Sunday, May 08, 2005

உன்னால் முடியும் தம்பி!

டாக்டர் வாய்னே டையர், அமெரிக்காவில் "ஊக்கத்தின் தந்தை" என வர்ணிக்கப்படுபவர். தன்னைத்தானே முன்னேற்றிக்கொள்வது எப்படி என்று பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அவருடைய புத்தகங்கள் 48 மொழிகளில் 55 மில்லியன் புத்தக பிரதிகள் விற்பனை ஆகியுள்ளதாம்!. நம்ம நாட்டு, தீபக் சோப்ராவுடன் சேர்ந்துகூட ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அவருடைய சமீபத்திய புத்தகம் "Power of Intention".



Dr Dyer Posted by Hello

பல சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார்.
10 Secrets for Success and Inner Peace,
There's a Spiritual Solution to Every Problem,
How to Get What You Really, Really, Really, Really Want,
Improve Your Life Using the Wisdom of the Ages
போன்றவை அவருடைய சுய முன்னேற்றம் பற்றிய சொற்பொழிவுகள் ஆகும்.

எதேச்சையாக PBS தொலைக்காட்சியில் அவரது சொற்பொழிவைக் கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அவர் என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று கவனித்தேன்;
நமது பழைய தத்துவங்களிலும், மதங்களிலும் தேங்கிக்கிடக்கும் உண்மைகளை இன்றைய அறிவியலோடு இணைத்து ஒருவர் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதுபோல சொற்பொழிவாற்றினார்.
முடிவில் தன் சொற்பொழிவை தொகுத்து '12 வெற்றிக்கான வழிமுறைகள்' என்றார்.
அவற்றை குறித்து வைத்துக்கொண்டு தமிழில் தருகிறேன் இங்கே:

1. உங்களுக்காக நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் மற்றவர்களுக்காக அதிகமாக விரும்புங்கள்.

2. எந்த ஒரு விஷயத்தையும் முடிவிலிருந்து எண்ணத் தொடங்குங்கள்.

3. பாராட்டுபவராக இருங்கள்.

4. உங்கள் உள்சக்தியுடன் நல்லதொரு உள்தொடர்பில்/பழக்கத்தில் (rapport) இருங்கள்.

5. எதிர்ப்புகள் இயற்கையானதென புரிந்து கொள்ளுங்கள்.

6. நீங்கள் உருவாக்குவதற்கு அல்லது செய்யவேண்டியதற்கான மூலக்கூறுகள் அனைத்தும் உங்கள் அருகாமையிலேயே இருப்பதாக "நினைத்து"க்கொள்ளுங்கள்.

7. விட்டுக்கொடுத்தல் என்பதனை பழகிக்கொள்ளுங்கள்.

8. பணிவு எப்போதும் பழக்கத்தில் இருக்கட்டும்.

9. எப்போதும் நன்றியுணர்சியுடன் நடந்துகொள்ளுங்கள்.

10. பழிப்பதும், கழித்துக்கட்டுவதும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது.

11. வாழ்க்கையை ஒரு போட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

12. தியானம் செய்யுங்கள்.

டாக்டர் வாய்னே டையரப் பற்றி மேலும் விவரங்களுக்கு அவரது இணைய தள முகவரி இங்கே.

3 comments:

  1. ஆஹா! மிகவும் நல்ல பதிப்பு. இப்பதிப்பைப் படித்ததும், என்னுள்ளில் புத்துணர்ச்சி பிறக்கிறது! நானும் இவரது மொழிகளைப் பின்பற்றுவேன். Ralph waldo Emerson said "LIFE IS A SUCCESSION OF LESSONS, ONE MUST LIVE TO UNDERSTAND IT" இந்த பதிப்பு எனக்கொரு பாடமாக அமைந்திருக்கிறது. இதிலிருந்து பல நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்! அதனை செயல் படுத்தவும் முயற்சிப்பேன்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்கள்!
    வெற்றிகள் உங்கள் வீட்டு வாசற்கதவை தானாக வந்து தட்டட்டும்!

    ReplyDelete
  3. எனக்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திய வார்த்தைகள்.. அருமையான பதிவு.. நன்றி ஜீவா அவர்களே..

    ReplyDelete