Tuesday, March 13, 2012

மனம் ஏதய்யா

ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி
புனைந்தது: அடியேன்

பல்லவி

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா - உனை

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

அனுபல்லவி

தொட்டுத் தொடர்ந்திடும் பழவினைகளும் தொடரவே  - உனை 

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

சரணம்

சொட்டு சொட்டெனத் தூர்த்திடும் நின்னருளுக் கேங்கிட

பட்டுப்போனதொரு பாலையில் நீரனெ நின்னருள்

மட்டிலா மகிழ்ச்சியை தந்ததே முருகய்யா - நிதம் உனை

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

4 comments:

  1. // பட்டுப்போனதொரு பாலையில் நீரனெ நின்னருள் //

    பாலை என்றாலே வரட்சிதானே !!
    அதுவும் பட்டுப்போயிற்றா ?

    அப்படி என்றால்,
    வரட்சி, வரட்சி ஆகிவிட்டது.
    நீர் வந்தது என் முன்னே நீர் வந்தது.
    நின்னருள் கிடைத்தது. !!

    சுப்பு ரத்தினம்.
    பி.கு. நானும் பாடுவேன்.

    ReplyDelete
  2. வாங்க சுப்புரத்தினம் ஐயா.
    அவசியம் பாடித்தர வேண்டும்!
    பாலைக்கு எப்போதுமே வரட்சி போல்

    மனதுக்கும் எப்போதுமே தற்போது இருப்பதே சாசுவதம் என்பதாகத் தெரிகிறது - அவனருள் வந்து சேரும் வரை!

    ReplyDelete
  3. பாடலை அருமையாகப் பாடித்தந்தமைக்கு நன்றிகள் திரு.சுப்புரத்தினம் ஐயா.

    பாடிலின் சுட்டி இங்கே.

    ReplyDelete
  4. அழகான பாடல் ஜீவா. தாத்தா பாடித் தந்ததையும் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி தாத்தா.

    ReplyDelete