மாயை? இச்சொல்லின் பொருள்தான் என்ன?
மாயை என்பது காட்சிப்பிழையா அல்லது கானல் நீரா?
தொடக்கக் காலத்தில் மாயை என்றால் மகேசனின் ஜாலமென்றுதான் பொருள்.
காலப்போக்கில், அப்பொருள் மறைந்து போய், மனமயக்கமே மாயை என்று பொதுவாக பொருள் கொள்ளப்பட்டது. இந்த உலகமே பொய். காண்பதெல்லாம் வெறும் மாயை என்று பொருள் சொல்லப்பட்டது. நிலையாமை என்பதுதான் மாயை என்பதாகக் கொள்ளப்பட்டது.
சுவேதஸ்வதர உபநிடதம் சொல்லுவதை சற்று நோக்கினால்:
"இயற்கையே மாயை என்பதறிவோம்.
மனமே மாயையின் அரசன் என்பதை அறிவோம்.
அவ்வரசனே இறைவன் என்பதறிவோம்."
கிட்டத்தட்ட கனவில் நடப்பது போல, பாதி உறக்கத்தில், பாதி விழிப்பில் நமது வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்க, நமது புலன்களால் உணரப்படக்கூடயதை மட்டுமே உலகமாக, பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவாய் நாம் கொள்வதால் - நம்மைப் பொறுத்த வரையில் பிரபஞ்சம் என்பதுஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது.
1. ஒரு பக்கம் மாயை என்றால் "கனவுக் காலம், வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்" என்பது போன்ற நிலையின்மையாகவும், புலன்களால் உணரப்படுவதாகவும், அதனால் மனமும் அதே மயக்கத்தில் அமிழ்ந்து போவதாகக் கொள்ளப்பட்டாலும்,
2. அதே மாயையினால்தான் எங்கெங்கும் வியாபித்து, எல்லாப் பொருளிலும் இருக்கிறான் இறைவன்.
மேலே சொல்லப்பட்ட இரண்டு கூற்றுகளும் இந்து சமயத்தின் தத்துவ அடித்தளமாகும்.
மற்ற எல்லா கூற்றுகளும் இவற்றில் இருந்து வந்தவைதான்.
-சுவாமி விவேகானந்தரின் "மாயை" பற்றிய சொற்பொழிவுகளில் இருந்து
சகோதரி நிவேதிதையின் குறிப்புகள் (The Master as I saw Him)
,என்று தோன்றியது என்றே சொல்லமுடியாத மாயையின் வடிவான அஞ்ஞானத்தின் காரிய காரணங்களை விலக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த கடைக்கண் பார்வை உள்ளவளான அந்த ஸ்ரீ கமலாம்பிகையைவிட மேலான வேறூ தெயவம் இல்லை இல்லை இல்லவே இல்லை
ReplyDeleteந்ல்ல பதிவு ஜீவா
நல்ல இடுகை ஜீவா....பெரிய விஷயத்தை சிறப்பாகச் சொல்லியிருக்கீங்க.....அம்பிகையின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்று....:-)
ReplyDeleteவாருங்கள் திராச ஐயா!
ReplyDeleteதோற்றமின்றித் தொடர்ந்திடும் என்றாலும் முடிவுகொண்டது அல்லவா!
இல்லை இல்லை என்பது நேதி நேதி என்பது போல அறுதியிட்டது சிறப்பு.
வாருங்கள் மௌலி சார்,
ReplyDeleteசிறப்பாகச் சொல்வது என்பது சுவாமி விவேகானந்தருக்கு இயல்பல்லவா!
அம்பிகையின் அருளைப் பற்றி அவரன்றி யாரறிவார்!
அம்பிகையையிடம் இப்படி ஒரு வேண்டுதலை வைத்தால் என்ன!
அஞ்ஞானமதைப் புகட்டம்மா எனக்கு
மெய்ஞானமெல்லாம் தானாய்த் தெரிய!
நின் தொழில் என்னைப் படைத்தது
!
நின் தொழில் என்னைக் காப்பது
!
நின் தொழில் என்னை உன் மாயையில் ஆழ்த்துவது!
நின் தொழில் உன் மாயையில் இருந்து அகற்றுவது!
இவையாவயும் உன் தொழிலாம் அருளல்லவோ!
அருள்வாய் அம்பிகையே!
நின் தொழில் என்னைக் காப்பது. சரியே. இதைத் தவிர வேறு என்ன வேண்டும்!
ReplyDeleteவாங்க கீதாம்மா.
ReplyDelete:-)