மாணிக்கவாசகர் பெருமான், "சிந்தனைக்குள் தேனாக ஊற்றெடுத்தது" என்பார்.
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்அடியவர் மனதில் தேனாக ஊறி நின்றானாம் பிறப்பை அறுக்கும் "பிறவா யாக்கைப் பெருமான்".
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்தேற்றம்: கருத்து; தேற்றத் தெளிவு: கருத்து தெளிவித்திடும் அதன் சாறு.
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
இறுதியான முடிபாக ஒரு கருத்தானது நிறுவப்பட்டு இருக்குமேயானால், அந்த கருத்தின் சாறாகவும், அக்கருத்தாகவும் உறையும் எம்பெருமான், அக்கருத்தின் பயனான தெளிவாகவும் இருக்கிறானாம். அப்படிப்பட்ட சிந்தனை அல்லவோ உரத்த சிந்தனை!. எல்லா எண்ணக் குழப்பங்களுக்கும் இறுதியான முடிபாக, இனி ஏதும் விவாதிப்பதற்கில்லை என குன்றிடை விளக்காய் விளங்கி எல்லாக் கலக்கங்களையும் அறுத்துத் தள்ளுகிறான். அப்படிப்பட்ட நிலையில் கிடைக்கும் தெளிவானது, தீர்க்கமான தெளிவாக நிலைக்கப்பெறுகிறது. மாணிக்க வாசகர் பெருமான், மீண்டும் "சிந்தனைக்குள் ஊற்றாக" சிவபெருமானைக் குறிப்பிடுகிறார். இம்முறையும் உண்பதற்கு உகந்ததான ஒன்றுடன் ஒப்பிடுகிறார். அதுவும் அரிதானதும் மிகவும் விரும்பத்தக்கதுமான அமுதுடன் ஒப்பிடுகிறார். மனிதப்பிறவியின் அடிப்படைத் தேவையான உணவோடு இயைந்து அதுவாகவே சிந்தனைக்குள் ஊறிட, வேறென்ன வேறென்ன வேண்டும்? சிவனவன் சிந்தனையுள் நின்றதனால், அவனருளாலே, அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ சிவபுராணம் சொன்னார் மாணிக்க வாசகர்.
சிந்தனைக்குள் வற்றா ஊற்றாக, அமுத சுரபியாகத் திகழுமுன், தன் சிந்தையுட் புகுந்ததையும், பூங்கழல் காட்டியதையும் சொல்கையில்:
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே!....
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
இருளெனக் கிடந்த மனத்தில், ஒளி பொருந்திய விளக்காய் எழுந்தமையால், செழுஞ்சுடர் மூர்த்தியாய் விளங்கினான் பூசனைக்கு உகந்த ஈசன். விளக்கானது இன்னொருவரின் ஒளியினைப் பிரதிபலிக்காமல், தானக ஒளி தரும் கருவி. தானிருந்த இடத்தின் இருளை அகற்றி, ஒளியைப் பெருக்கி, எல்லா இடத்திலும் வியாபித்து என்றென்றும் இருக்கிறது.
பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாயதானாகச் சிந்தையில் வந்து புகுந்த ஈசன், அத்தோடு நில்லாமல், தாயைக் காட்டிலும் மிகுதியான பரிவோடு உள்ளொளியினைப் பெருக்கினானாம். அதனால் விளைந்த குறைவிலா ஆனந்தத்தினை என்னென்று சொல்வது! கைவிளக்கொன்றினால், இருள் அகல்வது இயற்கையன்றோ!
அல்லது, இயற்கையான நிகழ்வுகளை ஒரு பொருட்டாகக் கொள்ளாததனால், அவை அன்னியப்பட்டுப் போனதோ!?
வாட்டம் இல்லா மாணிக்க வாசக! நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் எனில் இங்கு நானடைதல் வியப்பன்றே!
- இராமலிங்க வள்ளலார்.
அருமையான எழுத்து. திருவாசகத்தில் ஊறிப் போய் இருக்கிறீர்கள். இம்மாதிரி எழுத முடியலையே என்ற ஆற்றாமை இருக்கு எனக்கு. என்றோ வந்தாலும் காணக்கிடைக்காத அரிய முத்துப் போல இப்படியான பதிவு நிறைவையும் தருகிறது.
ReplyDeleteஹூகும், இது இப்ப ராத்திரி 10 மணிக்கு படிக்கக்கூடிய பதிவு இல்லை.
ReplyDeleteவாங்க கீதாம்மா,
ReplyDeleteதங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.
வடுவூரார்,
ReplyDeleteபத்து மணிக்கு என்ன பண்ணறீங்க?
ஜீவா,
ReplyDeleteஏன் நீங்கள் திருவாசகத்தின் ஒவ்வொரு பத்தாக எடுத்துக் கொண்டு விரித்து,அலசி எழுதக் கூடாது?
கடப்பாடு ஏதும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை;ஆயினும் ஒரு வரிசைப் பதிவுகளாக அதை முயற்சி செய்யலாமில்லையா?
திருமந்திரத்திற்கு இதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது;ஏற்றுக் கொண்டதை முடித்து விட்டுச் செய்யலாம் என்று நினைக்கிறேன்..
கீதா பாட்ஸ்.. :))
நீங்கள் நினைத்தாலும் எழுதலாம்..முனைப்புதான் வேண்டும்.
:))
டெம்ப்ளேட்டில் கமெண்ட்களுக்கு அருகில் ரிப்ளை வருமாறு மாற்றுங்களேன்..நன்றி.
ReplyDeleteகீதா பாட்ஸ்.. :))//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அறிவன், அநியாயமா இருக்கே? :P :P :P :Pஎல்லாம் இந்தத் தங்கச்சிக்காவாலே வந்தது.
//தானாகச் சிந்தையில் வந்து புகுந்த ஈசன், அத்தோடு நில்லாமல், தாயைக் காட்டிலும் மிகுதியான பரிவோடு உள்ளொளியினைப் பெருக்கினானாம்...//
ReplyDeleteஅதனால்தானோ என்னவோ தாயிடமும் பகிர்ந்துகொள்ள ஏலாத ஒன்றை தெய்வத்திடம் சொல்லி கதறுமாறு சொன்னார்களோ ?
சுப்பு ரத்தினம்.
வாங்க அறிவன்,
ReplyDeleteஇதுபோல நிறைய தொடர்களுக்கான எழுதுவற்கான எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டும். என்றாலும் அவன் விருப்பமெதுவோ அதுபோலவே நடக்கட்டும்.
தங்கள் திருமந்திரத் தொடருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்!
டெம்ப்ளேட் மாற்றம் செய்ய வேண்டும் - நேரம் கிடைக்கையில்.
வாங்க சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteதெய்வமே "தாயும்"ஆனவனாக இருக்கின்றானே!
|| எல்லாம் இந்தத் தங்கச்சிக்காவாலே வந்தது.||
ReplyDeleteஅது யாரு...?