Wednesday, May 04, 2005

புத்தம் சரணம் கச்சாமி

மே மாதம், இந்தியாவில் தோன்றிய மாபெரும் ஞானிகளில் ஒருவரான கெளதம புத்தர் பிறந்த மாதமாகும். தினம் நிகழ்வுகளில் தன்னைத்தொலைத்து மாயை என்னும் சுழலில் சிக்கித் தளிக்கும் மனித இனம் உய்வதற்கு வழி சொன்ன மகான். உலகுக்கெல்லாம் முதன்முதலின் புத்த மதம் போதிக்கப்பட்டது இந்தியாவில் இருந்துதான். இன்று புத்த மதம் இந்தியாவில் நொடிந்துபோனாலும், உலகின் மற்ற பகுதிகளில் அதன் வேர்களைக் காணலாம்!.

இளவரசன் சித்தார்த்தன் தன்னொளி பெற்று கெளதம புத்தனாக ஆன கதை உங்களுக்கெல்லாம் தெரிந்து இருக்கும். அவ்வாறு அவர் பெற்ற ஞானத்தின் சாரம்தான் புத்த மதம். புத்த மதம் முதலில் 'ஹீனயானம்', 'மஹாயானம்' என்ற இரண்டு பிரிவுகளில் இருந்தது. பின்னர் அதிலிருந்து பல்வேறு பிரிவுகள் தோன்றின. இந்த இரண்டு பெரிய பிரிவுகள் அதிகமாக பின்பற்றப்படும் நாடுகளை கீழே காணாலாம்:


Hinayana Map Posted by Hello
Mahayana Map Posted by Hello


இவற்றைத்தவிர, திபத்தில் பின்பற்றப்படும் பிரிவுக்கு வஜ்ரயானா என்று பெயர்.
பிரிவுகள்பல இருந்தாலும், அனைத்து பிரிவுகளும் புத்தரின் மூல போதனகளையே பின்பற்றுகின்றன.

புத்தரின் மூல போதனைகள்
ஹிந்து மதத்தின் மூல நெறிதனை நான்கு வார்த்தைகளில் அடக்கிவிடலாமென்பதுபோல, புத்தத்தின் மூல போதனைகளை நான்கு வரிகளில் சொல்லலாம். அவை:
1. "வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது"
என்ற அனைவருடைய சொந்த அனுபவத்தை கூறுகிறது.
2. "ஆசையே துன்பங்களுக்கு எல்லாம் காரணம்"
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பொழுது எவ்வளவு துன்பமடைகிறோம். ஆனால், எதிர்பார்ப்புகள் நிறைவேறினாலும் நமக்கு உண்மையில் நிலையான இன்பம் கிடைப்பதில்லை. மேலும் மேலும் ஆசைகள் பெருகத் தான் வழி வகுக்கிறது.
3. "துன்பங்களை தடுக்கவும், பேரின்பம் கிட்டவும் வழி உண்டு"
தேவையில்லாத ஆசைகளை விட்டொதுக்கி, பொறுமையுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் அற்று, இன்றைய பொழுதில் வாழ்ந்தோமானால், முழுமையுடன் வாழ முடியும். இதனால் நிர்வாணம் என்னும் பேரின்ப நிலையை எட்ட முடியும்.
4. "துன்மற்று வாழ இந்த எட்டு வழி நெறிகளைக் கடைப்பிடிக்கலாம்."

எட்டு வழி நெறிகள்
1. சரியான பார்வை
2. சரியான எண்ணம்
3. சரியான சொல்
4. சரியான செயல்
5. சரியான வாழ்க்கை
6. சரியான முயற்சி
7. சரியான மனநிலை
8. சரியான மனத்தீர்மானம்

புத்தரும் கடவுளும்
புத்தர் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் மகனெற்றோ, அல்லது கடவுளை வணங்குவதால் துன்பங்கள் தொலையும் என்றோ சொன்னதில்லை. ஒவ்வொருவரின் துன்பங்களையும் அவராலேயே போக்கிக்கொள்ளமுடியும், அவராகவே தன்னைத்தானே அறிந்து கொள்வதால்.
்புத்த மதம் பொதுவாக உருவ வழிபாட்டில் ஈடுபாடவிட்டாலும், புத்தர் சிலைகளை குறியீடாகவும், ஊக்க கருவிகளாகவும் பயன்படுத்துகின்றன.

உலகம் எப்படி தோன்றியது?
நீரில் முதலில் தோன்றிய உயிரானது, பல்வேறு விதங்களில் பல்வேறு உயிர் வகைகளாக மாறியது. இவற்றை யாரும் தோற்றுவிக்கவில்லை. இவற்றுக்கு தொடக்கமும் இல்லை. உலகம் ஒரு விதத்தில் இருந்து, அழிந்து, மறு உருவம் எடுத்துக்கொண்டே இருக்கும்.

தியானம்
புத்தரின் மூல தியான வழிமுறைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:
1. அனபாணா சாத்தி (பிராணயாணம்)
2. மேத பாவனை (சுய வாழ்த்து)

இந்த தியான வழிமுறைகளைப்பற்றி மேலும் அறிய விரும்புவோர்களுக்கு PDF சுட்டி.

மேலும் விவரங்களுக்கு: இந்த சுட்டியில் பல மின்னிதழ்களைப் பெறலாம்.

மேலும் இந்த தளத்தில் ஒலி வடிவத்தில் ஆங்கில சொற்பொழிவுகளைக் கேட்கலாம்.

10 comments:

 1. Hina yana is also known as Theravaada buddhism.

  ReplyDelete
 2. நல்ல கட்டுரை. நன்றி

  ReplyDelete
 3. ஜீவா,
  பயனுள்ள கட்டுரை.நன்றி.

  ReplyDelete
 4. புத்தர் என்னவோ ஆசையை ஒழிக்கச்சொன்னது உண்மைதான், ஆனால் புத்த கொள்கையை கடைபிடிப்பதாக சொல்லிக்கொள்ளும் நாடுகள் இலங்கை(அரசாங்கமே புத்த மதக் கட்டுப்பாட்டில்தான்), சீனா, திபெத் எல்லாம் ஆசையைத் துறந்த நாடுகளா? என்று யாராவது பதிவு போடுங்கப்பா!உங்க கட்டுரை நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. ராஜசிம்மன்6:57 PM

  இதைப் படித்தால் இவையெல்லாமே இந்து மதத்தில் இருப்பதாகத் தெரிகிறதே?

  ReplyDelete
 6. பின்னூட்டம் இட்ட அனவருக்கும் நன்றி!.

  மதங்கள் வேறாக இருந்தாலும், தத்துவத்தில் நிறைய பொதுமை இருக்கிறது.

  ReplyDelete
 7. கச்சாமி என்றால் என்ன ஜீவா?

  ReplyDelete
 8. கண்ணன்,
  இந்த இடத்தில், 'கச்சாமி' என்றால், 'அடைகிறேன்' என்று பொருள். ஆக, 'புத்தம் சரணம் கச்சாமி' என்றால் 'புத்தரை சரண் அடகிறேன்' என்று பொருள் படும்.

  ReplyDelete
 9. விண் ணாங்கு2:10 PM

  புத்தம் என்றால் புது+அகம்(தமிழ் சொல்) சரணம் - சரணாகதி (தமிழ் சொல்) கச்சாமி - அடைதல் ,யாவற்றையும் ஒப்படைத்தல்(இது மட்டுமே பாளி மொழி) பௌத்த சுலோகமே 90% தமிழிலும் 10% பாளி மொழியிலும் அமைந்ததுதான்.இன்று உலகில் பெரும் பான்மையாக உள்ள மஹாஜன பௌத்தம் கூட கி.பி 6ம் நூற்றாண்டில் காஞ்சியில் (தமிழ்நாட்டில்) பிறந்து சீனாவுக்கு பறந்ததுதான்.

  ReplyDelete
  Replies
  1. @விண்ணாங்கு
   தகவலுக்கு மிக்க நன்றிகள்!

   Delete

LinkWithin

Related Posts with Thumbnails