எத்தனை யாவும் எத்தனை சொல்லடா,
எத்தனை யாக்கை எத்தனை வினைகள்
எத்தனை யாவும் எத்தனை சொல்லடா.
நெட்டிபோல் நீரில் நாளெலாம் மிதந்து
வித்தினை மறந்து மற்றதைப் பிடித்தேன் பாரடா.
பித்தனாய் பிழற பித்ததைப் பீடிக்கும்
சொத்தெலாம், கொண்ட சொத்தெலாம் உதவா.
சந்ததம் வீணென அசதியில் தளர்ந்திட
எஞ்சியதில் வீடும் சடுதியில் வாராதா.
இத்தனை துயரையும் இடரையும் ஓட்டும்
சித்தினில் நவமெனச் சுடர்வது யாதடா?
மொத்தமும் சிவமென சிவசக்தியின் முகமென
மெச்சிட உச்சியதை அடைந்தே உய்யடா.
எத்தனை என்னும் முதற்சொல்லுக்கு எவ்வளவு எனவும்
ReplyDeleteஎத்தனை என்னும் இரண்டாம் சொல்லுக்கு என்ன தன்மைத்தாயின எனவும்
பொருள் வரவும் செய்கிறது.
புவியில் வாழும் ஜீவிகள், அஜீவிகள் அனைத்துமே
கணக்கிலடங்காயின. அதே சமயம் வெவ்வேறு தன்மையாயின.
தனித்துவமே ஒவ்வொரு படைப்பின் சிறப்பு.
அச்சிறப்பினைக் காத்து அருள் செய்வதே
சிவத்தின் காரணமும் காரியமும் ஆனதோ !!
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
அழகாகச் சொன்னீர்கள் சூரி ஐயா.
ReplyDeleteசம்சார விருட்சம் தான் மேலும் கீழுமாக எண்ணிலடங்கா விதங்களில் விரிந்து படந்து கொண்டிருக்கின்றது!