பார் அதி சின்னத்தனம்.
பாரதியை பழிக்கும்
தமிழனும் இனியும்
இருக்கின்றானே....
தன்மானத் தமிழனும்
தலைகுனிந்து - வெட்கித்
தலைகுனிந்து போனானே...
தமிழினி மெல்லச்சாகும்
என்றொருவன் சொன்னான்.
தமிழ் மறைந்தாலாவது
இன வெறியில்
மத வெறியில்
சாதி வெறியில்
சிக்கித் தள்ளாடும்
உளரல்கள் தமிழில்
வராதல்லவா?
தமிழ் மறைந்தாலாவது
தமிழில்
உளரல் இம்சைகள்
ஒடுங்குமல்லவோ?
இதற்காவது
தமிழினி சடுதியில்
சாகட்டும்.
சின்னத்தனத்தில்
சிக்கிய சிறுமதியார்
தொல்லைகளில் இருந்து
தமிழாவது தப்பிக்கட்டும்,
தமிழினி சடுதியில்
சாகட்டும்.
தமிழேன் சாகவேண்டும்
ReplyDeleteதமிழென்றும் சாகாது
தமிழைப் பழிப்பவன்
தமிழ்க்கவியைப் பழிப்பவன்
அவரன்றோ வெட்கவேண்டும்
தமிழ்க்கவியைப் பழித்தவரை
கண்டிக்காதவரன்றோ வெட்கவேண்டும்
உங்க போஸ்ட்டும் அதன் உணர்வுகளும் சரிதான், ஆனால் பாரதி "மெல்லத் தமிழினி சாகும்"னு சொன்னதுக்கு உண்மையான அர்த்தமே வேறே. ரொம்பப் பேருக்குப் புரியவே இல்லை. இன்னிக்குக் கூடப் படிச்சேன் அதைப்பத்தி.
ReplyDeleteசரியாக சொன்னீர் எஸ்.கே சார்.
ReplyDeleteமனிதர்கே யாக்கை நிலையானதில்லை என்றால் மொழிக்கு?
மொழியின் வடிவமும், வார்த்தைகளும், வழக்குகளும் காலத்தின் நெளிவுகளில் எற்படும் நளினங்கள்.
அறியாதார் ஆயிரம் பழி உரைக்கிறார்.
வருக கீதா மேடம்.
தமிழ் சாகாது.
ReplyDelete.
அது 'மெதுவாகக்' கூட அழியாது. தமிழ் பெயரால் அவமானப் படுத்துபவர்கள் குணம் மாறலாம்.
கீதா நீங்கள் தான் அந்த வார்த்தைகளுக்கான உண்மைப் பொருளை எழுதுங்களேன்.
வாங்க வல்லி சிம்ஹன்!
ReplyDeleteதமிழ் என்றென்றும் அமர ஜீவியாய் இருக்கட்டும், ஆனால் இழிவும் மடமையும் இல்லாமல்.
கீதா மேடம், உங்கள் புதிய பொருளுக்காக காத்திருக்கிறோம்!
பாரதியின் கவிதையில் 'மெல்லத் தமிழினி சாகும்...' என்ற வரிகளின் விளக்கத்தை, கீதா மேடம் தன் பதிவில் சொல்லி இருக்காங்க
ReplyDeleteபாருங்க: