ஆறாம் திருமுறையில் இருபத்தி ஓராம் பதிகத்தில் வள்ளலார் சுவாமிகள் சுத்த சன்மார்க்க வேண்டுகோளை இறைவனிடம் சமர்பிக்கின்றார். இதில் 11 பாடல்கள் உள்ளன.
21. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
1. அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.
இந்த முதல் பாடலை சஞ்சய் சுப்ரமண்யன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்
இராகம்: பூர்விகல்யாணி
மேற்கண்ட பாடலில் ஐயனை அப்பா என்றழைத்த வள்ளலார், அடுத்த பாடல்களில் ஐயா/ அண்ணா / அம்மா என்றும் அழைக்கிறார்.
மூன்றாவது பாடலில் பண்ணார உன்னைப் பாடுதல் வேண்டும் எங்கிறார். பாடுதலும், பாடலைப் படித்தலும் இறைவனை அடைவதற்கான கருவிகள் ஆதலினால்.
நாலாம் பாடலில் இறந்தாரையும் மீட்டு அவர்களையும் இறைவனை இகத்தில் உணரச் செய்திட வேண்டும் என்றியம்பினார்.
ஆறாவது பாடலில் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் - எனும் ஐந்தொழிலையும் நான் புரிதல் வேண்டும் எனும் கோரிக்கையை விடுக்கிறார். இவையெல்லாம் இறைவனின் தொழிலாக இருக்க, மனிதரால் முடியுமோ? அப்படி இறைவனின் தொழிலைக் கவர நினைத்தோரை அரக்கர் என்றல்லவோ புராணங்கள் கூறின. இங்கே வள்ளலார் சொல்வது அத்தொழில்களை கவருவது அல்ல. இறைவனது குணங்களை இந்த பூத உடலில் ஜீவன் இருக்கும்போதே அதிலில் பரமனுடன் கலந்த இகபர நிலை. பத்தாம் பாடலில் உன்னுடன் கலந்து ஒன்றான நிலை வேண்டும் என்றார்.
ஏழாம் பாடலில் வேண்டுதல், வேண்டாமை இரண்டையும் இழக்கும் நிலை வேண்டும் என்றார்.
எட்டாம் பாடலில் சமய சன்மார்க்க பொதுமை பெறல் வேண்டும் எனக் கோருகிறார்.
தொடர்ந்து அடுத்த பாடல்களைப் பார்ப்போம்.
2. ஐயாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்
அடிமுடி கண்டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயக நின்தனைப்பிரியா துறுதலும் வேண்டுவனே.
3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்ணுவத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண்டுவனே.
4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோதியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகி உலகியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
6. அடிகேள்நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்
அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.
7. அம்மாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்
ஆணவம்ஆதிய முழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல் வேண்டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
8. அச்சாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க்கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே.
9. அறிவாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
எப்படி மனம் துணிந்ததோ சுவாமி? - வனம் போய் வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ பூமி?
அனுபல்லவி
எப்பிறப்பிலும் பிரியவிடேன் என்று கை
தொட்டீரே
ஏழையான சீதையை நாட்டாற்றிலே விட்டீரே
(எப்படி)
சரணம் 1
கரும்பு முறித்தாற்போலே சொல்லல் ஆச்சுதோ? - ஒருக்
காலும் பிரியேன் என்று சொன்ன
சொல்லும் போச்சுதோ?
வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல
இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ - மெல்ல
என்னை விட்டு போகிறேன் என்று சொல்ல (எப்படி)
சரணம் 2
அன்னை கொண்ட வரம் இரண்டும் என்னைத்
தள்ளவோ - நீர்
அழகுக்கோ, வில்பிடித்து நிலம் ஊன்றிக் கொள்ளவோ?
குன்னமோ? உமக்கென்னைத் தாரம்
கொடுத்தவன் மேல்
அல்லவோ நேரம்?
என்னை
இட்டுக்கொண்டு போவதோ பாரம்?
இதுவோ
ஆண்பிள்ளைக்கு வீரம்? (எப்படி)
சரணம் 3
நாடிநீர்
போயிருக்கும் வனத்தின் பேர் சொல்ல வேணும் - அதை
நினைத்துக் கொண்டு
இறந்தால் அங்கே பிறக்கலாம் காணும்
கூடி நாம்உகந்திருக்கும்
காடு
குறைவில்லா என் மிதிலை
நாடு
காடு நீர் இல்லாத
வீடு
கால் வையும்
தெரியும் என் பாடு (எப்படி)
---------
குன்னம் = அவமானம்
______
நம்பினார்
கெடுவதில்லை என்றிருக்க நம்பி வந்த என்னை விட்டுப் பிரியலாகுமோ?
~வடிவாய்
நின் வல மார்பினில் (பிரிவின்றி) வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு~ என்று பெரியாழ்வார் பாடுகையில் பிராட்டிக்குத்தான் பிரிவுண்டோ? பின் ஏன் பிராட்டி கலங்குகிறாள்?
கொஞ்சம்
பின்னால் பால காண்டம் செல்வோம். அருணாசலக் கவிராயர் இராம அவதார நிகழ்வினை இவ்வாறு
பாடுகிறார்:
பரப்பிரம்ம சொரூபமே ஸ்ரீராமன் ஆகப்
பாரினில் வந்தது பாரும்!
பாரினில்
பரப்பிரம்மம் அவதராம் எடுக்கணும்னாலும்
பிரக்கிருதியின் துணை வேணும். பிரகிருத்தியினால் பரப்பிரம்மம் நாராயணனாகவும், நாராயணியாகவும் அவதாரம் எடுக்க முடிகிறது. இப்போ,
எடுத்த பின்னால், அதன் நோக்கம் நிறைவேறணுமே? இவர் மட்டும் தனியா காட்டுக்கு போன எப்படி
நிறைவேறும்?
ஆதலினால்
கலங்குகிறாள் பிராட்டி.
சாதரணப்
பெண் போல் அரற்றுகிறாள். உங்களுக்கு என்ன இரும்பு மனமா? நீ இங்கேயே இரு, நான் மட்டும்
காட்டுக்கு போகிறேன் என்று சொல்ல? நீங்கள் வில்லைப் பிடித்திருப்பது, ஃபோட்டோக்கு ஃபோஸ்
கொடுக்கவா? இதுதானா வீரம்? நீங்க போகிற வனத்தின் பேரைச்சொன்னால், அதை நான் நினத்துக்கொண்டே
இறந்தால், அந்த வனத்தில் மீண்டும் பிறந்து உங்களை அடைவேன் அப்படின்னு பிளாக்மெயில்
எல்லாம் பண்ணறாங்க.
அப்படியாவது
இராம அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எங்கிற முனைப்பினால்.
இதனால்,
சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்….
நம்முடைய
உடல் பிறக்க நம் அன்னை ஆதரமாக இருப்பது போல், நம்முடைய ஜீவன் உடலில் வசிப்பதற்கு பிரக்கிருதி
ஆதாரமாக இருக்கிறது.
எப்பிறப்பிலும்
பிரிய விட மாட்டேன் என்ற வாக்கைப் பெற்றுக்கொண்டு, இந்த பூமியில் பிறந்தோம். ஆனால் பிறந்தபின்,
வாசனையே வாழ்க்கை என்றாகி விட்டது. வந்த நோக்கம் என்ன? நட்டாற்றில் நின்றாலும், நாதனைப்
பிரியாது மீண்டும் எங்கிருந்து வந்தோமே, அந்த இடத்திற்கே சென்றடைவதுதான்.
இந்த
இராமயணக் காட்சி இப்படியாக நடந்தேறியதற்கு காரணம் – நம் பிறப்பின் நோக்கம் மறவாதிருக்க,
அதற்கான முனைப்பு நமக்கு ஏற்பட, நமக்கொரு பாடம் சொல்லத்தான்.
இதைவிடுத்து
இராமன் செய்தது சரியா? அல்லது சீதையின் மொழிகள் சரியா? என்று பட்டிமன்றம் நடத்துவது
வீண்.
மும்பை. சனிக்கிழமை மாலை. விக்டோரியா டெர்மினஸ் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தென்பட்ட அந்த நூலகத்துக்குப் போய் பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்படவே, அப்படியே செய்தேன். இந்தி மற்றும் மராத்தி புத்தகங்கள் நிறையவே இருந்தன. கொஞ்சம் நேரம் ஆங்கிலப் புத்தகங்கள் பகுதியில் சில புத்தகங்களை திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் வேறு என்னதான் இங்கிருக்கு என்று அங்கும் இங்கும் பார்க்க, ஒரு மூலையில் ஒரிரண்டு தமிழ்ப்புத்தகங்கள் தென்பட்டன. அவற்றின் அடியில் ஒரு கார்ட்போர்ட் அட்டைப்பெட்டியும் அவற்றில் சில புத்தகங்களும் இருந்தன.
அந்த அட்டைப் பெட்டியை கொஞ்சம் முன்னால் இழுத்துப் பார்க்க, அதில் குவியலாக இருந்தவை எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றில் பிரிக்காத பார்சல்களும் இருந்தன. புது புத்தகங்கள் போல் இருந்தது. ஒரு பார்சலை எடுத்து, கொஞ்சமாக முனையில் திறந்து பார்க்கலானேன். உள்ளே பிளாஸ்டிக்கில் ஆன ஏதோ இருந்தது. இன்னும் கொஞ்சம் விலக்கிப் பார்க்கையில், சி.டி தட்டுகளின் உறைகள் போல இருந்தது. வெறும் உறைகள் - புது சி.டி போடுவதற்கான பிளாஸ்டிக் உறைகள். சரி, அடுத்த பார்சலில் என்ன இருக்கிறது என்று பார்க்க அதை எடுத்தேன். அதற்குள் இரண்டு மூன்று பேர்கள் என் பக்கத்தில் வந்து, நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கலானார்கள். அவர்களுள் காக்கி உடை போட்டிருந்த ஒருவன் என்னை அதட்டி, "ஏன் நீ இதல்லாம் எடுக்கற?" என்று இந்தியில் கேட்டாவாறு, என் கையில் இருந்தை பிடுங்கிக் கொண்டான். பின்னார் "இங்க வா, இங்க வா", என்று பின்பக்கத்திற்கு இழுத்துக் கொண்டு போனான்.
"என்னவெல்லாம் பிரச்சனை வருது பார் இந்த ஊர்ல.." என்று தமிழில் அவன் தனக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டதில் இருந்து அவன் தமிழ்க்காரன் தான் என்று தெரிந்தது. அங்கிருந்த ஒரு டாய்லெட் ரூமிருக்குள் சென்று கதவை மூடினான். பின்னர் சி.டி தட்டுகளின் உறைகள் இருந்த பார்சலை ஒரு மூலையில் வைத்தான்.
என்னைக் கோபமாகப் பார்த்து, "என்ன பிரச்சனையை விலை கொடுத்து வாங்கப் பார்க்கிறாயா?" என்றான்.
அவனுடைய மிரட்டலில் பாபாசாப் தாக்ரே எல்லாம் எனக்கு நினைவில் வந்தது. அதே சமயம், சற்றுமுன் அவனது புலம்பலும் நினைவிற்கு வர, இவன் ஊருக்கும் வேலைக்கும் புதிதுபோல என்றும் இந்த பார்சலை மறைத்து வைக்கத்தான் இங்கே கொண்டு வந்திருக்கிறான் என்றும் ஊகித்தேன்.
"என்னப்பா இங்கேதான் எல்லாரும் வந்து போகிற இடம். இங்கே போய் மறைச்சு வைக்கப் பார்க்கிறாயே" என்றேன்.
அவன் வியப்பில் என்னைப் பார்க்க, நான் தொடர்ந்தேன்.
"என்னைக் கேட்டா, இது அந்த அட்டைப்பெட்டியிலேயே குவியலோடு குவியலோடு இருக்கலாம். இங்க நீ கொண்டு வந்து வைச்சாதான் தனியா இருக்கறதனால, ஈசியா யாரும் எடுத்துட்டுப்போக முடியும்" என்றேன்.
அவன் மேலும் வியப்பில் "அப்படியா சொல்றே?" என்றான்.
"இதுவாவது வெறும் சி.டி. உறை. அங்க மத்த பார்சல்களில் நிறைய புது புத்தகங்கள் இருக்கு போல.. அதெல்லாம் அங்கேயாதன் இருக்கப் போறதா?" என்றேன்.
"இதெல்லாம் வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. இன்னும் இங்கேயே தான் இருக்கு. இன்னும் எத்தனை நாள் இங்கேயே இருக்குமோ தெரியலை. அதுவரைக்கும் அதை காப்பாத்தணுமே" என்றான் கவலையில்.
"உன்னோட சாப்-கிட்ட சொல்லி சீக்கிரமா இவற்றை கணக்கில் கொண்டு வரலாம் இல்லே?" என்றேன். அதைச் சொன்ன பிறகுதான் தோன்றியது. ஒருவேளை வேண்டுமென்றெ கணக்கில் இருந்து மறைப்பதற்காகத் தான் இங்கே இருக்கிறதோ என்று.
"தேஷ்முக் சாப்-க்கு தெரியும், ஆனா அவரு இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே..." என்றான்.
"இதைக் காப்பாத்தணும்னா ஒண்ணு செய்யலாம், வா" என்று கதவைத் திறந்தவாறு அவனுடன் அந்த அட்டைப்பெட்டி இருந்த இடத்திற்கு சென்றேன்.
அட்டைப்பெட்டி முன்னால் இருந்த இடத்துக்கு வந்து பார்த்தால், அது அங்கே காணவில்லை.
"ஐயோ, என் வேலையே போச்சு" என கீழே உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்து விட்டான் இவன்.
சுற்றிமுற்றி பார்த்தால் அருகே எங்கேயும் காணோம். அதற்குள் விஷயம் அறிந்து கிடைத்ததை அங்கிருந்தவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்களா? அப்படி இருந்தாலும், காலியான அட்டைப்பெட்டி மட்டுமாவது இங்கு இருக்கணுமே? சரி - வெளியிலே போய்ப் பார்ப்போம் என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறினேன். கூடவே இவனும் தொடர்ந்தான். அப்போது தொலைவில் இரண்டு பேர் சேர்ந்து எதையோ தூக்கிச் செல்வது தெரிந்தது. ஓட்டமும் நடையுமாய் அவர்களுக்கு அருகாமையில் சென்றதும், அவர்கள் தூக்கிச் செல்வது அந்தப் பெட்டியைத்தான் என்று தெரிந்தது. அவர்களும் காக்கி உடை அணிந்திருந்தார்கள். ஒருவேளை, அவர்களும் நூலக ஊழியர்கள் தானோ?
கூடவே வந்த இவன், "ருக்கோ. ருக்கோ. எங்கே எடுத்திட்டு போறீங்க இந்த பெட்டியை?" என்று அவர்களைக் கேட்டான்.
அவர்கள் இவனைப் பார்த்ததும் திகைத்து முழித்தார்கள். அவர்களில் ஒருவன் சுதாகரித்துக்கொண்டு, "தேஷ்முக் சாப் கொண்டுவரச் சொன்னார்" என்றான்.
உடனே நான், "வாங்க நாம எல்லாரும் சேர்ந்து அவர் கிட்ட போவோம்" என்றேன்.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இவனும் கூடவே, "ஆமாம், வாங்க போலாம்" என்று உரக்கவே சொன்னதும், அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.
எல்லோரும் தேஷ்முக் சாப் அறைக்கு சென்று அவரிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவர் இந்த இரண்டு பேரையும் பெட்டியைக் கொண்டு வரச் சொல்லவே இல்லை என்று. அவர் இந்தப் புதிய புத்தகங்களின் வரவைப் பற்றியே மறந்து போயிருந்தார். நூலகத்தின் கேட்லாகில் சேர்க்கப்படாத இப்புத்தகங்கள் அட்டைப்பெட்டியில் பொதுமக்கள் கையில் படும்படி இருந்தன என்பதைக் கேட்டதும் அவரே ஆடிப்போனார். அவரது ஊழியர்களை உடனே அப்புத்தகங்களை கேட்லாகில் சேர்க்கச் சொன்னார். நூலகம் மூடுவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. வேலையை துரிதமாக முடிப்பதற்கு அவர்களுக்கு நானும் உதவுகிறேன் என்று ஒருகை என்ன, இருகைகளையும் கொடுக்க, அன்றைக்குள்ளே புத்தகங்கள் அனைத்தையும் நூலகத்தின் கேட்லாகில் சேர்த்துவிட்டோம். வேலை முடிந்ததும் வெறுங்கையுடன் நூலகத்தை விட்டு வெளியே வந்தேன். ஆனால் மனநிறைவுடன்! 😇