Sunday, November 19, 2006

பாதி மதி நதி...

சமீபத்தில் கேட்ட திருப்புகழ் பாட்ல்.

கேட்ட பொழுது முதல் நெஞ்சை விட்டு நீங்கா பாடல்.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.

பாடல் வரிகள்:

(பாடல் வரிகள் சீர்களாக அல்லாமல் படிப்பதற்கு எளிதான சொற்களாக)

பாதி மதி நதி போதும் அணி சடை

நாதன் அருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்

பாதம் வருடிய மணவாளா

காதும் ஒருவிழி காகம் உற

அருள் மாயன் அரி(ஹரி) திரு மருகோனே

காலன் எனை அணுகாமல்

உனதிரு காலில் வழிபட அருளாயே

ஆதி அயனோடு தேவர்

சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினில் ஏறி

அமரர்கள் சூழவலம்வர வரும் இளையோனே

சூத மிகவளர் சோலை மருவும்

சுவாமிமலைதனில் உறைவோனே

சூரன் உடல் உற வாரி சுவரிட

வேலை விடவல பெருமாளே.

பாடலைக் கேட்க

3 comments:

  1. THIS only my very very favarate song.. but i con:t down load it Any time iam singing.....chitra chitram

    ReplyDelete
  2. வாங்க சித்ரா சித்ரம்,
    மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  3. பாடலை சுட்டி கொடுத்திருந்த தளத்தில் இருந்து எடுத்து விட்டார்கள் போலவும்...
    நேரம் கிடைக்கையில் தருவிக்கப் பார்க்கிறேன்,
    நன்றிகள்!

    ReplyDelete