Friday, June 04, 2010

பெய்யெனப் பெய்யும் மழை

பெய்யெனப் பெய்யும் மழையாய் மனமதிற்
பெய்திடும் மெய்யருளும் மேனியெங்கும் ஓங்கிட
உய்யவே வேண்டும்; உந்தன் உகப்பை
செய்யவே வேண்டும் சிறப்பு.

4 comments:

  1. நேற்று இரவு நல்ல இடி மின்னலுடன் வருண பகவான் விஜயம் செய்தார். பூமிநனைந்து செடிகள் எல்லாம் மஹா உற்சாகத்தோடு இருக்கின்றன. பதிவுலக நல்லோர் சொன்னால் மழை பெய்துவிடும் என்றால் நீங்கள் அடிக்கடி இந்த மாதிரி எழுதுங்கள் ஜீவா.

    ReplyDelete
  2. வாங்க வல்லியம்மா!
    அங்கே மழையா!
    இங்கேயும் மழை!
    தங்களைப் போன்ற பெரியவர்களின் மனம் குளிர இளைய தலைமுறைப் பதிவர்கள் சிறிதேனும் தூரல் போட்டாலும், அது வளம் பலச் சேர்க்கும்!
    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்!

    ReplyDelete
  3. ஹிந்தி இலக்கியத்தில் மஹாதேவி வர்மா ( 1950 1960 )என்று ஒருவர் மிகப்பிரசித்தமானவர்.
    இவரது படைப்புகள் ஆங்கில இலக்கிய கர்த்தா டி.எஸ். எலியட் படைப்புகள் போல இருக்கும்.
    ரஹஸ்ய வாத் எனும் பரம்பரைக்கு கீழ் தன் பாடல்களை எழுதியவர்.

    ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பொருள் உண்டு. ஆயினும் கவிதை முழுவதும்
    படித்தபின் வெறொரு பொருள் இருப்பாதாகத் தோன்றும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. வாருங்கள் சூரி ஐயா!

    கருணை மழை - இறையைப் பிரிந்து தவிக்கும் ஆன்மாவின் சோகத்தை மழை நீருக்கு
    ஒப்பிட்டுப் பேசும் வர்மா அவர்களை முன்னமே கவிநயாக்கா பதிவில் மேற்கோள் இருந்தீர்கள் அல்லவா, நன்றிகள்!

    ReplyDelete