Friday, November 02, 2012

காற்றுக்கேது வேலி?

உன் இலக்கணம், உன் எல்லைகள், உன் வரம்புகள்,

என இவை எல்லாமே,

உன்னை ஒரு வரையுரைக்குள் அடைத்து,

அதனை நீ மீறிடாமற் குறுக்குவதாகவே உள்ளது.

உனக்கென ஒரு பெயர்.

உனக்கென ஒரு உயிர்.

சிக்குண்டாய் இங்கேயே.

நின்று ஒரு கணம் யோசி.

காற்றைப் பார்.

காற்றுக்கேது வேலி?

வானமும் எல்லை இடுமோ காற்றுக்கு?

அடைத்து வைத்தாலும்

உயிருடன் இருக்குமோ காற்றும்?

அறிவாய் மனமே,

எல்லைகள் இல்லாமல்

எங்கும் திரிந்து பறந்திட.

எங்கும் எதிலும் வியாபித்திட.

3 comments:

  1. ஆஹா, அருமை.

    ReplyDelete
  2. எல்லைகள் இல்லாமல்

    எங்கும் திரிந்து பறந்திட.

    எங்கும் எதிலும் வியாபித்திட.//

    இவை இன்னமும் அருமை. எங்கும் எதிலும் வியாபித்திடும் இறைவனும் நினைவில் வருகிறான்.

    ReplyDelete
  3. காற்றை உதாரணம் காட்டி மனத்திற்கு அறிவுரை.
    காற்று மாசுபட்டது கூட மனிதனால் தான்.
    அந்த மாசு மனிதனில் விளைவதற்கு மனிதன் காரணமாகக் கூடாது.
    மாசு படாத மனம் தெய்வீகம்.
    மனம் மனிதனை விழுங்கத் துவங்குவது தான் அதன் ஆக்கிரமிப்புக்கான முதல்
    வேலை.
    மாசு படாத மனத்தின் ஆளுகையில் மனிதனும் தெய்வமும் வேறல்ல.

    ReplyDelete