ஆப்பிளின் பூட் கேம்ப் அறிவிக்கப்பட்டு சில வாரங்களாகி விட்டது. ஆப்பிளின் மேக் கம்பூயூட்டர்களின் Windows XP தரவிரக்கம் செய்து கொள்ள வழி வகை செய்துள்ளது. இந்த செய்தி இரண்டு வகையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. விண்டோஸை வெறுப்பவர்கள் - எதற்காக விண்டோஸ் தேவைப்படும் என்றும், விண்டோஸ் விசுவாசிகள் - ஆப்பிளிலும் விண்டோஸ் தேவைப்படுகிறது என்ற பெருமிதமும்.
இது இப்படி இருக்க, நாம் ஏன் நம் விண்டோஸுக்கு மேக் வடிவம் கொடுத்தாலென்ன என்று தோன்றியது...
இதற்கானதொரு மென்பொருளை சோதனை செய்து பார்த்தேன்.
Windows Blinds எனதாகப்பட்டது. இந்த மென்பொருள் உங்கள் விண்டோஸ் ஐகான்களுக்கு பதிலாக மேக்கில் பயன்படுத்தப்படும் ஐகான்களை நிறுவுகிறது. அனைத்து விண்டோஸ் விண்டோக்களுக்கும் மேக்கில் உள்ளதுபோல் தெரியும். விண்டோஸில் கிடைக்கும் ஒருசில skin களுக்கு மாற்றாக, இங்கு விதவிதமான மாற்று skin களை மாற்றிக்கொள்ளலாம். இதனுடன் வரும் Object Dock எனும் மென்பொருள் மேக்கில் வரும் டாக்கிங் முறையை செயல்படுத்துகிறது.
நிறுவுதல் எளிதாகத்தான் இருந்தது.
செயல்பாடுகள் நன்றாக இருந்தாலும், பின்வரும் இடையூறுகளால் இந்த மென்பொருள் பிடிக்காமல் போனது!
* தற்போது செயல்பாட்டில் இல்லாத ஏனைய விண்டோக்களின் தலைப்பு சரியாகத் தெரிவதில்லை.
* விண்டோக்களின் தலைப்பு தமிழ் யுனிகோட் எழுத்துருவில் இருந்தால், அதற்கு பதிலாக கேள்விக்குறிகள் தான் காட்டுகிறது.
* ஒவ்வொருமுறை பூட் செய்யும்போதும், இந்த மென்பொருளை வாங்குகிறீர்களா என கேட்டு தொல்லை செய்கிறது.
* மைக்ரோஸாப்ட் வோர்ட் போன்ற மென்பொருள்கள் தொடங்கும்போது அந்த விண்டோ மேலும் கீழுமாக போய்வருகிறது.
இந்த காரணங்களால், இந்த மென்பொருளை இப்போது நீக்கி விட்டேன். ஆனால் ஐகான்களை அப்படியே விட்டுள்ளது. இதனால் பாதகம் ஏதும் இல்லை. புதியதோர் உருவம் கிடைத்த மகிழ்சியில் இருக்கிறது என் கணிணி, பாவம் அதை ஏன் கெடுப்பானேன்?
இந்த மென்பொருளை உபயோகித்துப்பாருங்கள் ஜீவா. இது விண்டோஸ் ப்ளைண்டை விட நன்றாக இருந்தது. எனது விண்டோஸ் மாக்காகவே மாறி விட்டது :)
ReplyDeletehttp://osx.portraitofakite.com/
இந்த தளமும் அருமையான வடிவமைப்புடையது.
சித்தார்த்,
ReplyDeleteமுன்பே நீங்கள் சொன்ன மென்பொருளை பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். Windows 2000இல். கணிணியை பூட் செய்யும்போது நிறைய நேரம் பிடித்தது. மேலும் விண்டோ skin களை மாற்றுவதற்காக skin கள் இருப்பதாக தெரியவில்லை. அதனால்தான் windowblinds தேவைப்பட்டது!
வின்டோஸ் எக்ச் பி ல் இந்த தேவையில்லாத (?)
ReplyDeletentuser.dat
என்னும் ஃபைல் நிறுவப்பட்டிருக்கிறது. இது நாளொரு மேனியும் பொழுதுரு வண்ணமுமாக
அளவில் (ஜீவாவின் வாசகர் குழாம் போல ) அதிகரித்துக்கொண்டே போகிறது. நமது இன்டர்னெட் ப்ரொசிங்க் அதிகமாக இதுவும் அதிகரிக்கிறது. இதை ஏன் வைத்துள்ளார்கள் ? இது நாம் என்னவெல்லாம் பார்க்கிறோம் என்ற தகவலை சேகரிப்பதாக சொல்ல்ப்படுகிறது. ஆனால் இந்த கோப்பினை திறக்க முடியவில்லை. ( மனைவிமார்கள் என்னதான் மனசில் நினைக்கிறார்கள் என்று கணவன்மார்கள் தெரிந்துகொள்ள கஷ்டப்படுவதுபோல )
மேலும் இதை நீக்கினால் ஹார்ட் டிஸ்க் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
பிரபஞ்சத்தின் மூல காரணம் என்ன என்பது போல் இதுவும் எனக்கு தெரிந்து கொள்ள இயலவில்லை.
தங்களால் விளக்க இயலுமா? ( microsoft web page is elaborate and i do not have the patience to run into some 20000+ comments on this file)
நன்றி. வணக்கம்.
பரிதி மாலன்.
சென்னை.
வாங்க சார், இணையத்தில் தேடிப் பார்த்ததில் - அதை ஃபைலை அப்படியே விட்டுவிடும்படி சொல்கிறார்கள். அது தேவையான ஃபைல் தானாம். அந்த ஃபைலை ஏன் user folderஇல் வைத்து தொலைத்தார்கள் என்பதை மைக்ரோசாப்ட்டைத் தான் கேட்கவேண்டும்!
ReplyDeleteNtuser.dat ஃபைல் ரெஜிட்டரியின் சேமிப்புக் கிடங்காம். அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால், ரெஜிட்டரியில் சென்று (regedit) மாறுதல் செய்யலாம்.