ஓம் சக்தி! சிவசக்தி! பராசக்தி!
பாரெங்கும் பரவடிவம் அதுவே பராசக்தி வடிவம். வல்லமை தந்திட வேண்டும் வரமென
ஒரே பாட்டில் ஆறு துணை நாடும் அரும் பெரும் பாடல் - பாட்டுக்கொரு புலவன் பாரதி வடித்தது.
இப்பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடுவதை கேட்கலாமா?
ஆறு துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கணபதி:
கணபதி ராயன்-அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
சக்தி:
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
முருகன்:
வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
கலைமகள்:
தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
கண்ணன்:
பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே-குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
திருமகள்:
செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
அடுத்த பாட்டு. சிவசக்தியைப் பாடும் பாடல். தக தக என ஆடி சக்தியைப் பாடும் பாடல். இரண்டு வாரங்களுக்குமுன் இங்கு அட்லாண்டாவில் நடந்த கச்சேரியிலும் நித்யஸ்ரீ மஹாதேவன் அற்புதமாய் பாடினார். அதே பாடல், அவரது குரலில்:
சக்திக் கூத்து
பல்லவி
தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ?
(தகத்)
சரணங்கள்
அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-அவள்
அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே.
(தகத்)
புகப்புகப் புக இன்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே
(தகத்)
மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென
(தகத்)
இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்
(தகத்)
ஏற்கனவே இங்கே சென்னையிலே வெய்யில் கொளுத்துகிறது. நெருப்பு போல உடல் எறிகிறது.
ReplyDeleteஅப்ப நித்ய ஸ்ரீ பாடிய தக தக தக என்று சிவ சக்தியின் பாடலும் சேர்ந்து,
அக்னி குண்டம் நடுவில் நிற்பது போன்ற பிரமை
ஏற்பட்டது என்றால் மிகையல்ல.
சுப்பு ரத்தினம்.
வாங்க சூரி சார்!
ReplyDeleteதங்களைப்போன்ற நல்லோர்கள் இருப்பதால், ஆங்காங்கே கோடை மழையும் இருக்கிறதல்லவா!
நன்றி ஜீவா!
ReplyDeleteவாங்க கவிநயாக்கா!
ReplyDeleteஓம் சக்தி சிவசக்தி பராசக்தி ஓம்
ReplyDelete