Sunday, August 21, 2016

கனவில் வந்த கதைகள் - ஸ்பெஷல் காபி

ப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளி இருந்த இடத்துக்குப் பக்கத்திலேயே என் அப்பாவின் அலுவலகமும் இருந்தது. சில சமயம் பள்ளி முடிந்த பின் அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்று வருவதுண்டு.

ன்றொருநாள் வீட்டில் பிரத்யோகமானதொரு காபி செய்திருந்தார்கள். வறுத்த முந்திரியெல்லாம் போட்ட ஸ்பெஷல் காபி. காபியா பாயசமா என்று கேட்க வேண்டாம், கனவில் எல்லாம் சாத்தியம். நான் அவ்வளவாக காபி அருந்துவதில்லை. இருந்த காபியை பள்ளிக்கு எடுத்துச் சென்றால், பள்ளி முடிந்து திரும்புகையில் அப்பாவின் அலுவலகத்திற்கு சென்று அவருக்கு காபியை கொடுக்கலாமே என்று தோன்றியது. அதன்படி அந்த ஸ்பெஷல் காபியை எடுத்துக் கொண்டேன்.

ன்றைய பள்ளி முடிந்தவுடன் ஞாபகமாக பையினில் இருந்து காபி கொண்டு வந்திருந்த பாத்திரத்தை வெளியே எடுத்தேன். அதனை கையில் பிடித்துக் கொண்டிருந்தவாறு அப்பாவின் அலுவலகத்தை நோக்கி நடக்கலானேன். நடக்கும்போது இந்த ஸ்பெஷல் காபி எப்படித்தான் இருக்குமோ தோன்றியது. கொஞ்சம் சுவைத்துப் பார்க்கலாமே என்று தோன்றியதில் அதிலிருந்து இரண்டு மூன்று ஸ்பூன் அளவு எடுத்துப் பருகினேன். சுவையாக இருந்தது.

லுவலத்தை அடைந்ததும், அப்பா வேலையில் அமரும் அறைப்பகுதி அருகே சென்றேன். நுழையுமுன், அங்கே இருந்த பாத்ரூமிற்குள் சென்று டவல் ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே என்று தோன்றியது, ஏனெனில் ஒருவளை அலுவலகத்தில் காபி சிந்தும்படி ஏற்பட்டால் உடனே அதை துடைத்து விடலாமே என்ற முன் எச்சரிக்கைக்காக. ஆனால் கையில் காபி பாத்திரத்துடம் பாத்ரூமில் எப்படி நுழைவது என்ற எண்ணம் வேறு. பின்னர் பையினில் மீண்டும் பாத்திரத்தை வைத்து, சுவரின் ஓரமாக பையை வைத்து விட்டு, பின் பாத்ரூமிற்குள் சென்று ஒரு டவலை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

லுவலக அறைக்குள் நுழைந்ததும்,  ஒருவர் தரையில் அமர்ந்தவாறு எதையோ சரி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவருக்கு ஒரு ஹலோ சொல்லலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டே அவரை கடந்து செல்கையில், அவரே எனக்கு ஹலோ சொல்லி விட்டார். அவருக்கு பதில் ஹலோ சொல்லிவிட்டு, அவரைத்தாண்டி அப்பா அமரும் இடத்தை நோக்கிச் சென்றேன்.

ப்பாவைப் பார்த்து அவருக்கு காபி கொண்டு வந்திருப்பதைச் சொன்னேன். "சரி, தா" என்றார். காபி வைத்திருந்த பாத்திரத்தை அவருடைய மேஜையின் மேல் வைத்தேன். அதை லேசாக திறக்கும்போதுதான் அதை தலை கீழாக வைத்திருக்கிறோம் என்று உணரத்தொடங்கினேன். அதை திருப்ப வேண்டும் என்று தோன்றுமுன் பாத்திரம் திறந்தி விட்டது. நல்ல வேளை அதிலுருந்த காபி அதன் மூடி வரை தான் நிரம்பியதால் வெளியே சிந்தவில்லை. மீதம் இருந்ததோ கொண்டு வந்ததில் கால் பங்கு காபிதான். அதை அப்பா பருகி விட்டு, "நல்லது" என்று சொல்லி என்னிடம் பாத்திரத்தை திருப்பித் தந்தார். அதை பெற்றுக்கொண்டு, வீடு நோக்கி நடக்கலானேன்.

கனவும் கலைந்தது!

7 comments:

  1. அப்பாவிடம் சேர்க்க நல்ல விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன போலும்!

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம்! சேர்ப்பதை விட அப்பாவிடம் இருந்து பெற நல்ல விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன!

    ReplyDelete
  3. முந்திரிப்பருப்புப் போட்ட காஃபியின் சுவை அபாரம்! மிக அருமை!

    ReplyDelete
  4. ஸ்ரீராமின் யானை துறத்தும் கனவுகள் பிரசித்தம். ஸ்ரீராமிற்கும் கனவுகள் என்றால் ரொம்ப இஷ்டம்.

    கனவுகள் கோர்வையாக முழுவதும் நினைவுக்கு வருவது தான் கஷ்டமான விஷயம். எப்படியோ கனவில் காணாத விஷயங்கள் ஒன்று இரண்டு நினைவில் திரட்டும் பொழுது சேர்ந்து விடுவது நிச்சயம். முழுக் கனவையும் ஓரளவு replay பண்ணிப் பார்க்க முடிந்தால் பொதுவாக அது அதிகாலையில் கண்ட கனவாகத் தான் இருக்க முடியும். முன்னிரவுக் கனவுகள் பெரும்பாலும் நம் ஞாபகத்திற்கு சிக்கவே சிக்காது.

    ReplyDelete
  5. அந்த டவல் என்னாச்சு :)
    கனவுதானே ! என்ன வேண்டுமானாலும் ஆகலாம் :))
    எனக்கு எப்பவுமே இன்னும் பரீட்சைக்கு படிக்கலை. எக்ஸாம் வந்தாச்சு-ங்கற கனவு வந்து பயமுறுத்திக்கிட்டே இருக்கும்

    ReplyDelete
  6. eப்ப சென்னை வரீங்க? வீட்டுக்கு வந்து முந்திரிப்பருப்புப் போட்ட காஃபி சாப்பிட்ணும்!

    ReplyDelete