Saturday, February 24, 2007

மடை திறந்து தமிழில் ராப்

யோகி மற்றும் நட்சத்திரா குழுவினர் 'வல்லவன்' என்ற தலைப்பில் புதியதொரு ஆல்பம் வெளியிட்டுள்ளனர்.

11 பாடல்கள் கொண்ட இந்த ஆல்பம் தயாரிக்க 18 மாதம் பிடித்ததாம்.

ராஜாவின் 'மடை திறந்து' பாடலின் ரீமிக்ஸ் ராப் வடிவத்தில் - நீங்களே கேட்டுப்பாருங்கள்!

3 comments:

  1. சோதனை மறுமொழி.

    ReplyDelete
  2. ஜீவா

    வணக்கம்.

    யூ குழாய் ல் ! ஏற்கனவே எப்போதோ பார்த்த ஒளித்துண்டுதான் இது. புதிய முயற்சி என வரவேற்க இயலவில்லை. இந்த Rap / Hip Pop
    ஒரு இசை சாபம். ஆங்கிலத்தில்,ஆரம்பத்தில் ஒரு போராளி தெளிவுடன் ஆரம்பித்த இந்த இசைவடிவம் தற்போது இசை சாக்கடையின் முழுவடிவம்
    என்றே சொல்லலாம். ஒளித்துண்டில் அருவெருப்பாக தொடைகளுக்கு மேலாக கால்சராயயை தொடுவது, பெண்கள் பற்றி இழிவான பாடல்வரிகள் போன்ற கீழ்த்தரமானவற்றை கொண்டது Rap. தமிழ் மொழியில் இது பரவமாலிருக்க வேண்டும்.

    நிற்க.

    மகனுக்காக ஐ போட் ல் இசை கீழிறக்கும் போது, கொள்ள வேண்டிய பெரும் கவனத்தைப் பற்றி எப்போதாவது ஒரு பதிவையே எழுதலாம் நான் !

    ஏனெனில் இந்த Rap மற்றும் அதன் பாதிப்பால் வலை வரும் பல பாடல்களின் வரிகள் வயிற்றை புரட்டும் தன்மையன.

    ReplyDelete
  3. வாங்க வாசன்,
    இசையில் சாக்கடையேதும் எப்போதும் இல்லை.
    பாடல் வரிகளிலும், பாடல் காட்சியிலும் தான் இருக்க முடியும்.

    எளிதாக நல்ல கருத்துக்களை நேரடியாக எடுத்துச் செல்லக்கூடிய ஊடகமாகவே Rap விளங்க இயலும்.
    அவ்வாறு நம்மவர்களாவது செய்வார்களா பார்ப்போம்.

    // தமிழ் மொழியில் இது பரவமாலிருக்க வேண்டும்.//
    தமிழில் பரவாமல் இருந்தால், தமிழன் கேட்காமல்/பார்க்காமல் இருக்கப்போவதில்லை. நல்ல கருத்துக்களைப் பரப்ப நாம்தான் முனைதல் வேண்டும்.

    //மகனுக்காக ஐ போட் ல் இசை கீழிறக்கும் போது, கொள்ள வேண்டிய பெரும் கவனத்தைப் பற்றி எப்போதாவது ஒரு பதிவையே எழுதலாம் நான் !
    //
    அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் அந்த அனுபவங்கள். தயவு செய்து எழுதவும்.


    நெடுநாள் கழித்து தங்கள் மறுமொழி பார்த்து மகிழ்ந்தேன், நன்றி.

    ReplyDelete