எந்த ஊர் எனத் தெரியவில்லை, ஒரு கிராமம் போல இருந்தது. அதில் அப்போது நாங்கள் வசித்து வந்த வீடு கொஞ்சம் வித்யாசமானது. பெரிய வீடு. கொஞ்சம் பழைய வீடு. கிராமத்தில் எங்கள் தாத்தவின் வீடு போலவே தோற்றமளித்தது. ஆனால் தாத்தாவின் வீடுபோல் தனி வீடு அல்ல. ஒட்டினாற்போல் பக்கத்திலேயே இன்னும் சில வீடுகள். அதிக வீடுகள் இல்லை, சுமார் நான்கைந்து இருக்கும். எல்லா வீடுகளுக்கும் முன்னால் பொதுவாக, பெரிய காலியான மைதானம் போன்ற வெற்று வெளி். அந்த இடத்தை சுற்றிலும் மதில் சுவர் ஒன்று அமைக்கப்பட்டு, இந்த இடம் எங்களால் மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்தது. மதில் சுவரை ஒட்டி, கார்கள் மற்றும் ஏனைய வண்டிகளை நிறுத்துவதற்காக வெள்ளைக் கோடுகள் போட்டு இடம் ஒதுக்கப் பட்டு இருந்தது. (கிராமத்தில் இது எப்படி? இப்படி, சம்பந்தமில்லாதவை கனவில் ஒன்றாக கலக்கும், கனவில், இதைப்பற்றியெல்லாம் கேட்பதில்லை!). திறந்த வெளியில் ஆங்காங்கே ஒரு சில மரங்களும் இருந்தது.
அப்போது நான் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு கலை நிகழச்்சியைப் பார்ப்பதற்கு. கூட என் மனைவியும், தந்தையும் வருகிறார்கள். இன்னும் 15 நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்குகிறது. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு இதற்கு முன் சென்றதில்லை. ஆனால், இணைய தளத்தில் பார்த்ததில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் வீட்டுக்கு பக்கத்திலேயே இருப்பதாக தெரிந்தது. நடந்தே போய் விடலாமா என முதலில் யோசனை. பின்னால் காரிலேயே செல்வதாக முடிவு செய்தேன். வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய வெள்ளை நிற ட்ரக் நிறுத்தப் பட்டு இருந்தது. எதற்காக என்று சரியாகத் தெரியவில்லை. எதற்காகவோ வாடகைக்கு அமர்த்தி இருந்தோம். வீட்டுக்கு வெளியே வந்தவுடன் தான், ட்ரக் வாசலிலேயே நிற்பது கவனத்துக்கு வந்தது. உடனே அதை ஓரமாக நிறுத்த முயன்றேன், இந்த அவசரத்தில் இதுவேறா என்ற சலிப்புடன். அவசர அவசரமாக அதை சிரமத்துடன் நிறுத்தி விட்டு, காரில் எல்லோரும் ஏறினோம். காரை, அது நிறுத்தப் பட்டு இருந்த இடத்திலிருந்து வெளியே எடுத்தேன். திடீரென, கார்களை பார்க் செய்வதற்கு வசதியாக போடப்பட்டு இருந்த வெள்ளைக் கோடுகள் கவனத்தை ஈர்த்தன. ஏனோ தெரியவில்லை, காரை ரிவர்ஸில் எடுத்து, அந்த இரு வெள்ளைக் கோடுகளுக்கு இடையே நிறுத்தி விட்டேன். பின்தான் நிறுத்தக் கூடாது, வெளியே செல்ல வேண்டுமே என்ற நினைவு மனதில் உறைக்க, மீண்டும் காரைக் கிளப்பி, ஒரு வழியாக வேளியே வந்தேன்.
இணையத்தில் அரங்கத்திற்கு செல்லும் வழியை பார்த்து இருந்ததில், வீட்டில் இருந்து வெளியே வந்தபின் இடது பக்கம் திரும்பி, பின்னர் அடுத்த சாலையில் மீண்டும் இடது பக்கம்் திரும்ப வேண்டும் எனச் சொல்லி இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தவுடனே அடுத்த திருப்பம் வந்தது. அதில் இடது பக்கம் திரும்பியதில் அரங்கம் என்று வெளியே எழுதி இருந்ததைப் பார்த்து, காரை அதன் அருகே நிறுத்து விட்டு, வெளியே வந்தேன். அப்போதுதான் கவனிக்கிறேன். இந்த அரங்கமும், நாங்கள் வசிக்கும் வீட்டின் பின் பகுதியில் இருப்பதுதான் என்று. அடடா, இத்தனை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்துடன், வேகமாக நுழைவாயிலைத் தேடி நடக்கிறேன். நுழைவதற்கான வழி எங்கே இருக்கிறது என்பதை தேடிக் கொண்டே விரைவாக நடந்ததில், மற்றவர்கள் கூட வருகிறார்களா என்பதுகூட கவனிக்காமல், இப்படியும் அப்படியும் விரைந்தேன். பின்னர் சிறிதான ஒரு வாயில் தென்பட்டது. இவ்வளவு பெரிய அரங்கத்திற்க்கு இவ்வளவு சின்ன வாயிலா என்ற சந்தேகத்துடன், பின்னால் திரும்பிப் பார்த்தால், கூட வந்தவர்கள் யாருமில்லை. அப்போது, இந்த வாயில் வரை ஏற்கனவே வந்து திரும்பியது போன்ற விந்தையான உணர்வு வந்தது. சரி, அவர்கள் வருவதற்குள், இதற்குள் சென்று இதுதான் சரியான வழியா என்று பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று உள்ளே செல்லலானேன்.
உள்ளே செல்லச் செல்ல அது, குகைபோல விரிந்தது. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய நெடிசலான ஒற்றையடிப் பாதை அது. கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் எப்படி, தேடல் விரிந்து கொண்டே செல்கிறதோ அதுபோல பாதை சென்று கொண்டு இருந்தது. சிறிது தூரம் சென்றபின், ஒரு மூலையில் இதற்கு மேல் செல்ல இயலாத இடத்தை அடைந்தேன். அந்த இடத்தில் இருந்து மேலே பார்த்தால், திறந்த வெளியாக மேலிருந்து வெளிச்சம் உள்ளே வந்தது. வெளிச்சம் வரும் திசையில் செல் என உள் மனது உச்சரித்தது. அந்த இடத்தில் பக்கத்துச் சுவர் சுமார் நான்கு அடிகள்தான் இருந்தது. சரி, இதன் மேல் ஏறி அந்த வெளிச்சம் எங்கிருந்து வருகிறது எனப் பார்க்கலாம் என தீர்மானித்தேன். கைகளை சுவரின் மேல் ஊன்றியவாறு, எம்பிக்கொண்டு, அதன்மேல் ஏறி, மேல் பக்கம் வந்தடைந்தேன்.
மேலே ஏறி வந்த பின் அந்த இடம் அந்த வீட்டின் மொட்டைமாடி எனத் தெரிகிறது. மொத்த மாடியும் மொட்டையாக இருக்காமல், அங்கேயும் அறை ஒன்று இருந்தது. அதன் மேல் புறக் கூரை கீற்றுகளால் வேயப்பட்டு இருந்தது. அதன் வாசலில் இரும்புச் சட்டங்களில் ஆன கதவொன்றும் இருந்தது. அதன் வழியே உள்ளே ஏதாவது தெரிகிறதா எனப் பார்க்கலாம் என நினைத்து, அதை நெருங்க, யாரோ அருகில் வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
அவன் ஒரு இளைஞன். அவன் சட்டையில் ஆங்காங்கே கறுப்பாக அழுக்காகி இருந்ததில், அவன் எதோ வேலையாள் போலத் தோன்றியது. "என்ன சார், இங்க டிக்கட் வாங்க வந்தீங்களா, டிக்கட் எல்லாம் வித்துப் போச்சுங்க, ஹவுஸ் ஃபுல் ஷோவாம், அதோ பாருங்க, டிக்கட் வாங்கினவங்க எல்லாம் உள்ளே இருக்காங்க" எனக் கை காட்டினான். இரும்புச் சட்டங்கள் வழியாக அந்த அந்த கட்டிடத்தின் கீழ் தளம் தெரிந்தது. அங்கே மனிதர்கள் கையில் எதோ காகிதங்களை வைத்துக்கொண்டு, இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டவர்கள் போலத் தெரிந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன், முதலில் தோன்றியது - இந்த இடத்தை விட்டு முதலில் அகல வேண்டும் என்பது தான்.
அப்போதுதான் அப்பா மற்றும் மனைவியின் நினைவு வந்தது. அடடா, அவர்களை விட்டுவிட்டு வந்து இவ்வளவு நேரம் கடந்து விட்டதே, அவர்கள் நமக்காக எங்கெல்லாம் தேடுகிறார்களோ என்ற கவலை அரித்தது. அனேகமாக அந்த குகை போன்ற நுழை வாயில் வரை வந்து அங்கே காத்திருப்பார்கள், முதலில் அந்த இடத்துக்குச் சென்று பார்ப்போம் எனத் தோன்றியது. என்னுடன் பேசிய இளைஞனோ என்னை விட்டு தூரத்தில் எதோ படிகளில் இறங்கிச் செல்லத் துவங்கி விட்டான். நாம் வந்த வழியை விட இந்த இளைஞன் செல்லும் வழி அனேகமாக சரியானதாகத் தான் இருக்கும் என எண்ணி அவனை பின் தொடரலானேன். தொடர்ந்து அந்தப் படிகளில் நானும் இறங்கினேன். சில வளைவுகளுக்குப்பின் ஒரு திறந்த இடத்தை அடைய, அந்த இளைஞனைக் காணோம். அந்த இடமும் தரையிலிருந்து நீண்ட உயரத்தில் இருந்தது. அந்த இடத்தில்் இருந்து சற்று தொலைவில் கூட்டமாக பின்புறம் திரும்பியவாறு கொஞ்சம் நபர்களும் - அதில் அப்பாவும் மனைவியும் கூடத் தெரிந்தார்கள்.
இந்த உயரமான இடத்திலுருந்து கீழே குதித்தால்தான் அந்த இடத்தை சீக்கிரமாக அடைய இயலும் என்று முடிவு செய்தேன். ஆனால் அது எவ்வளவு அபாயகரமானது என்பதை என் மனம் யோசிக்கவே இல்லை. அந்த இடத்திலிருந்து நேராக குதிக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் பக்கத்திலுள்ள மதில் சுவரிலோ அல்லது கூரான இரும்பு வேலிக் கம்பிகளிலோ விழுந்திடக்கூடும். குதிப்பது என விளிம்புக்கு வந்து, ஒரு காலைத் தூக்கியவுடன் தான் இதெல்லாம் வேறு கண்ணுக்குத் தெரிகிறது. இனிமேல் திரும்பவும் முடியாது. என்ன செய்வது, அதிகம் யோசிக்காமால் குதிப்பதே நல்லது என்று எண்ணி குதித்தும் விட்டேன். நல்லவேளே, அடி ஏதும் படாமல் நல்லபடி கீழே வந்துவிட, படுக்கையில் இருந்து எழுந்தேன்.
கனவு கலைந்து, இது கனவுதானா என பெருமூச்சு விட்டாலும் கனவின் நினைவுகள் அவ்வளவு எளிதாக நினைவினில் இருந்து அகலவில்லை. அவ்வளவு எளிதில் அகலக் கூடியதா இந்தக் கனவு?!
கனவினை ஒரு அழகான கதையாக வடித்தது நன்று. கனவினில் தொடர்பில்லாமல், சம்பந்தமில்லாமல், நிகழ்வுகள் சட்டென மாறும். நமது மனதின் அடி மனதில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் சிந்தனைகள், ( நம்முடையவேயே தான் ) மெதுவாக எழுந்து வரும். சட்டென விழிப்பு வந்து அன்றைய தினம் முழுவதும், கனவில் வந்தது என்ன ? அதன் பொருள் என்ன ? அதன் தாக்கம் என்ன? என்ற சிந்தனைகளே மேலோங்கி நிற்கும்.
ReplyDelete//அவ்வளவு எளிதில் அகலக் கூடியதா இந்தக் கனவு?!//
ReplyDeleteசில கனவுகள் அப்படியே ரியலா இருக்கும். கனவு என்பதைக் கண்டவரே நம்ப முடியாது.
வாங்க திரு.சீனா மற்றும் துளசி மேடம்!
ReplyDelete//கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் எப்படி, தேடல் விரிந்து கொண்டே செல்கிறதோ //
ReplyDeleteகனவிலும் ஆன்மீகத் தேடல் விரிகிறது, வாழ்த்துக்கள்!
குரியீடினைக் கண்டுகொண்ட நண்பர் சர்மாவுக்கு வணக்கம்!
ReplyDelete////கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் எப்படி, தேடல் விரிந்து கொண்டே செல்கிறதோ //
ReplyDeleteகனவிலும் ஆன்மீகத் தேடல் விரிகிறது, வாழ்த்துக்கள்!//
ரீப்பீட்டே..
ஆம், மதுரையம்பதி, ஒற்றையடிப்பாதை, உச்சிமாடி, இரும்புச் சட்டங்களுக்குப் பின்னால் மனிதர்கள் - இப்படி வந்த கனவை யோசித்துப் பார்த்தால் ஏதோ பொருள் இருப்பதாகவே தெரிகிறது!
ReplyDeleteகுறியீடுகள் நிறைய இருப்பது தெரிகிறது. ஆனால் உட்கார்ந்து யோசித்தால் தான் எல்லா குறியீடுகளும் புரியும் போல் இருக்கிறது. :-)
ReplyDeleteஆம், குமரன்!. விளக்கி இருக்கலாம் - ஆனால் அப்புறம் கதை - காலட்சேபம் ஆகி இருக்கும்!
ReplyDeleteகனவில் வந்தன எல்லாவற்றையும் சும்மா விலா வாரியா எடுத்து வீசறீங்களே !
ReplyDeleteஇது நிசமாவே கனவாஅல்லது கற்பனையா ? புரியலையே !
ஒண்ணு மட்டும் சொல்றேன். எல்லாரும் கேட்டுக்கங்க.
கனவிலே வர்றதுக்கெல்லாம் ஒரு அருத்தமும் இல்லேங்கோ.
நிசமா பாத்தா நம்ம ஆழ் மனசிலே சில நிறைவேறாத ஆசைக
முழுசா இல்லாத நிகழ்ச்சிக சில
அங்கங்க தொத்திகிட்டு இருக்குங்க.
இதெல்லாம் தூக்கி வெளியே எறிந்து கொஞ்ச ஸ்பேஸ் க்ளியர் பண்ணூதுங்க..
ஒரு ஹார்ட் டிஸ்கிலே ஃப்ராக்மென்டட் files
மாதிரின்னு வைச்சுக்கோங்க...
நம்ம புலன்களெல்லாம் தூக்கத்திலே ஜகா வாங்கின்னு இருக்கற நேரம் பாத்து
பிரைன் என்ன செய்யுதுன்னா..
defragmenting existing connections without a valid information
and also throwing out what you do not generally use.
பாருங்க..
இதையெல்லாம் நினைச்சுட்டு டயத்தெ வேஸ்ட் பண்ணாதீங்கோ..
அம்புடுதே ..
அ ஆ
வாங்க அனானி,
ReplyDeleteநிஜமாகவே கனவுதான், எழுதி முடித்தவுடன் இவ்வளவா என என்னையே ஆச்சரியப்பட வைத்ததுதான்! சில சமயம் - A picture speaks thousand words - என்பதுபோல கனவில் காணும் காட்சியில் பல சிறு சிறு விவரங்களாக பல்வேறு பதிந்து இருக்கும். - That makes up!
கனவில் வருவது எல்லாமே தேவையற்றவை என ஒதுக்கி விட முடியது. கனவுதான் உள் மனதிற்கும் வெளி மனதிற்குமான பாலம். அது பயனுள்ள கருவி. சரியாக பயன்படுத்தத் தெரிந்தால் ், எண்ணச்் சீரமைப்பு செய்யலாம். எது தேவையானது, எது தேவையற்றது என அவரவராக தீர்மானித்து நல்வழிப்படுத்தலாம்.
கனவினால் எந்த எண்ணமும், ஆசையும் தூக்கி எறியப்படுவதில்லை - அவராக முயற்ச்சி செய்து தேவையற்றதை தூக்கி எறிந்தாலோ தவிர - hard disk ஐ க்ளீன் செய்ய இயலாது.
ஜீவா ஐயாவுக்கு நன்றிங்கோ.
ReplyDeleteஎன்னோட response
இன்னம் ஒருதரம் படிக்கவேணும்ங்க. உங்கள கொறை சொலறதா இல்லீங்க நான் எழுதினது.
விசயம் என்ன அத மட்டும் நம்மகிட்டேந்து பிரிச்சு பாக்கணோம்ங்க.
கனவு பத்தி ஃப்ராய்டு ந்னு ஒத்தரு கூட எழுதிவெச்சிருங்காங்க..
நீங்களே இத கனவெல்லாம் காலைலே எழுந்திருச்சி சும்மா record le போட்டு வச்சுங்க.
சும்மா 10 இல்ல 15 கனவும் வந்தப்புரம் அத்தனயும் மொத்தமா பாருங்க.
(Do an objective and collective analysis of all the dreams)
Find out whether any common denominator emerges !
என்ன தெரியுது? கனவிலே பாத்திரமெல்லாம் ஏற்கனவே நாம பாத்தவங்க.
கனவிலே நாம் பாக்கற நிகழ்ச்சியெல்லாம் எப்பவோ நம்ம அரகுறையா கண்டது தானுங்க.
நம்ம தினசரி ரோடுலே தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லோரயும் பாக்கரோம்ல ?
1. இதெல்லாம் நம்ம மூளைலே ( ? ) அங்கங்கே பதிவாவுதுங்க. இதுலே 2 இருக்குங்க.
ஒன்னு கான்ஸ்யஸ் பர்சப்ஸன். ரண்டாவது சப் கான்ஸஸ் பர்சப்சன்.
2. நம்ம மூளைக்கு ஒரு அபார சத்தி வுண்டுங்கோ. அதை பில்டர் மெகானிசம்ன்னு சொல்லுவாங்க.
அதாவது நாம எத விரும்பறோமோ அத மட்டும் எடுத்துகினு மத்ததை இப்பொதைக்கு தள்ளிடுங்க.
ஆனா கண்ணு எல்லாத்தயும் பாக்கத்தானே செய்யுது காதுங்க எல்லாத்தெயும் கேக்கத்தானே செய்யுது.
3. மூள என்ன செய்யுதுன்னு கேளுங்க. இந்த சப் கான்ஸச் பர்ஸப்சன் லே பதிவான் விசயத்தெல்லாம்
அப்போதைக்கு எங்கெலாம் எடம் இருக்குதோ அங்கேருந்து திருப்பி எடுத்து ஸம் சார்ட் ஆப் வெரிபை
செய்யுதுங்க.
4. கனவுங்கரது ரிசல்ட் ங்க. not the cause. ஏதோ நடக்குது மூளைக்குல்ல. கிட்டத்தட்ட சொல்லப்போனா ஒரு
exploratory surgical procedure and also a filtering process.
அது கனவா வருதுங்கோ.
5. கனவு நடக்கையிலே கண், காது, மூக்கு, தோல் உணர்ச்சி எல்லாமே தூங்குது.
கரெட்டா சொல்லப்பொனா பின் வாங்கி ரெஸ்ட் எடுத்துகினு இருக்குது. அப்ப எப்படி பாக்கறீங்க ? கேக்கறீங்க.
6. வெளி மனசுக்கும் உள் மனசுக்கும் கனவு எதோ பாலம்னு நாமா நினைச்சுக்கறதுங்க.
கனவுபத்தி நெறய sites இருக்குங்க.. சொல்ல ஆரம்பிச்சா 5000 பக்கம் எழுதாலாம்கோ.
சொல்லறதெ சொல்லிப்புட்டேன். அம்புடுதே.
இ ஈ.
யம்'மாடி'யோ.....
ReplyDeleteஅனானி இப்படி வெளுத்து வாங்கறீங்க!!!!!
நான் அப்பப்ப கோபாலை வெட்டிருவேன்.(கனவுலேதான்) அப்புறம் தேம்பித்தேம்பி அழுதுக்கிட்டே எந்திரிப்பேன்....
பாவம் மனுஷன். செத்துச் செத்துப் பிழைக்கிறார்:-)
திரும்பவும் உங்களை அனானின்னு அழைக்க வைச்சுட்டீங்களே! (ஒரு புனைப்பெயராவது எழுதி இருக்கலாமே - அழைக்க வசதியாய்!) அப்புறம் அந்த ஐயாவை கட் பண்ணுங்க!
ReplyDeleteஅப்புறம் நீங்க சொன்னதை நான் குற்றம் சொல்வதாகவும் எடுத்துகலைங்க, போதுமா? :-)
மேலும், நீங்க கொடுத்த கனவு விளக்கங்களுக்கு முக்கால்வாசி நான் ஒத்துக்கறேன். கனவு ஒரு ரிசல்ட் தான், கனவு பாலம்ன்னு சொன்னலும், அது oneway பாலம்தான், அதாவது வெளி மனதில் இருந்து நேரடியாக உள் மனதுக்கு திரும்பிப் போக இயலாதுதான்.
//கனவு நடக்கையிலே கண், காது, மூக்கு, தோல் உணர்ச்சி எல்லாமே தூங்குது.//
ஒண்ணு பார்த்தீங்களா - மேலே சொன்ன ்அவையங்களில் கை,கால், வாய் ஆகியவை இல்லை, பார்த்தீங்களா?, ஒன்று எல்லா அவையங்களும் செயல்படாமல் இருக்க வேண்டும்.ஏன் கனவில் பேசவோ, நடக்கவோ, அசையவோ முயற்சிக்கிறோம்? இவையல்லாம் ஒரு செயலை வெளிப்படுத்துவதற்காக. அதாவது இன்புட் இல்லாவிட்டாலும் output ஆக அவையங்கள் மூலமாக வெளிப்படுத்தப் பார்க்கிறோம்.
கனவுகள் random நியூரான் இணைப்புகளால் தான் நிகழ்கின்றன, அதனால் அவற்றை ஆராய்வதில் அவசியமில்லை என ஆராய்சியாளர்கள் கருதுகிறார்கள் அல்லவா - முக்கால்வாசி சமயங்களில் இது சரி. ஆனால் இப்படி எல்லாவற்றையும் பொதுமைப் படுத்த இயலாது, விதிவிலக்குகளும் உண்டு என நினைக்கிறேன்.
Magic செய்பவர்கள் எப்படி extra sensory perception ஐ பயன்படுத்தி வித்தை செய்கிறார்களோ அதுபோல நம் subconcious perception ஐ கொண்டு நம் முன்னேற்றத்திற்கு - குறிப்பாக அகத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்!
இப்போதைக்கு ஜூட், பின்னால் ஒரு பதிவா விரிவாக்கப் பார்க்கிறேன்...
துளசி மேடம், இதைதான் ரியலான கனவுன்னு முதல் பின்னூட்டத்திலே சொன்னீங்களா? - நான் இப்படி எல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லையே. அது சரி, கோபால் சாரின் கனவில் எப்படியோ?
ReplyDeleteஜீவி அய்யாவுக்கு வணக்கமுங்க.
ReplyDeleteஜூட் சொல்லீட்டீங்க..ஞாயமா பாத்தா நா பேசறதோ எழுதறதோ தப்புதாங்க..னானும் ஜூட் விடத்தான்
வேணும். ஆனா " என்னய்யா நீ ஆம்பள ! நீ என்னாத்தே புரொபசரா கீதே !" அப்படின்னு வூட்ல பொட்ட புள்ள கேட்டுபுட்டுதுங்க. ரோசம் வருமா இல்லயா..சொல்லிப்போடுங்க..
//மேலே சொன்ன ்அவையங்களில் கை,கால், வாய் ஆகியவை இல்லை, பார்த்தீங்களா?, ஒன்று எல்லா அவையங்களும் செயல்படாமல் இருக்க வேண்டும்.ஏன் கனவில் பேசவோ, நடக்கவோ, அசையவோ முயற்சிக்கிறோம்? இவையல்லாம் ஒரு செயலை வெளிப்படுத்துவதற்காக. அதாவது இன்புட் இல்லாவிட்டாலும் output ஆக அவையங்கள் மூலமாக வெளிப்படுத்தப் பார்க்கிறோம்.//
இன்புட் இல்லன்னு சொல்லாதீங்க...
நம்ம உடல்லே செரிப்ரோ ஸ்பைனல் சிஸ்டம் லே 2 பிரிவு இருக்குங்கோ..
ஒன்னு பிரைமரி ரண்டு சப் (sub primary )
கிட்டத்தட்ட இது ஒங்க கம்புயுடர் லாங்குவேஜ்லே மாஸ்டர், ஸ்லேவ் சொல்லி
bios லெ எழுதறீங்க பாருங்கா...அது மாதிரி ஒரு உதாரணத்துக்கு வெச்சுக்கோங்க.
இந்த சப் ஸிஸ்டம் அடானமஸ் இல்லைங்கோ.. பிரைமரி கிட்டேந்து சிக்னல் வந்தாத்தான்
வேலை செய்யுங்கோ.. ( something similar to the instructions through body language of one's spouse in front of a guest or relative)
ஆனாலும் நம்ம நன்னா தூங்கறப்பொ இந்த பிரைமரி நன்னா தன்னை வித்ட்ரா பண்ணிகிட்டு
இந்த சப் சிஸ்டம் க்கு கொஞ்சம் கூட அதிகாரம் கொடுக்குதுங்க..
( I am the Master of this House. Note: My wife is away )
அப்ப ஏதாவது எறும்பு அல்லது கொசு கடிக்குதுன்னு வெச்சுக்குங்க.. இந்த வலி சிக்னல்
மூளை வரைக்கும் போறதில்லீங்கோ.. தாலமஸ் அப்படின்னு ஒன்னு மூளைலெ கீழ்பக்கத்திலே இருக்குங்க..அது
என்ன செய்யுது...அது இந்த மாதிரி விஷயத்திலே எல்லாம் எஜமானத்தொந்தரவு செய்யாமே
ராத்திரி நேர வாச் மேன் மாதிரி, வந்த சிக்னலுக்கு தானே பதில் சிக்னல் கொடுக்குதுங்க.
நா சொல்ரதில்ல நம்பிக்க இல்லைன்னா அனாடமி அன்ட் பிசியாலஜி ந்னு ஸேயர்ஸ் புக்
(Syllabus Core Semester 1 for MBBS Course. anatomy and Physiology )
கொஞ்மேனிக்கும் படிங்க..
அதனாலெ இன்புட் இல்லாம அவுட் புட் ந்னு சட்னு சொல்லிடாதெங்கோ..
நீங்க அப்பப்ப எழுதர அத்வைதத்திலே கூட காரணம் இல்லாமே கார்யம் கிடையாதுன்னு
சொல்லிருக்காங்களே...கவனிச்சீகளா ?
அனேக வீட்டுலே
அம்மாவுக்குத் தெரியுது..".இந்தப்பையன் இத்தன நாளா நான் போட்டத தின்னுட்டு இருந்தானே..இப்ப திடீர்னு ஒத்தி வந்தப்பரம் அதிலே உப்பு இல்ல இதிலே உரப்பு இல்லேங்கரானே..அவ சொல்லி த்தராளோ ?"
ஒரு இன்புட் இருந்தாத்தாங்கோ ஒரு அவுட்புட் இருககும்
சொல்லரத சொல்லிப்புட்டேன்.
இஸ்டம்னா எடுத்துக்குங்க.. இல்லாட்டி தூக்கிப்போடுங்க.
அம்புடுதே
உ ஊ.
//something similar to the instructions through body language of one's spouse in front of a guest or relative)//
ReplyDeleteஅனானி,
அட்டகாசம் போங்க.
எப்படிங்க.....எப்படி.......?
எல்லாம் தன்னாலே வருதோ? :-))))
ஆனா ஒண்ணு. ஐ காண்டாக்டே பண்ணாதவங்ககிட்டே எந்த பாடி லேங்குவேஜ் செல்லும்? (-: ஹும்....
அடடா, நான் சொல்ல வந்தது - இந்த கண்,காது,மூக்கு - அவற்றை இன்புட் ஆகவும், வாய், கை, கால் செயல்பாடுகளை output ஆகவும் வேறுபடுத்துவதற்கும் மட்டுமே.
ReplyDeleteசொல்லறதை சொல்லிபுட்டேன்னு சுவாரயஸ்மா சொல்லிட்டீங்க, நீங்களும் பதிவுகள் போடலாம் இல்லையா? (ஒருவேளை ஏற்கனேவே பதிவுகளும் இருக்கலாம்!)
தாலமஸ் பற்றி அழகாக சொன்னீங்க, பதிவில் 'கண்டது', 'கேட்டது' என்று சொன்னது - இவற்றின் மூலமாகத்தான் அல்லவா. Not the literal meaning.
கனவில் சில சமயம் மின் அஞ்சல் பெட்டியில் புதிதாக அஞ்சல் வந்திருப்பதாக உணர்வேன். ஆனால் இன்பாக்ஸில் கிளிக் செய்தால் - மெயிலே இருக்காது. கணிணியில் கிளிக் செய்தால்தானே அஞ்சலைப் பார்க்கலாம், கனவில் கிளிக் செய்தால், எப்படி? இங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தால், within that split second of checking that mail, I am changing states. I am realizing that i am not in dream state any more - so I am not seeing any email! சில சமயம் இது தொடர்ந்து திரும்பத் திரும்பவும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கு. மின் அஞ்சல் இல்லையா, திரும்பவும் check பண்ண மூளை ஆணையிட, திரும்பவும் no new email! - Then I will ask 'Is this reality?' and that question will get me out of the sleep and that vicious cycle :-)
There are also sub states in consciousness like sub-sub consciousness, sub-super consciousness and super-sub consciousness and so on. I think its important to understand them for one's Spiritual maturity.
அப்புறம், நான் ஜீவி ஐயா அல்ல - ஜீவா!
அப்புறம் போன மறுமொழிகளில் அவசரத்தில் நன்றி சொல்ல மறந்துவிட்டேன், இப்போது பிடிங்க - தங்கள் வருகைக்குக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி! அதுக்காக - 'ஊ' வோடு நிறுத்த வேண்டியதில்லை - 'ஔ' வரையும் அதற்கு மேலும் செல்லலாம்!
//ஆனா ஒண்ணு. ஐ காண்டாக்டே பண்ணாதவங்ககிட்டே எந்த பாடி லேங்குவேஜ் செல்லும்? (-: ஹும்....
ReplyDeleteதுளசி கோபாலுக்கு அனானி் அனந்த கோடி நமஸ்காரம் செய்யுரானுக.
எப்படி துளசின்னு பேர வச்சுகிட்டு இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீக ?
அ. உங்க வீட்டுலே துளசிச் செடி எங்கனாச்சும் இருக்கும்னு வச்சுக்கங்க..அத பாத்தாத்தான் துளசி
இருக்குன்னு யாருனாச்சும் சொல்வாகளான்ன? கம கம கம !!! அடடா என்ன ஸ்மெல் ! என்ன வாசன ? அது தெய்வீகமுங்க.. ( அத மாலையா தொடுத்து கோபாலனுக்குப் போடம்னு தோணுதுல்லே ? )
ஆ. வீட்டுக்குள்ளே நுழையும்போதே அய்யாவுக்குத் தெரியுதுல்லே ! அம்மா எந்த மூட்லே இருக்காங்கன்னு...
நேரயா பாக்குறாக.?. இல்லைலே ?
இ. வள்ளுவன் என்ன சொல்றாரு ? படிச்சிருப்பீகளே ?
யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் = நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்.
இங்க பாருங்க என்ன அத்புதம் நடக்குதுன்னு? நீங்க பாக்கும்போது அவங்க பாக்க மாடாக . அவங்க பாக்கும்போது நீங்க பாக்க மாட்டீக... இருந்தாலும் ஒத்தர ஒத்தர் பாக்குறாகன்னு புரியுதுல்ல... ( this is what is perceived as a variant or derivative of body language which requires no sight, no hearing, no touching but JUST A FEEL of the presence of that other person in the vicinity )
இத எக்ஸ்ட்ரா சென்ஸரி பர்சப்ஸன்னு கூட இங்க்லீஸ்லே சொல்வாங்க..என்னன்னு கேட்டீங்கன்னா இந்த
இ. ஓ. எஸ். நம்ம நினவிலே இருக்கும்போதைத்தானுக நடக்குது. கனவுலே நடக்குற கதையே தனிங்க.
அது என்னன்னு எப்பவாவது நம்ம ஜீவா ( ஜீவி இல்ல ஜீவா . இன்னொரு தரம் சொல்லு. ஜீவி இல்ல ஜீவா)
எப்பனாச்சும் ஏதாவது எழுதும்போ சொல்றோமுக.
அது இருக்கட்டும்ங்க...
நீங்க ஒரு விசயம் சொல்லுங்க..
"வா" வும் "வி" யும் "வ்" லேந்து தானேக வருது ? ஒன்னு "ஆ" சேர வருது. இன்னொன்னு "இ" சேரும்போது வருகுதுங்க. ஜீன்னு சொன்னா ஆத்மாங்க.. ஜீவான்னு சொன்னா ஆத்மா வசிக்கறதுன்னு அருத்தமுங்க.
ஜீவின்னு சொன்னா அந்த ஆன்மா விளங்குவதுன்னு சொல்லிப்போட்டாக.. பண்டர்கர்ன்னு ஒரு க்ராமர் புக்ல
(Lexicon ) இத்தன விசயம் இருக்குங்க.. ஒத்தரு " நான் " என்னு நினைக்கும்போது "ஜீவா" ங்க. அந்த " நான்" ங்கறதை நம்ம விடனும், அப்படின்னு விளங்கும்போது "ஜீவி" ங்க..
பேர் ல ஒன்னும் இல்லிங்க. இன்னா சொல்றாரு
அதுதாங்க முக்கியம் ? நீங்க தீர்ப்பு சொல்லுங்க..
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் = அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
யார் சொல்றாக..? ஞாபகம் வருதா ?
உங்களுக்கு நேரமாயிடுத்துல்லே.. உங்க பொன்னான நேரத்த வீணடித்தேனோ என்ன பயம் வந்துடுத்துங்க.
அது சரி, அது என்ன ?செத்து செத்து புழைக்குறார்ன்னு எழுதறீகளே...யாருமே புதுசா புறக்கறதுமில்லே ..சாவதுமில்லேங்க. நிசமாவே பாத்தா புறக்கிரது சாவறது எல்லாமே ஒரு தோற்றம்தானுக.
இது "ஆனந்தம்" மாதிரி, "சிந்துபாத்" மாதிரி ஒரு தொட........................................................ர் கதைங்க.
அம்புடுதே
எ ஏ ஐ ஒ ஓ ஒள. ....................................................................................0//
துளசி கோபாலுக்கு அனானி் அனந்த கோடி நமஸ்காரம் செய்யுரானுக.
எப்படி துளசின்னு பேர வச்சுகிட்டு இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீக ?
அ. உங்க வீட்டுலே துளசிச் செடி எங்கனாச்சும் இருக்கும்னு வச்சுக்கங்க..அத பாத்தாத்தான் துளசி
இருக்குன்னு யாருனாச்சும் சொல்வாகளான்ன? கம கம கம !!! அடடா என்ன ஸ்மெல் ! என்ன வாசன ? அது தெய்வீகமுங்க.. ( அத மாலையா தொடுத்து கோபாலனுக்குப் போடம்னு தோணுதுல்லே ? )
ஆ. வீட்டுக்குள்ளே நுழையும்போதே அய்யாவுக்குத் தெரியுதுல்லே ! அம்மா எந்த மூட்லே இருக்காங்கன்னு...
நேரயா பாக்குறாக.?. இல்லைலே ?
இ. வள்ளுவன் என்ன சொல்றாரு ? படிச்சிருப்பீகளே ?
யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் = நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்.
இங்க பாருங்க என்ன அத்புதம் நடக்குதுன்னு? நீங்க பாக்கும்போது அவங்க பாக்க மாடாக . அவங்க பாக்கும்போது நீங்க பாக்க மாட்டீக... இருந்தாலும் ஒத்தர ஒத்தர் பாக்குறாகன்னு புரியுதுல்ல... ( this is what is perceived as a variant or derivative of body language which requires no sight, no hearing, no touching but JUST A FEEL of the presence of that other person in the vicinity )
இத எக்ஸ்ட்ரா சென்ஸரி பர்சப்ஸன்னு கூட இங்க்லீஸ்லே சொல்வாங்க..என்னன்னு கேட்டீங்கன்னா இந்த
இ. ஓ. எஸ். நம்ம நினவிலே இருக்கும்போதைத்தானுக நடக்குது. கனவுலே நடக்குற கதையே தனிங்க.
அது என்னன்னு எப்பவாவது நம்ம ஜீவா ( ஜீவி இல்ல ஜீவா . இன்னொரு தரம் சொல்லு. ஜீவி இல்ல ஜீவா)
எப்பனாச்சும் ஏதாவது எழுதும்போ சொல்றோமுக.
அது இருக்கட்டும்ங்க...
நீங்க ஒரு விசயம் சொல்லுங்க..
"வா" வும் "வி" யும் "வ்" லேந்து தானேக வருது ? ஒன்னு "ஆ" சேர வருது. இன்னொன்னு "இ" சேரும்போது வருகுதுங்க. ஜீன்னு சொன்னா ஆத்மாங்க.. ஜீவான்னு சொன்னா ஆத்மா வசிக்கறதுன்னு அருத்தமுங்க.
ஜீவின்னு சொன்னா அந்த ஆன்மா விளங்குவதுன்னு சொல்லிப்போட்டாக.. பண்டர்கர்ன்னு ஒரு க்ராமர் புக்ல
(Lexicon ) இத்தன விசயம் இருக்குங்க.. ஒத்தரு " நான் " என்னு நினைக்கும்போது "ஜீவா" ங்க. அந்த " நான்" ங்கறதை நம்ம விடனும், அப்படின்னு விளங்கும்போது "ஜீவி" ங்க..
பேர் ல ஒன்னும் இல்லிங்க. இன்னா சொல்றாரு
அதுதாங்க முக்கியம் ? நீங்க தீர்ப்பு சொல்லுங்க..
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் = அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
யார் சொல்றாக..? ஞாபகம் வருதா ?
உங்களுக்கு நேரமாயிடுத்துல்லே.. உங்க பொன்னான நேரத்த வீணடித்தேனோ என்ன பயம் வந்துடுத்துங்க.
அது சரி, அது என்ன ?செத்து செத்து புழைக்குறார்ன்னு எழுதறீகளே...யாருமே புதுசா புறக்கறதுமில்லே ..சாவதுமில்லேங்க. நிசமாவே பாத்தா புறக்கிரது சாவறது எல்லாமே ஒரு தோற்றம்தானுக.
இது "ஆனந்தம்" மாதிரி, "சிந்துபாத்" மாதிரி ஒரு தொட........................................................ர் கதைங்க.
அம்புடுதே
எ ஏ ஐ ஒ ஓ ஒள. ....................................................................................0
பின்னூட்டத்திற்குள்ளேயே பதில் பின்னூட்டமா, ஜமாய்ச்சிட்டீங்க! :-)
ReplyDeleteஅனானி,
ReplyDeleteசும்மா சொல்லக்கூடாது......
எங்கியோ போயிட்டீங்க.
நம்ம வீட்டுலே என்னைவிட்டா வேறு துளசி இல்லீங்க(-:
இந்தக் குளுருக்கு அதெல்லாம் தாக்குப்பிடிக்கலை. ஒரு 'தில்' வேணாம்? :-))))
வாழ்க்கையில் ஒரு முறை( ஒரே ஒரு முறைதாங்க.அத்தோடு சரி) கண்ணை ஏறிட்டு நம்மோட ஐ காண்டாக்ட் பண்ணதை நினைச்சு,
முப்பத்தி மூணரை வருஷமா
அப்படியே நொந்துபோய் கிடக்காறாருங்க மனுஷன்.
காதல் எனப்படுவது யாதெனில்......
இதுக்கும் தாடிக்காரர்( கன்யாகுமரியில் நிக்கறவர்) எதாவது சொல்லி இருக்கணுமே:-))))
துளசி கோபால் அவர்கட்கு,
ReplyDeleteகாதலைப்பற்றியா? கடல் அளவு சமாசாரம் இருக்கிறது. ஆயினும் கனவுகள் என்னும்
பதிவின் தலைப்புடன் இணையாத ஒரு பொருளில் (அதுவும் ஜீவாவின் வலைப்பதிவில்)
பொருத்தமாக அமையாது.
ஆக, காதலைப்பற்றி அதுவும் நீங்கள் குறிப்பிடும் பொருள் பற்றி உரைத்திட
ஒன்று உங்கள் பதிவும் என்ன என்று சொல்லுங்கள்.
அல்லது பெருமதிப்புக்குரிய ஜீவா அவர்களை "காதல்" பற்றி எழுதச்சொல்லுங்கள்.
To know anony
நேரம் கிடைத்தால் வருகை தரவும்.
http://movieraghas.blogspot.com
:-) அப்படியா, நன்று ஐயா!
ReplyDeleteஅனானி ஐயா வந்து சொன்னதுக்கப்புறம் வேற என்ன சொல்றது? அதான் அக்கு வேற ஆணி வேறா பிச்சுப் பினாரிட்டாரே!:)) இனிமே சொல்றதுக்கு அதிகமா ஒணுமில்ல!
ReplyDeleteஎக்ஸெப்ட் அந்த காண்ணு, காது, மூக்கு வாயி, உணர்ச்சி சமாச்சாரம்!
அதை அனானி ஐயாவே சொல்லுவாருன்னு பாத்தேன்! நான் சொல்லிடறேன்!
அந்த அஞ்சையும் நீங்க சொன்னது ஒரு விதத்துல சரியே!
ஏன்னா, இது அஞ்சுந்தான் ஐம்புலன்களோட வேலையைச் செய்யுது.... பெரிய தலையோட கண்ட்ரோல்ல!
எக்ஸ்ட்ரா பிரமிடல் வழியா கை காலையெல்லாம் கூட ஆட்டலாம்!
அதை அவரு சொல்லிட்டாரு!
கனவுல்லாம் நம்மளோட பாதிப்புதாங்க! பாத்த, படிச்ச, கேட்ட, மூந்து பாத்த, தொட்டுப் பாத்த... [அடடா! திரும்பவும் இந்த ஐம்புலன் வந்திருச்சே!:).... விஷயங்களையெல்லாம், திரும்பவும் ஒரு கலவையா அசை போட்டு பிடிச்சது, பிடிக்காதது, பயந்தது, சந்தோஷமா இருந்தது, அழுதது எல்லாம் சேத்து[ இந்த மாடெல்லாம் அசை போடுமே அது மாரி!] அதது இஷ்டத்துக்கு ஒரு ரீல் ஓட்டும்! இதாங்க கனவு!
அதையும் தாண்டி இதெல்லாம் இல்லாத ஆழ்நிலைத் தூக்கத்துல[டீப் ஸ்லீப் ஸ்டேஜ்] இதெல்லாம் வராது!
அங்க ஆட்சி பண்றது நம்ம அனானி ஐயா சொன்ன ஜீ'வ்'! 'ஆ'வோடயும் சேராம, 'இ'யோட சேராமயும் இருக்கற ஜீவ்... !! அவரைக் கண்டுபிடிங்க!
நான் வரேங்க!
வாங்க VSK சார், நீங்களும் வந்து அசத்திட்டீங்க!
ReplyDeleteதேடிக் கண்டுபிடிப்பதற்குத் தானே பிறந்திருக்கிறோம், தேடுவோங்க!
//அங்க ஆட்சி பண்றது நம்ம அனானி ஐயா சொன்ன ஜீ'வ்'! 'ஆ'வோடயும் சேராம, 'இ'யோட சேராமயும் இருக்கற ஜீவ்... !! அவரைக் கண்டுபிடிங்க!//
ReplyDeleteசும்மா சொல்லக்கூடாது. நீங்க நிசமாவே VSK தான்.
verily superb (and) knowledgeable.
"சும்மனாச்சும் வெட்டிக்கதை பேசாதீங்க.. முதல்லே " நான் யார்? " " நமக்குள்ளே இருக்கிற ஜீவன் " யாரு ?
என்ன விசயமா அது நம்மகிட்ட கீது ? " அப்படின்னு சொல்லாம சொல்லிப்போட்டீக. பளிச் பளிச்சுன்னு ஒரு வார்த்தை சொன்னீக பாருக.
அதுலே நம்ம ஊரு அத்வைதமே அடங்கிப்போச்சு.
வள்ளுவரு, அதாங்க,
கன்யாகுமரிக்கு தெற்காண்டே கடல்லே (பாவம்) நின்னுகிட்டே இருக்கிற தாடிக்காரர் இது பத்தி ஏகப்பட்டது
சொல்லியிருந்தாலும் இப்போதைக்கு, நம்ம பாரதி (அதாங்க தலையிலே ஒரு முண்டாசு கட்டிகினு பாட்டா
எழுதிக்கினு இருந்தாரே ) அவரு சொல்லியிருக்காரு என்னன்னு கேட்போமா ?
வானில் ப்றக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்.
கானில் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான். 1
2..3..4..5..6
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்.
ஞானச்சுடர் வானில் செல்லுவோன் நான்.
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிதான். (7) (பாரதி)
அம்புடுதே
ஒள வரை முடிஞ்சுபோச்சு. அதனாலே
இது அ 1.
//ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
ReplyDeleteஅறிவாய் விளங்குமுதற் சோதிதான்.//
ஆகா, அருமையான வரிகள் அவை!
யோவ்.....என்னய்யா நடக்குது இங்கெ?
ReplyDeleteச்சும்மா ஒரு கனவைப் படிச்சுட்டுப் போகலாமுன்னும் வந்தா........
இப்படிக் கட்டிப்போட்டு ஆத்ம விசாரம் பண்ண வச்சுட்டீங்களே!
அனானியும் விஎஸ்கேவும் ச்சும்மாப் பூந்து வெள்ளாடுறாங்க.
இன்னிக்கு சமையல் அம்புட்டுதான்.
கோபாலுக்கு நீங்கதான் பதில் சொல்லணும்.
விசாரம் பெருகியிருக்கு. வளர்ந்துக்கிட்டே போகுது.....
எனக்கு யோசிக்க நேரம் வேணும்,ஆமா:-))))
//ச்சும்மா ஒரு கனவைப் படிச்சுட்டுப் போகலாமுன்னும் வந்தா........//
ReplyDeleteஅதானே!
//விசாரம் பெருகியிருக்கு...//
நல்லது¡
//இன்னிக்கு சமையல் அம்புட்டுதான்.
ReplyDeleteகோபாலுக்கு நீங்கதான் பதில் சொல்லணும்.//
கோவாலு வந்தா சொல்லிப்போடுக...
"இன்னாயா..ஒரு நாளக்கு கொஞ்சம் டிலே ஆயிடுச்சுன்னு அப்படி டென்ஸன் ஆயிட்டே ?
வள்ளுவரு என்னா சொல்றாரு தெரியுதுல்லே:
"செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும். "
அங்கன பாரு.. அறிவுப்பசிலே துடிச்சிட்டிருக்கு ஜீவான்னு ஒரு ஆத்மா..
அதுக்கு ஒரு வரி எழுதிப்போட்டப்பறம் வர்றேன். "
கோவாலு: சரிதான். இன்னிக்கு டின்னர் அம்பேல் தான். சரி, என்ன தான் எழுதப்போறே?
துளசி அம்மா: ஜஸ்ட் ஒன் மினிட் வைட் .
இதை ப்படிங்க:
பார்த்தா இது மாதிரி கனவு பார்க்கணுங்க.
" கனவென்ன கனவே = என்றன்
கண்துயி லாது நனவினிலே யுற்ற _ கனவென்ன கனவே.
ஓமென்ற மொழியும் = அவன்
ஓமென்ற மொழியும் = நீலக்
காமன்றன் உருவுமவ் விமன்றன் திறலும்
அருள் பொங்கும் விழியும் தெய்வ
அருள் பொங்கும் விழியும் = கானில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்குத்திரியும் = கனவென்ன கனவே "
கோவாலு: துளசி மேடம். இன்னைக்கு பார் அதி கமாவே டிலே பண்ற !
துளசி : கரெக்ட். பாரதி எழுதினது தான் இது.
கோவாலு: ஓகே..ஓகே...ஓகே...
துளசி: ஹூம். (மனதிற்குள்) அனானிக்கு புரியுது. ஜீவாவுக்கு விளங்குது.உனக்குத் தெரியல்லையே !!)
Just 2 minutes . Read this before I bring the dishes. Ok.?
Gopal Says:
சில வாட்டி கனவிலே வந்ததெல்லாம் நிசமா நடக்கப்போவுதுன்னு நம்பறவங்க நிறையவே இருக்காங்க.
அது அது அவங்க அவங்க belief systems. To those who believe them, they are just axioms, which are rarely questioned.And whenever there is a belief, it rarely encounters reason and logic.
Thulasi: What is then the reason?
More Often than not, dreams mirror a psychic (concerned with processes and phenomena that seem to be outside physical or natural laws) response to one's own attitudes to whatever happens around. One can never dismiss a view, however, that in certain situations where a way ahead is hardly known, a solution emerges in a dream state.
ஸோ...எஞ்சாய் எ ட்ரீம்..
(இது நேத்திக்கு என் கனவினிலே வந்ததுங்க.. ஓர் உரையாடல். இது நிசமாக இருக்குமோ... சத்தியமா தெரியாதுங்கோ. அப்படி நிசமா இருந்துச்சுன்னா உங்க பேச்ச உங்க உத்தரவு இல்லாமே கேட்டதுக்கு
மன்னிச்சுப்போடுங்கோ )
அம்புடுதே .
ஃ
அனானியின் மனத்தாங்கல்.
ReplyDelete"இது என்ன ஜீவா ஐயா தூங்கிட்டாகளா இல்லை ஆழ்னிலை தியானத்திலே ஜீவா என்னதுன்னு
கண்டுபிடிக்கணும்னுட்டு இருக்காகளா இல்லை புதுசா ஒரு கனா கண்டிகினு இருக்காகளா?
பேச்சு மூச்சே 2 நாளா காணமே !! இல்ல இந்த அனானி தொந்தரவு தாங்காம ஜகா வாங்கிகிட்டாரா?
என்னாச்சு இவருக்கு தெரியல்லையே ! "
அடடா, நம்மாலே இப்படி உங்களுக்கு மனத்தாங்கல் வந்துட்டதே :-(
ReplyDeleteபடிச்சேன் சார், இந்தக் கனவுப் பதிவை படிச்சு உங்களுக்கும் கனவிலே உரையாடல் வந்துடுச்சா...!
இது நல்லதுக்கான மாதிரி தெரியலை. அதனாலே சீக்கிரமே வேற ஒரு பதிவு போட்டு divert பண்ண வேண்டியதுதான்...
இசை இன்பத்திலே பூர்விகல்யாணி பதிவை படிச்சாச்சா சார்?