Sunday, August 30, 2020

என்ன காரணம்? ஏனிந்த தாமதம்?

இராகம் : ஆனந்த பைரவி
தாளம் : ஆதி
 
எடுப்பு
ஏன்ன காரணம்? ஏனிந்த தாமதம்?
என்பால் கருணை இலையோ உன்னிடம்?
 
தொடுப்பு
இன்னொரு புகல் ஏதும் அறியேன் 
உன்னையே யான் எனவே அடுத்தேன்
பின்னமும் ஏனோ எனக்கிந்த இடர்கள் ஆயிரம்?
(என்ன காரணம்? ஏனிந்த தாமதம்? ...)

முடிப்பு
முன்னம் இடர்களை களைந்தது போதவில்லை
இன்னமும் இடர்கள் தொடர்வது தீரவில்லை
அறிவேன் நின் அருளின் பொருளை
உரக்கச் சொல்வேன் உன் பெயரை... ஈசனே...
(என்ன காரணம்? ஏனிந்த தாமதம்? ...) 
 
வண்டுகள் ரீங்காரம் புதுக்கொன்றைத் திகழாரம்
பிரணவ ஓம்காரம் சுவேதாரண்யத் தாண்டவம்
ஈரேழு சதங்கைகளும் ஜதி போடும்
ஈசனின் திருவெண்காட்டுறைத் தலமாகும்.
(என்ன காரணம்? ஏனிந்த தாமதம்? ...) 
 

 

5 comments:

  1. கோபத்துக்குக் கருத்துச் சொல்ல முடியலையேனு கோபமா வந்தால் இங்கே நல்லதொரு பாடல் பகிர்வு. முந்தின பதிவுக்கு மொபைல் மூலமும் கருத்துச் சொல்ல முடியலை. போகலை. இந்தப் பதிவில் பிரச்னை இல்லை.

    ReplyDelete
  2. உங்கள் மகள் சுவேதா நன்றாகப் படிப்பால் என நம்புகிறேன். பாடலைப் படித்ததும் அவர் நினைவு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. நினைவு வைத்துக்கொண்டு விசாரித்தமைக்கு நன்றிகள் கீதாம்மா!
      நன்றாக படிக்கிறாள் சுவேதிகா.
      கதை புத்தங்கள் படிப்பதிலும் கொள்ளை ஆவல். தமிழ் நேரடியாக படிக்க இன்னும் கொஞ்சம் காலம் ஆகும். ஆகவே சிவகாமி சபதம் படித்துக் காட்டியாற்று. அடுத்து பார்த்திபன் கனவிற்காக காத்திருக்கிறாள்!

      Delete
    2. மறக்கவெல்லாம் இல்லை, கேட்கணும்னு நினைச்சுப்பேன். அப்படியே போயிடும். நன்றாய் நினைவில் இருக்கிறது. பெயர் சுவேதிகா என்பதைத் தான் மறந்து விட்டேன். சுவேதா என நினைத்தேன். நீங்கள் பெயரை எழுதும்போது குறிப்பிட்டு "ஸ்வேதா" இல்லை "சுவேதா" எனச் சொன்னது நினைவில் இருக்கு. அது சுவேதிகா என்பதை இப்போது அறிந்தேன்.

      Delete
    3. ஆகா, மிக்க மகிழ்ச்சி!

      Delete