்னொரு ஆட்டு குட்டியை (டாலி) உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.

1999 - மரபணு சிகிச்சையின் விளைவாக முதன் மனித உயிரிழப்பு (ஒத்துக்கொள்ளப்பட்ட)


2002 - வீட்டுப்பூனை ஒன்றை டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் க்ளோன் செய்கிறது.

- வாட்சன் மற்றும் க்ரிக் டி.என்.ஏ மாதிரி வடிவமைத்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

2003 - மனித மரபணுவின் தொடர்புகள் முழுதும் நிறைவு செய்யப்பட்டுவிட்டதாக மனித ஜீனோம் திட்டவியலார் அறிவிக்கின்றனர்.

5 comments:

  1. Anonymous9:13 AM

    இதிலிருந்து நாம் எப்படி ஒன்றுக்கும் பயனில்லாதவர்கள் என்று தெரிகிறது. இது போன்ற துறைகளில் என்றைக்குத்தான் நாம் கால் பதிப்பது?

    ReplyDelete
  2. சரிதான்...நம்மவர்கள் அறிவியலில் ஈடுபட்வது குறைவாகவே உள்ளது. தொழில்நுட்பத்தில் ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டு அறிவியலில் அதிக கவனம் சொலுத்த வேண்டும். அதை ஊக்குவிக்கவே இதுபோன்ற பதிவுகள்.

    ReplyDelete
  3. //இதிலிருந்து நாம் எப்படி ஒன்றுக்கும் பயனில்லாதவர்கள் என்று தெரிகிறது. இது போன்ற துறைகளில் என்றைக்குத்தான் நாம் கால் பதிப்பது?//
    மனமுடைய வேண்டாம். ஏற்கனவே நம்நாட்டவர் கோபிந்த் குரானா (Gobind Khorana) 1968ம் வருடம் மருத்துவத்துறைகான நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். ஜேம்ஸ் வாட்சன் எழுதிய D N A The Secret of Life புத்தகத்தில் 76ம் பக்கம் இவருடைய ஆராய்ச்சியைப்பற்றிய விளக்கமும், புகைப்படமும் பார்க்கலாம்.

    நன்றி,
    குலவுசனப்பிரியன்

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி. ஹர் கோபிந் குரானா பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    அவர்் இந்தியாவில் இருந்தது 1945 வரை தானாம்.
    அவருடைய விவரம் நோபல் தளத்தில்
    http://nobelprize.org/medicine/laureates/1968/khorana-bio.html

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள்!!
    நாம் இன்னும் கடந்து செல்ல வேண்டிய பாதை நிறைய இருக்கிறது போலும்!!

    ReplyDelete