யானைப் பாட்டு!
பாடகர்:
யானை யானை யானை!
மரங்களில் தாவும் யானை!
மழலை:
இல்லை, மரங்களில் தாவுவது குரங்கு!
பாடகர்:
ஆமாம், மரங்களில் தாவும் குரங்கு!
குரங்கு, கடலில் நீந்தும் குரங்கு!
மழலை:
இல்லை, கடலில் நீந்துவது மீன்கள்!
பாடகர்:
ஆ.., கடலில் நீந்துவது மீன்கள்!
மீன்கள், குரைக்கும் மீன்கள்!
மழலை:
இல்லை, இல்லை, குரைப்பது நாய்கள்!
பாடகர்:
அட,ஆமாம்!, குரைப்பவை நாய்கள்!
நாய்கள், எலிகளை துரத்தும் நாய்கள்!
மழலை:
இல்லை, எலிகளை துரத்துபவை பூனைகள்!
பாடகர்:
ஆமாம்,ஆமாம்!, எலிகளை துரத்துபவை பூனைகள்!
பூனைகள், கொக்கரக்கோ எனக்கூவும் பூனைகள்!
மழலை:
இல்லை, பூனைகள் மியாவ் எனக் கத்தும்.
கொக்கரக்கோ எனக்கூவுவது சேவல்!
பாடகர்:
சரிதான், கொக்கரக்கோ எனக்கூவுவது சேவல்!
சேவல், தேனீக்கூட்டில் ஏறித் தேனெடுக்கும் சேவல்!
மழலை:
இல்லை, இல்லை, தேனீக்கூட்டில் ஏறித் தேனெடுப்பது கரடி!
பாடகர்:
ஆமாம்!, தேனீக்கூட்டில் ஏறித் தேனெடுப்பது கரடிகள்!
கரடி, நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிக்கும் கரடி!
மழலை:
இல்லை, இல்லை, நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிப்பது தவளை!
பாடகர்:
ஆமாம், நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிப்பது தவளை!
பெரிய தும்பிக்கை கொண்டது தவளை!
மழலை:
இல்லை, இல்லை, தும்பிக்கை கொண்டது யானை!
பாடகர்:
அட, ஆமாம், அதான் முதல்லேயே சொன்னேனே யானை என்று!
இது யானைப் பாட்டு என்று!
மழலை:
உனக்கு யானையைப் பற்றி ஒண்ணும் தெரியலை!
எந்த விலங்கைப் பற்றியும் தெரியலை!
பார்த்தாச்சா, இதுபோலத்தான் 'நேதி நேதி' யும்...
"நேதி நேதி" ன்னு ஆத்ம போதம் பகுதியிலே முன்பே பார்த்திருக்கோம் அல்லவா இங்கே!
இது இல்லை, இது இல்லை என்று கழித்துக் கொண்டே போகிற நேதி நியாயத்திற்கு,அந்த வீடியோவும், யானைப் பாட்டு மொழிபெயர்ப்பும்,
ReplyDeleteஅருமை! மிக அருமை!
வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்,
ReplyDeleteநன்றிகள்!
உங்கள் மொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் பதிவு பாட்டைப் பாடி ரொம்ப நாளாச்சு.
எனக்குத் தெரிஞ்ச மெட்டிலே உங்கள் யானை பாட்டை இங்கே பாடியிருக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=oukChTWobtU
இனிமே பாடக்கூடாது அப்படின்னு சட்டம் போட்டாதான் நான் பாடாமே இருப்பேன் போல இருக்கு.
சுப்பு ரத்தினம்.
இப்போதைக்கு தோஹா. (கடார்)
:-)))))
ReplyDeleteஅருமையா பாடிக் கொடுத்தமைக்கு சுப்பு தாத்தாவிற்கு நன்றிகள்!
ReplyDeleteவாங்க திவா சார்!
ReplyDelete