Thursday, December 13, 2018

அரிய புதியதோர் நுண்ணுயிர்!

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்!

உலகில் உள்ள உயிர் வகைகளை மனிதன் என்றும், மிருகம் என்றும், பறவை என்றும், நீர் வாழ் மீன்கள் என்றும், தாவரம் என்றும், நுண்ணுயிர் என்றும் பலப்பலவாக அவற்றின் உருவாக்கத்தின்படி அறிவியலார் பிரிவுகளாக வகுத்தனர். அவ்வகைகளில் அவ்வப்போது புது உயிரினம் கண்டுபிடிக்கப்படும்போது அவை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வகையின் சிறிய சூழ்நிலை மாற்றமாகவே இருந்து வருகிறது. 

இரன்டு வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஒரு நுண்ணுயிரோ, இது வரை அறியப்பட்ட இன வகைகளில் இருந்து அப்பாற்பட்டு புது இன வகையாய் இருப்பதை அறிந்த ஆராய்சியாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஹெமிமாஸ்டிகோட் (hemimastigote) என்ற வகையினை சார்ந்தது இந்த நுண்ணுயிர்.

தற்செயலாய் ஒரு மாணவர் மலையேற்றத்தின் போது கொண்டு வந்த மண்மாதிரியினை சோதனைக்கூடத்தில் சில நாட்களாக சோதனை செய்ய, தற்செயலாய் நுண்ணோக்கியில் தெரிந்த அசைவுதான் இந்த நுண்ணுயிர் கண்ண்டுபிடிக்க காரணமாய் அமைந்ததாம்.
 
இந்த நுண்ணுயிரை நுண்ணோக்கி மூலமாக எடுக்கப்பட்ட படம் இது:


படம் மூலம்: யானா எக்லிட் (Yana Eglit)

இவ்வகையில் 100 வருடங்களுக்கு முன்னாலேயே சுமார் 10 நுண்ணுயிர்கள் இருப்பது அறியப்பட்டாலும், மரபணுச் சோதனகள் இதுவரை செய்யப்படாததால், இவை ஏற்கனவே அறியப்பட்ட உயிரின வகையா, இல்லை புதியதோர் இனவகையா என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. DNA Sequencing எனப்படும் மரபணுத் தொகுத்தலின் வழியாக செய்யப்பட்ட சோதனைகள் இந்நுண்ணியிர் எப்படி மற்ற இன வகைகளில் இருந்து மாறுபட்டு இருக்கின்றனதென அறிந்துள்ளனர். இவை பேக்டீரியா மற்றும் காளான் வகைகள் எந்த மூல வகையில் இருந்து இருந்து உருவானதோ அவற்றில் இருந்து உருவாகியிருக்க வேண்டும் என்கின்றனர்.பேக்டீரியா போன்ற நுண்ணுயிர் இதுவானாலும், பேக்டீரியா போல் அல்லாமல், இந்த நுண்ணியிர் வகைக்கு நுண் அங்கங்கள் இருப்பது வியப்பினைத் தருகிறது. அவை எப்படி உணவு உட்கொள்கின்றன எனபதனையும் நுண்ணோக்கி மூலமாக சோதித்து அறிந்துள்ளனர்.

மேலதிக விவரங்களுக்கு இந்த  செய்தியினைப் பார்க்கவும்.


10 comments:

  1. நல்ல செய்தி! ஒன்று அறிவியல் செய்தி. அப்புறம் உங்கள மறுபடியும் வலையெழுத்துக்களில் பார்க்க முடிவது !

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஊக்கத்திற்கு நன்றிகள்!. ஆக்கமும் தொடரும்.

      Delete
  2. Replies
    1. வருக, ஸ்ரீராம்!. ஆச்சர்யம்தான்.

      Delete
  3. தகவலைத் தமிழில் தர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டமைக்கு பாராட்டுகள். கிருஷ்ணமூர்த்தி சாரையும், ஸ்ரீராமையும் இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. புதிய தகவல். டிவிட்டர் மூலமாக வந்தேன். தொடருங்கள். இது நீர் வாழ் Zoo plankton எனப்படும் பாக்டீரியாவின் அடுத்த நிலைக்கும், நிலத்தில் வாழ் பூச்சிகளின் நிலைக்கும் இடைப்பட்டதாக காணப்படுகிறது. ஆமை முதலை போல என வைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. அவைகளை பரிசோதனை சாலையில் வளர்ப்பதில் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் கபீரன்பன்! இவற்றில் வியப்பென்னவென்றால் பரிணாம வளர்ச்சியில் நுண்ணியிராய் இருக்கலியிலேயே இப்படி வளர்ச்சியை காண முடிந்தது அல்லவா!

      Delete
  5. இப்போது பதிவு எழுதுவதில்லயா

    ReplyDelete
  6. நல்ல தகவல் ....இன்னும் நிறைய அறிவியல் செய்திகளை தாருங்கள்...நன்றி.

    ReplyDelete