Sunday, December 25, 2005

மரபணுவியல் செய்திகள்

செய்திகள் வாசிப்பது ஜீவா!

ஓட்டப்பந்தையங்களில் கென்யாவைச் சேர்ந்தவர்களும், எத்தியோப்பியர்களும் - பொதுவாக ஆப்ரிக்க இனத்தினவர் முண்ணணியில் வருவது உங்களுக்கு தெரியும். முயன்றால் முடியாதது இல்லை என்றாலும், ஆப்பரிக்கர்களின் மரபணுவிலேயே ஏதாவது எழுதி வைத்து இருக்கிறதா என்றால் - 'ஆமாம்' என்கிறார்கள் - சமீபத்திய ஆய்வில் கிளாஸ்கோ பல்கலைக்கழக மரபணு ஆராய்சியாளர்கள். அவர்கள் ஆய்வு செய்த ஆப்ரிக்கர்களில் - அவர்களுக்கு நான்கு மரபணுக்களில் மாறுதல்கள் இருக்கிறதாக சொல்கிறார்கள். மாறுதலில் பொதுவானதொரு mutation ஏதும் இல்லாவிட்டாலும், மரபணு வகைகளில் ஏற்படும் கூட்டணிதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களுக்கு 10 வயது அதிகமாகிறதாம். அது சரி, அதெப்படி கணக்கிட்டார்கள் என்கிறீர்களா? கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது பற்றி ஆராய்ந்தது. முதலில் கொஞ்சம் முன்னுரை: ஒவ்வொரு குரோமசோமின் முனைகளிலும் 'டீலோமியர்' என்கிற டி.என்.ஏ இருக்கும். ஒவ்வொரு முறை செல் உடைந்து குட்டி செல்கள் உருவாகும்போதும் இந்த டீலோமியரின் நீளமும் குறைந்துபோகும். சிறிய வயதுள்ளவர்களில், 'டீலோமிரேஸ்' என்கிற என்சைம்-இன் உதவியால், டீலோமியர் வளர்ந்து குரோமசோம்கள் திடமாக இருக்க உதவுகின்றன. ஆக, டீலோமியர் நீளமாக இருக்க, ஒருவரின் குரோமசோம்கள் நீண்ட நாள் தாக்குப்பிடுக்கும், அவர் நீண்ட நாள் வாழலாம். வயதானவர்களில், நீண்ட டீலோமியர் இருப்பவர்கள் நீண்ட நாள் இருப்பார்கள் என்றும், டீலோமியர் அவ்வளவு நீளமாக இல்லாதவர்கள் குறைவான நாட்களே வாழ்வார்கள் என்றும் சொல்லலாம். சரி, இப்போ நம்ம ஆராய்ச்சிக்கு வருவோம். அதிக மன அழுத்தத்துடன் வாழ்ந்த்துவரும் பெண்களை ஆராய்சியில் உட்படுத்தியபோது, அவர்களுக்கு சொல்லி வைத்தார்ப்போல, டீலோமியர்களின் நீளம் குறைவாக காணப்பட்டதாம். கிட்டத்தட்ட 9 முதல் 17 ஆண்டுகால செல் வளர்ச்சியின் (அல்லது தேய்தலின்) அளவிற்கு அந்த தாய்மார்களுக்கு, மன அழுத்தம் காரணமாக செல்களின் அடிப்படையில் வயது குறைந்து போனதாக சொல்லலாம் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

2 comments:

  1. நல்ல தகவல்... அவர்கள் வாழும் சூழலும் வாழ்க்கை முறை (போராட்டங்கள்) உணவுப் பழக்கவழக்கங்களும் காரணமாக இருக்கலாம்.

    டார்வினிசத்தின் தன்மை ஒரு திறமையாய் வெளிப்படுகிறது..

    நன்று. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    சுகா

    ReplyDelete
  2. நன்றி சுகா.
    உங்கள் மற்ற பதிவுகளையும் சீக்கிரமே படிக்க முயல்கிறேன்!

    ReplyDelete