உடல் வேறு உயிர் வேறு என்று பகுத்து அறிவதே பகுத்தறிவாம்.
நம்மால் நம்ப இயலாதவற்றை 'மூட நம்பிக்கை' எனப்பெயரிட்டு, அம் மூட நம்பிக்கைகளை புறம் தள்ளுவதே - பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தான் நாம் வெகுவாகப் பார்ப்பதுண்டு. பல்லாயிரம் ஆண்டுகளாக உருவான சமூகத்தில் நம்பிக்கைகள் பல்வேறு விதமாக உருவாகுவதும், அவை பலராலும் பல்வேறு விதத்திலும் தேவையில்லாமல் பின்பற்றப்பட்டும், நம்பப்பட்டும் வருவதும் இயல்பாகும். ஒரு நம்பிக்கை எப்படி உருவாகிறது? ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் 'இது நிஜம்', என நம்பப்படுவதால். அதுவே நம்பிக்கைகளுக்கு வித்தாகி, இன்னும் பலராலும் பின்பற்றப்படுகிறது. பின்பற்றும் சிலருக்கு, அவர் பின்பற்றும் நம்பிக்கை பொய்த்திட அவர்களில் சிலர் அப்போது அதிலிருந்து வெளிவருவதும் உண்டு. அவர்களில் சிலருக்கு வேறொரு நம்பிக்கை, நம்பிக்கை ஊட்டிட, அந்த நம்பிக்கைக்கு மாறி விடுவதும் உண்டு. வேறு சிலரோ, கேள்விகள் ஏதும் எழுப்பாமல் குருட்டுத்தனமாக நம்பிக்கைகளைப் பின்பற்றுவதும் உண்டு. நம்பிக்கை என்ற பெயரால் அறியாமைக்கு ஆளாகவும் கூடாது. மூடநம்பிக்கை என்ற பெயரால் அறிவை ஒதுக்கவும் கூடாது. மூட நம்பிக்கையா, இல்லையா? கண்டு பிடிப்பது எப்படி? சமீபத்தில் 'கண்ணாடி' என்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் அழகாகச் சொன்னார் - "எனக்கு எந்த நம்பிக்கை பயன் தருகிறதோ, அதுவே 'என் நம்பிக்கை'. மற்றவர்கள் அதை மூடநம்பிக்கை என்றழைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்றார்.
அறிவியல் வளர்ச்சியினால் நிரூபிக்க அல்லது ஏற்றுக்கொள்ளப் பட இயலாதவற்றைத் தான் மூட நம்பிக்கையா இல்லையா என்றொரு விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு, இங்கு, இன்றைய அறிவியல் வளர்ச்சிதான் அதற்கு அளவுகோலாக இருக்கிறது. பல அறிஞர்களும், அறிவியல் வளர்ச்சியால் இந்த மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவினைத் தர முடியும் என்று நம்பினார்கள், நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். அறிவியிலை எப்படியாவது முன்னேற்றி எல்லா கேள்விகளுக்கும் ஒரு பரமத்துவமான பதிலினைத் தர முயன்று வருகிறார்கள்.
அறிவியல் ஆராய்சியாளர்களின் தேடுதல் ஒருபுறம் இருக்க, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மெய்ஞானிகள், இத்தேடுதல் எல்லாவற்றிக்குமான முடிவினை தம்முள்ளேயே கண்டும், களித்தும், அவற்றை ஆராதித்தும் ஆனந்தித்தும் வருவதினை யாரும் புறம் தள்ள இயலாது. அகக்கண்களால் அவர்கள் கண்டு சொன்ன உண்மைகளின் வீச்சு என்றென்றைக்கும் நிலையானதாகவும் இருப்பது. மாறாக, புறக் கண்கள் பார்க்கும் உலகத்தேயே எல்லாம் எனக்கொள்பவர்களின் அறிவின் உண்மையான வீச்சு எள்ளளவேயாம்.
எதனோடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் என்றோதி அறியீரொ?
அகத்தனை ஆய்ந்து அறியார், தூல உடலின் சூக்கும வடிவத்தினை கண்டு கொள்ளுவதில்லை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து பார்த்து 'இல்லை' என்று சொல்லி என்ன பயன்? உள்ளே ஆழ்ந்து உணர்ந்த மெய்ஞானிகள், சூக்கும வடிவங்களை உற்று நோக்கி, அவற்றின் ஆதார சக்தியினை அறிந்து சொன்னார்கள், தெளிந்து சொன்னார்கள்:
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென்றே மறை
கூவுதல் கேளீரோ?
அதுவே, இயற்கையின் சக்தி என்பதை ஞானிகள் உணர்ந்திருந்தனர். காற்று, மழை, இடி முதலியவற்றின் இயக்க சக்தியும் தெய்வீக சக்தி என்பதை அறிந்திருந்தனர். இயற்கையினை வணங்கிய பண்டைக் காலத்தை எள்ளி நகையாடி, அது அச்சத்தினால் ஏற்பட்டது எனக் காரணம் கற்பிக்கும் சிறு மதியார் சில கணமாவது தம்மை உணர்ந்திருப்பாரா? உணர்ந்திருந்தால்தான் உண்மை அறிந்திருப்பாரே. இறை மறுப்பினையே பகுத்தறிவு என்று வழங்கிக் கொண்டதிலேயே தெரியவில்லையா இவர்களது மடமையினை.
ஒன்று பிரமம் உளது உண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரமம் உளதுண்மை அஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.
தமது உடலிலேயே சூக்கும ரூபமாய் அமைந்திருக்கும் பிரகிருதி குணங்களையும் குண காரியங்களையும் அறிந்து கொள்ள முடியாதவர்கள் ஜீவனின் உண்மையான வடிவினை எப்படிக் கண்டு கொள்ள இயலும்? அது பாரெங்கும் ஒளிர்விடும் பரமன், சேதனமாய் இருக்கும் தன்னில் ஒளிர்வதை எப்படிக் கண்டு இன்புற இயலும்?

(ஓவியம் நன்றி: ஹிமாலயன் அகாடமி)
சித்தினை அசித்துடன் இணைத்தாய் -
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய்.
சித்தானது, உடலான அசித்துடன் இணைந்தது. அவ்உடலை ஆலயம் என்றார்கள். அந்த ஆலையம் அமையும் இடம் தலம் அல்லது க்ஷேத்திரம் எனலாம். சூக்கும சரீரங்களும், தூல சரீரங்களும் அபரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். குண வயப்பட்ட ஜீவன், பரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். உள்ளம் கடந்த இந்நிலைகளை, கட-உள் என்றார்கள் ஞானிகள். 'நான் கடவுள்' எனும் நிலையை அடைய, குணங்களைக் கடந்து, அவை மறைக்கும் உள்ளொளியினை உணர்ந்து, ஒன்றாய் இருக்கும் பரமனெனத் தெளிந்தார்கள் ஞானியர். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாக நிற்கிறது என்பதை அனுபவத்தில் அறிந்து தெளிகிறார்கள் ஞானியர். ஐம்பூதங்களின் கலவையான உலகையும், அது சமைந்திருக்கும் அண்ட சராசரங்களையும் சிதாகாசத்தில் - தன் இதயக்குகையில் கண்டு ஆனந்தக் களிப்படைவதுதான் பாரதி பாடும் "எத்தனைகோடி இன்பம்!" அன்றோ!
சிந்திக்க வைத்த இடுகை. இன்னும் சரியாச் சொன்னா, ஐம்புலன்களும் இன்புட் சேனல்கள். அந்த இன்புட்களை பகுத்து அதாவது பிராஸஸ் பண்ணி என்னன்னு உணர்ர ஆறாவது அறிவுதான் பகுத்தறிவு. இது மனிஷ ஜன்மமா பிறந்த எல்லாருக்கும் பொது. ஸ்பெஷலா பகுத்தறிவுன்னு எக்ஸ்ட்ரா அட்டாச்மெண்ட் யாருக்கும் இல்லை.
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
நாம் உணர்ந்த்ததை மற்றவர்களும் உணர வேண்டும்
ReplyDeleteஎன்ற அடிப்படையில் உருவானது வழிபாடுகள்.
தமிழில் நம்பிக்கை என்ற சொல் சந்தேகத்தோடு சொல்வது போல் இருக்கிறது. நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்பது போல. Faith is tangible. It can be experienced. At the same time there is no desire or need for this kind of experience for a lot of people. நடந்தும் போகலாம், வண்டியிலும் போகலாம் என்னும் போது
வண்டியிலே அழைத்துப் போகிறேன் என்று வருபவன்
கண்ணன். அடிப்படையில் எலக்ட்ரான்களும் நியுட் ரான்களும் மிதக்கும் வெளியில் நான் நீங்கள் என்ற
புற அடையாளங்கள் இல்லை. இந்த வெளியே கண்ணன். எல்லாமே இங்கே தொடங்கி இங்கேயே முடிகிறது. இந்த வெளியுடன் தொடர்பு
கொள்ள எற்பட்டதுதான் வழிபாடுகள்.
தீபக் சோப்ரா அவர்கள் தனது
ReplyDeleteAgeless body Timeless mind
என்னும் புத்தகத்தில் இரண்டாம் பாகத்தில்
அறிவு பூர்வமாகவே நீங்கள் சொல்லும் யாவற்றையும் விளக்குகிறார்.
புவியையும் பூத உடலையும்
இணைத்து எவையெல்லாம் அண்ட சராசரத்தில் நடக்கிறதோ அவை அனைத்தும்
இப்பூத உடலினுள்ளேயும் நடக்கிறதே !
ஆக, அண்டமும் பிண்டத்துக்குள் நடக்கும் சங்கதியும் ஒன்றே.
என்றார்.
அவர் ஒரு இந்திய அமெரிக்கர்.
மனிதனுக்குள் இருக்கும் ஏதோ ஒரு நுட்பமான ஸெல் யுக யுகமாக பரம்பரை பரம்பரையாக,
எள்ளு தாத்தா, கொள்ளு தாத்தாவிற்கும் முன்னால் இருந்து, இன்று வரை, இன்னும் நமது பேரன், பேரனுக்கும்
பேரன், அவனுக்கும் பேரன் என்று தொடர்ந்து கொண்டே உயிருடன் வாழும்போது
மனித
உடல் உண்மையாகவே இறக்கிறதா அல்லது வெவ்வேறு உருக்களை எடுத்துக்கொள்கிறதா ?
இவை யாவற்றையும் ஒரு கணம் நினைத்துப்பார்ப்பின்,
நம்பிக்கையின் எல்லைக்கோடுகளில் அறிவின் ஒளிக்கதிர்கள் இருப்பதைக்
காண இயல்கிறது.
சுப்பு ரத்தினம்.
ஐம்பூதங்களின் கலவையான உலகையும், அது சமைந்திருக்கும் அண்ட சராசரங்களையும் சிதாகாசத்தில் - தன் இதயக்குகையில் கண்டு ஆனந்தக் களிப்படைவதுதான் பாரதி பாடும் "எத்தனைகோடி இன்பம்!" அன்றோ! //
ReplyDeleteஅருமையா எழுதி இருக்கீங்க ஜீவா. பாரதியின் எத்தனை கோடி இன்பத்தின் புதிய பொருளும் அழகு. இவ்வளவு நாட்களாக உங்க பதிவுகள் எதுவுமே எனக்கு ஏன் அப்டேட் ஆகலைனும்புரியலை! :(((((
அதிகம் இல்லை என்றாலும் மற்றதும் படிச்சுட்டு வரேன், நன்றிப்பா.
ReplyDeleteவாங்க ஜவஹர் சார்!
ReplyDeleteஆமாம், இன்புட் சேனல்கள்தான் - ஆனால் இவை வழியே உள்ளே வருவது எல்லாம் noise மட்டுமே!
இவற்றால் மனதிற்கு இடையூறு மட்டுமே!
வாங்க அனானி#1,
ReplyDeleteநீங்க கொடுத்த சுட்டியை 'கிளிக்' செய்து பார்த்துவிட்டேன்!
வாங்க அனானி#2,
ReplyDelete//தமிழில் நம்பிக்கை என்ற சொல் சந்தேகத்தோடு சொல்வது போல் இருக்கிறது.//
இந்த வரிகள் எனக்குப் பிடிச்சிருந்தது...
எல்லாவற்றையும் கேள்வி கேட்டு, புற அறிவால் புரிந்தால் தான் அத நம்புவது என்பது - நமக்கு பிறந்தது முதல் பழகிப்போன ஒன்று - அதை மாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல.
//நடந்தும் போகலாம், வண்டியிலும் போகலாம் என்னும் போது
வண்டியிலே அழைத்துப் போகிறேன் என்று வருபவன்
கண்ணன்.//
வாவ்!
//அடிப்படையில் எலக்ட்ரான்களும் நியுட் ரான்களும் மிதக்கும் வெளியில் நான் நீங்கள் என்ற
புற அடையாளங்கள் இல்லை. இந்த வெளியே கண்ணன். எல்லாமே இங்கே தொடங்கி இங்கேயே முடிகிறது. இந்த வெளியுடன் தொடர்பு
கொள்ள எற்பட்டதுதான் வழிபாடுகள்.//
அருமை!
வாங்க சூரி சார்!
ReplyDelete//புவியையும் பூத உடலையும்
இணைத்து எவையெல்லாம் அண்ட சராசரத்தில் நடக்கிறதோ அவை அனைத்தும்
இப்பூத உடலினுள்ளேயும் நடக்கிறதே !//
அதை அகக்கண்ணால் காணும் நாள் எந்நாளோ!
வாங்க கீதாம்மா,
ReplyDeleteபாராட்டுக்களுக்கு நன்றிகள்!
நம் நாட்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் தன்மைதான் என்ன? கட வுள்
ReplyDeleteகற்பனையே - புரட்சிகர மனித வரலாறு எனும் நூலினை தோழர் ஏ.எஸ்.கே.
(முதுபெரும் பொதுவுடைமை வீரர்!) எழுதியுள்ளார்.
அதன் முன்னுரையில் அவர் குறிப்பிட்டு இருக்கும் கருத்து கோடி பொன் பெறும்.
முதல் மனிதன் ககாரின் 1962 இல் விண்வெளி -அகண்ட காஸ்மாசில் (ஊடிளஅடிள)
சென்றதை விஞ் ஞானியாக இருந்தும் கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர்
சி.வி. ராமன் அவர் கள் அழுத்தமாகக் கண்டித் தார். கடவுள் வசிக்கும் இடத்
தில் மனிதன் தன் பூத உட லுடன் செல்லுவது மிகமிகப் பாவம் செய்வதாகும்
என்றார்.
அறிஞர் பட்டம் சூட்டப் பட்ட அவரே அவ்வாறு எண்ணங் கொண்டவராக இருந்தார்
என்றால், நம் நாட் டின் பாமர மக்கள் நிலையை நான் சொல்லித்தான் தெரிய
வேண்டியதில்லை - கூறா மலே விளங்கும் என்று எழுதியுள்ளார் தோழர்
ஏ.எஸ்.கே.!
வாங்க தமிழன்.
ReplyDeleteஏ.எஸ்.கே என்பது ஏ.எஸ்.கே ஐயங்கார் அல்லவா!
நிலவில் அடியெடுத்து வைத்த முதல் மனிதன் - நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு சென்ற உடன் முதலில் சொன்னதும் - கடவுளுக்கு நன்றியைத்தான்.
அறிஞனோ, அல்லாமல் பாமரனோ, அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு உயர்வாகத் தெரிகிறது. இருந்துவிட்டுப் போகட்டும்...
கீதை - சில எண்ணங்கள்.
ReplyDeleteசிறு வயது முதல் பலவற்றைப் படித்தேன். சிலவற்றை மட்டுமே உள்வாங்கினேன். இருபது வருடங்களுக்கு படித்த ஒரு ஆங்கிலப் புத்தகம், கீதைக்கான உரை. மகேஷ் யோகி எழுதியது.
முதல் ஆறு அத்தியாயங்களோடு புத்தகம் முடிந்து விட்டது. மீதி அத்தியாயங்களுக்கு கடைசி
வரை அவர் உரை எழுதவில்லை. புத்தகம் மிகவும் பிடித்திருந்தது. எதற்காக சைவ மரபைச் சேர்ந்தவர் கீதையைத் தேர்ந்தெடுத்தார் என்று அப்பொழுது புரியவில்லை. அவருடைய ஆழ் நிலைத் தியானமுறை பதஞ்சலியின் யோக சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த தியான முறை இயற்கையின் அடிப்படை நிலையான பெரு வெளியுடன் தொடர்பு கொள்வதற்கு என்பார். அந்த
பெரு வெளியின் குணமாக அதில் எதுவும் சாத்தியம் என்பார். அவர் கீதைக்கான பொருள்
விளக்கம், பார்த்த சாரதி என்பதற்கான பொருள் விளக்கம் என்று புரிந்தது. அவர்
சொல்ல வந்ததை, கண்ணன் பார்த்தனுக்கு மட்டுமல்ல, நமக்கும் சாரதியாகவே வருவான் என்பதாகப் புரிந்தது.
சொன்னபடி கேட்பான் கண்ணன். சொன்னது பாரதி. அதை தியான முறையின் மூலம் கோடிட்டுக் காட்டினார் மகேஷ் யோகி. அண்டத்தின் அடிப்படை நிலையான புரோட்டான்களும் நியூட்ரான்களும் எலக்ட்ரான்களும் மிதக்கும் பெருவெளியை இறைவனாக சித்தர்கள் அடையாளப்படுத்தினர். அதை தொடுவதர்க்கு, தொடர்பு கொள்வதற்கு மதம் வழிபாடு முறைகளை எற்படுத்தியது.
நான் என்ற பிணையால், இல்லாத ஒன்றால், நாம் யாருமே பெரு வெளியுடன் இணைந்தவர்கள்
என்பதை மறந்து விடுகிறோமா? மகாபாரத கிளைக்கதையில், கண்ணன் துரியோதனனிடம், நான் வேண்டுமா, என் படை வேண்டுமா என்று யுத்தத்திற்கு முன் கேட்பதாக வரும். நம் கைக்கெட்டும்
தூரத்தில் நாம் கேட்ததைச் செய்ய ஒரு அளப்பரிய சக்தி காத்திருக்கிறது.
பாரதி படத்தில் இளையராஜாவின் இன்னிசையில், ஹரிஷ் ராகவேந்திராவின் இனிமையான
குரலில் வரும் பாடலைப் பல முறை கேட்டிருந்தாலும் அதன் ஆழமான பாடல் வரிகளை மெதுவாகத்தான் ரசிக்கத் தொடங்கினேன்.
“நிற்ப்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம் சொப்பனம்தானோ, பல தோற்ற
மயக்கங்களோ” - பாரதி.
@அனானி#2,
ReplyDeleteமீள் வருகைக்கு நன்றிகள்!
மகேஷ் யோகியைப்பற்றி இதுவரை அறிந்ததிலை.
அழகான அறிமுகம் சிகரம்!.
சொன்னபடி கேட்பான் கண்ணன்!!!
எத்தனை அர்த்தம் பொதிந்த பொன்னான வரிகள்!
உன் படையை விட நீ தான் வேண்டும் என மானுடம் சொல்லட்டும்.
நன்றிகள்!
அநானியின் ஆழ்ந்த கீதை விளக்கம் புல்லரிக்க வைத்தது. நன்றி.
ReplyDelete