Tuesday, October 01, 2013

ஆருக்கும் அடங்காத நீலி

ராகம் : பேகடா
தாளம்: ஆதி
இயற்றியவர்: ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

பல்லவி
ஆருக்கும் அட‌ங்காத‌ நீலி - பொன்
அம்ப‌ல‌த்தாடும் காளி


அனுபல்லவி
பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை)

பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை


சரணம்
ப‌ர‌மநாதன்த‌னைப் பாதியாய் மாற்றினாள்

ப‌ர‌ந்தாம‌ன் முக‌ம‌தில் பல்வில‌ங்கேற்றினாள்
சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றினாள்

ஹ‌ரிகேச‌ ந‌க‌ர் வாழும் எம்மைக் காப்பாற்றினாள்

சிட்டை ஸ்வரங்கள்
;நீத பமாத மகரிஸ நிதப | ஸாகரி காநித | நீதப மபதப||
ரிஸ்க்ரி க்மாக் ரிஸ்நிரி நீதப | ஸாக்ம் ப்தநீ |தபஸ்ப அமத||
பரி (ஆருக்கும்)


இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடிட கேட்கலாம்:




இந்தப் பாட்டின் வரிகள் பொருளை, இல்லை இல்லை கதையை - கீதாம்மா அவர்களது பதிவில் கதையையும் அதன் காரணத்தையுமாக கேட்க வேண்டுகிறேன்.
கதைகளுக்கான சுட்டிகள்:

பொன் அம்பலத்தாடும் காளி (சிவனும் சக்தியும் ஒன்றே. பெயர் அளவிலேயே வேறுபாடு.  உண்மையில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.)
பாருள் பரபிரம்மத்தை அடக்கிய சாயை
பாடும் வேதங்களாலும் அறியாத மாயை
பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள்
சிரம் அது அறுபடவே 'விதி'தனை தூற்றினாள் பகுதி 1 பகுதி 2 பகுதி 3



11 comments:

  1. ஆஹா, பல மாதங்கள் கழிச்சு நீலி வந்தாள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதாம்மா,
      அப்படியே, கடைசி இரண்டு வரிகளின் (பரந்தாமன் & சிரமதறுபடவே...) "கதையும் காரணமும்" தாங்கள் சொல்ல வேண்டும்.

      Delete
  2. aaha, homework kashtamanatha irukkum poliruke. :))))

    ReplyDelete
    Replies
    1. கஷ்டமா?, உங்களுக்கா :-)
      நிதானமா பதிவா பதிலை பதிவு செஞ்சாலும் பரவாயில்லை,
      கதை கேட்க நாங்கள் காத்திருக்கிறோம்!

      Delete
  3. இன்னிக்கு ஆதார் அட்டை பதிய வரிசையில் நின்றபோதும் இதே நினைப்புத் தான். :))) முதல் வரி புரிகிறது. மூன்றாம் வரியும் ஓரளவு புரிந்தது. இரண்டாம் வரிக்கு ஒரு நண்பரை உதவி கேட்டிருக்கேன். பதில் வருதா பார்க்கலாம். இல்லைனாலும் தேடிக் கண்டுபிடிச்சுடலாம். :))) மனசில் எங்காவது ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் சின்னப் புள்ளியாக. கண்டு பிடிக்கணும். :))))

    ReplyDelete
  4. Hi Jeeva got it. Will write in the afternoon. Thank You, Thank You.

    ReplyDelete
    Replies
    1. கண்டு பிடிச்சுட்டீங்க போல இருக்கு!

      Delete
  5. அர்த்தம் அப்புறம் தெரிஞ்சுக்கலாம். பாட்டு நல்லா இருக்கு! நான் சஞ்சயோட Fan!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! (சஞ்சயோட விசிறி), இந்த பதிவிலே மற்ற சஞ்சய் பாடல்களையும் கேட்டு அதிலே உங்களுக்கு அதிகம் பிடிச்சது எது என்று சொல்ல வேண்டும்!

      Delete
  6. நான் கண்டு பிடிச்சது முதல், மூன்றாம் வரிகளே, இரண்டாம் வரியைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தவர் ஈரோடு நாகராஜன். அவரைத் தான் கேட்டிருந்தேன். முடிஞ்சா எண்ணங்கள் பதிவுக்கு வந்து பார்த்துப் படிச்சுக் கருத்துச் சொல்லுங்க. (நேரம் இருக்கையில்) :)))))

    ReplyDelete