லேப்டாப் என்றழைக்கப்படும் மடிக்கணிணி இப்போது ரொம்ப பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது. என்ன, விலைதான் சாமன்யாமானவர்களில் கைகளுக்கு எட்டாக்கனியாய் இருக்கிறது - முன்பைக்காட்டிலும் வெகுவாக விலை குறைந்திருந்தாலும்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ லேப்டாப்பின் உபயோகம் பல்கிப்பெருகி வளர்ந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி அல்லது கல்லூரி செல்லும் ஒவ்வொருவரிடம் பெரும்பாலும் மடிக்கணிணி உள்ளது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில்...? சில ஆண்டுகளுக்கு முன் செல்போன் உபயோகமும் இப்படித்தான் இருந்தது. ஆனால் இன்றோ செல்பேசி பட்டி தொட்டியெங்கும் பரவியுள்ளது. அடுத்தது அதுபோல லேப்டாப் ?!?. கேட்க நன்றாக இருக்கிறது, நடக்குமா?
நடக்க வழி இருக்கிறது என்கிறது, 'One Laptop per Child (OLPC)' என்கிற என்.ஜி.ஓ நிறுவனம். 'Quanta Computer Inc', என்கிற தைவான் நிறுவனத்துடன் கூட்டாக,
U.S $100 க்கு, லேப்டாப் தயாரிக்க இருக்கிறார்களாம் - 2006 இன் அரை இறுதிக்குள். முதல் கட்டமாக 5 முதல் 15 மில்லியன் லேப்டாப்களை, ஏழு நாடுகளில் (சீனா, இந்தியா, பிரேசில், அர்ஜெண்டீனா, எகிப்து, நைஜீரியா, தாய்லாந்து) , அரசாங்கம் மூலமாக பள்ளிகளில் சோதனையில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.
U.S $100 க்கு மடிக்கணிணி எப்படி இருக்கும் என நினைக்கிறீர்களா? நல்ல திடமானதாக உருவாக்கப்பட உள்ள இந்த மடிக்கணிணிகள், லினக்ஸ்-இல் (அப்படி போடு அறுவாளை) இயங்குமாம்.
செய்தியின் மூலம்
மேலும்
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteமிக நல்ல திட்டம் தான். நனவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. Simputer திட்டம் என்னவாகிற்று என அறிவீர்களா? சமீபத்தில் ஏதும் கேள்விப்படவில்லை.
ReplyDeleteதகவலுக்கு நன்றி
சுகா
நன்றி, அன்பு மற்றும் சுகா.
ReplyDeleteசுகா,
Simputer திட்டம் பற்றி இப்பொழுதான் கேள்விப்படுகிறேன். விக்கிப்பீடியா சொல்கிறது:
http://en.wikipedia.org/wiki/Simputer
:-) இருக்கலாம் Mr.சின்ன பிள்ளை !!!
ReplyDeleteBut Indian ministry refuse the offer from 'OLPC'.Is OLPC again approach the Indian government.
ReplyDelete--KING