எனது ஆண்டிராய்ட் கைபேசியில் எப்.எம் இணைய வானொலி ஒன்றைத் துழாவிக்கொண்டிருக்கையில் பாட்டொன்று ஒலித்தது:
"அறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே...
அய்யங்காரு வீட்டு அழகே." (அன்னியன் திரைப்படப் பாடல்)
அறியாமை எப்போதாவது பேரின்பமாகுமா?
"... அறியாத" மானிடரை வையம் சுமப்பது வம்பன்றோ!
"Ignorance is Bliss" என்பார்கள் ஆங்கிலத்தில். சில சமயம் தெரிந்து துன்பப்படுவதை விட தெரியாமல் இருப்பதே தேவலை என்பதால் போலும்.
வேதாந்தம் உரைத்த ஞானியர் சொல்வார்:
இதைத்தான் அருணகிரியார் வேண்டுவார்:
அல்லது, ஐம்புலன்களுக்கும் மனதிற்கும் இடையே ஒரு பெருஞ்சுவரை எழுப்பியாக வேண்டும். மனதிற்கும் ஐம்புலன்களுக்கும் தொடர்பே இல்லாமல் செய்ய வேண்டும்.
அல்லது மனம் ஐம்புலன்களைப் பற்றியே அறிவே இல்லாமல், மனமானது "ஐம்புலன் அறியாமை" தனில் இருக்க வேண்டும். அப்படியொரு நிலையில் இருந்தால், அந்த அறியாமையும் பேரின்பம் விளைவிக்கலாம். ஏனென்றால், ஐம்புலன்கள் மனதில் மயக்கத்தினை விளைவிக்காத பொழுது, அது தனக்குள்ளே, தன் புத்தியில் பிரதிபலிக்கும் பரமனின் பிம்பத்தினைக் கவனிக்கத் தொடங்குகிறது. வாட்டத்தை ஓட்டும் நாட்டத்தை நாடி இருக்கிறது. அவ்வாறான "தன் வயப்பட்ட" நிலையில் வெளி உலகப் புலன் வழிச் செய்திகள் ஏளிதாக மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
பகவான் கண்ணன் கீதையில் உரைப்பதினை:
"அறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே...
அய்யங்காரு வீட்டு அழகே." (அன்னியன் திரைப்படப் பாடல்)
அறியாமை எப்போதாவது பேரின்பமாகுமா?
"... அறியாத" மானிடரை வையம் சுமப்பது வம்பன்றோ!
"Ignorance is Bliss" என்பார்கள் ஆங்கிலத்தில். சில சமயம் தெரிந்து துன்பப்படுவதை விட தெரியாமல் இருப்பதே தேவலை என்பதால் போலும்.
வேதாந்தம் உரைத்த ஞானியர் சொல்வார்:
அவித்தை என்னும் அறியாமையாவது தவறான அல்லது குறைவான புரிதலினால் விளைவது. அவித்தையின் விளைவால் மனதானது, தன் கண் போன போக்கிலே தன் கால் போகலாம் என நினைக்கிறது. "துய்ப்பது பரமன்" என்னும் உண்மையை உணராது, தனது புற அவையங்களால் துய்க்கப் படும் உணர்வுகளைத் தான் துய்ப்பதாகக் கொண்டு பெருமிதத்தில் புரண்டோடுகிறது.ஆகவே ஐம்புலங்களால் தான் இந்த அவித்தையே ஏற்படுகிறது அல்லவா? இன்புட்டே இல்லாமல் இருந்தால்?
இதைத்தான் அருணகிரியார் வேண்டுவார்:
"ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர்இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகத்தைச் சுற்றி வலம் வந்த ஐங்கரனைப் போல் அலைபாயும் மனது - அவ்வாறு செயல்படுவதற்கு - அதன் அவையங்களே பெரிதும் துணை புரிகின்றன. உள்வயப்படமால் வெளியுலக ஈர்ப்பிலேயே மனமானது உழல்கிறது. அதனால், ஐம்புலன்களையும் அகற்றிய நிலையினை வேண்டுகிறார்.
அந்தி பகல் அற்ற நிலை அருள்வாயே" என்று.
அல்லது, ஐம்புலன்களுக்கும் மனதிற்கும் இடையே ஒரு பெருஞ்சுவரை எழுப்பியாக வேண்டும். மனதிற்கும் ஐம்புலன்களுக்கும் தொடர்பே இல்லாமல் செய்ய வேண்டும்.
அல்லது மனம் ஐம்புலன்களைப் பற்றியே அறிவே இல்லாமல், மனமானது "ஐம்புலன் அறியாமை" தனில் இருக்க வேண்டும். அப்படியொரு நிலையில் இருந்தால், அந்த அறியாமையும் பேரின்பம் விளைவிக்கலாம். ஏனென்றால், ஐம்புலன்கள் மனதில் மயக்கத்தினை விளைவிக்காத பொழுது, அது தனக்குள்ளே, தன் புத்தியில் பிரதிபலிக்கும் பரமனின் பிம்பத்தினைக் கவனிக்கத் தொடங்குகிறது. வாட்டத்தை ஓட்டும் நாட்டத்தை நாடி இருக்கிறது. அவ்வாறான "தன் வயப்பட்ட" நிலையில் வெளி உலகப் புலன் வழிச் செய்திகள் ஏளிதாக மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
பகவான் கண்ணன் கீதையில் உரைப்பதினை:
மமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூ⁴த: ஸநாதந: |
மந:ஷஷ்டா²நீந்த்³ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7||
"நானே ஜீவனாய் இருக்கிறேன். பிரகிருதியில் இருப்பதும் நானே. மனம் மற்றும் ஐந்து புலன்களையும் நானே கவர்கிறேன்."மனதில் நிறுத்திட வேண்டும்.
அடடா !! இந்த மாதிரி பதிவுகளைப் பார்த்து எத்தனை நாட்கள் மாதங்கள் ஆகிவிட்டன ! ஜீவாவுக்கு
ReplyDeleteஇந்த மாதிரி எழுதுவதற்கு அடிக்கடி தோன்றவேண்டுமே !! வினாயகா !! ஓடி வந்து ஹெல்ப் பண்ணு.
அது சரி..
ஐம்புலனுக்கும் மனசுக்கும் இடையே ஒரு சுவர் வேண்டும். அப்படி இருந்தால்
அது அவித்தை என்னும் நிலைக்குக் கொண்டு செல்லும் சாத்தியம் படைத்தது என்றால் !!
கொஞ்சம் புரியவில்லை....
பார்க்காத, கேட்காத பேசாத உணராத சுவையாத ஆள் கூட தனது புத்தி பூர்வமாக ஒரு விஷய
சுகத்தைப் பற்றி நினைத்து சுகப்படலாம் அல்லது துக்கப்படலாம்.
இன்டெலெக்ட் இஸ் இன்டிபென்டன்ட் ஆஃப் மைன்ட்ஸ் ப்றௌவஸ் டு அப்சார்ப் அன்ட் அனலைஸ்
திங்ஸ் காம்பிர்ஹென்டட் என்று தானே சைகாலஜி சொல்கிறது.
இந்த காக்னிடிவ் பிஹேவியர் இஸ் இன்டிரின்ஸிக் இன் ஹ்யூமன் நேசர் இல்லையோ !!
அது ஒரு பக்கம் இருக்கட்டும். அதெல்லாம் வியர்த்தமான டிஸ்கஷன். லீடிங்க அஸ் டு நோவேர்.
இந்த மாதிரி ஒரு சுவர் இருந்ததுன்னு அப்படின்னா,
அந்த வினாயகனை, விக்னேஷ்வரனை, கணபதியை, பிள்ளையாரை,
எப்படி பார்த்து ரசிப்பது !!
அவனுக்காக படைக்கப்படும் கொழக்கட்டையை உண்டு களிப்பது. !!
இது அவன் தரும் சுகமல்லவோ !!
இது அவனை அடைவதற்காக அவன் தந்த மனதிற்கு ஒரு இதம் அல்லவோ !!
அவனைப் பார்ப்பதற்கு
காணக் கண் கோடி வேண்டுமல்லவோ !!
ஹாவிங் செட் தட்,
பதிவு சிந்தனையைத் தூண்டக்கூடியது.
இது மாதிரி எழுதுவது
வினாயகன் க்ரேஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே
சாத்தியம்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspsot.com
வாங்க சுப்புரத்தினம் ஐயா,
Deleteதங்கள் விநாயகர் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!
புத்தி மற்றும் அகங்காரம் - இவற்றின் விளைவுகளை இந்த பதிவிற்கு சற்றே தள்ளி வைத்தேன். ஐம்புலன்களை மட்டும் நோக்குவதற்காக.
காணக் கண் கோடி வேண்டும் தான், ஆனால் இல்லையே! இரண்டு கண்ணை மட்டும் வைத்துக்கொண்டு தன் எல்லையே அண்ட சராசராமும் என்றல்லவா மனது நினைக்கிறது!!
சுவைக்கும் நாவே, சுவையைத் துய்ப்பது பரமன், அவனுக்காக உண்டு களி!
கண்டு களிக்கும் கண்ணே, காண்பது பரமன், கருத்தினில் வை!
அனைத்து அவையங்களும் மூளைக்குச் செலுத்தும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களிலும் இந்த செய்தியை கூடவே செலுத்தி வை!
அருமையான பதிவு, ஜீவா. 'அறியாமை'யும் இன்பம் என்பதை அழகாகப் புகுத்தி விட்டீர்கள்.
ReplyDelete//சுவைக்கும் நாவே, சுவையைத் துய்ப்பது பரமன், அவனுக்காக உண்டு களி!
கண்டு களிக்கும் கண்ணே, காண்பது பரமன், கருத்தினில் வை!
அனைத்து அவையங்களும் மூளைக்குச் செலுத்தும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களிலும் இந்த செய்தியை கூடவே செலுத்தி வை!//
உணர்வுகள் இல்லாமல், அவற்றை உணராமல், மனிதனால் இருக்க முடியாது; ஆனால் அந்த உணர்வுகள் எல்லாவற்றையும் இறைவனை நோக்கித் திருப்பி விடுவதே பக்தி யோகம் என்று விவேகானந்தரும் சொல்கிறார்.
நல்ல பதிவிற்கு நன்றி.
வாங்க கவிநயாக்கா,
ReplyDeleteதங்கள் இரசிப்பிற்கும் நன்றிகள்.
அல்லது மனம் ஐம்புலன்களைப் பற்றியே அறிவே இல்லாமல், மனமானது "ஐம்புலன் அறியாமை" தனில் இருக்க வேண்டும்.//
ReplyDeleteariyamai enbathe mayakkam than illaiya? athu eppadi perinbathai tharum? puriyalai. ippo ennooda ariyamaikku ithile kuzappam.
sury sir solli iruppathu pola ippadiyana pathivukaLai adikkadi thara nanbar arula vendum.
வாங்க கீதாம்மா,
Deleteநாம சில சமயம் ஆழ்ந்த யோசனையில் இருக்கையில், சில சமயம் மற்றவர் பேசுவதினை கவனக்காமல் விட்டு விடுகிறோம் அல்லவா? இந்த சமயத்தில், என்ன நடக்கிறது? நமது செவி வேலை செய்யாமல் இல்லை. செவியில் விழுந்த ஒலி அலைகள் மூளை வரை செலுத்தப் படுகிறது. ஆனால் நமது கவனம் வேறொன்றில் *நன்கு* நிலைத்திருக்கையில், அந்த அவையம் கொடுத்த செய்தியனையும் விட்டுவிடுவதினைத்தான் - இங்கே "புலன் அறியாமை" என்று சொல்ல விழைகிறேன். மனதினைப் பொருத்தவரை - அது பரமனை மட்டுமே கவனித்திருக்கையில், புலன்கள் தரும் செய்திகளை மனம் பொருட்படுத்தாமல் ignore செய்யும் கலையெனக் கருதுகிறேன்.
en ponravarkalukkum puriyara mathiri vilakkam. nanri. meymmarantha bakthi. illaiyaa? bakthi sethalum athile gnanam kidaikkumnu solringa. sariya?
ReplyDeleteநிச்சயமாக. அன்பினால் ஏற்படும் மெய்மறத்தலான பக்திக்கு கூடுதலான சக்தி உண்டெனல் வேண்டும்.
Deleteஒருமுறை இரமண மகரிஷியிடன் அன்பர் ஒருவர் கேட்டாராம் "பக்தியா, ஞானமா? யோகத்தில் எது சிறந்த கருவி என்று" பகவான் அதற்கு, "பக்தியில்லாமல் ஞானம் உண்டாகுமா அல்லது ஞானமில்லாமல் பக்திதான் உண்டாகுமா?" என்று வினவினாராம்.