ஒருகண் உலகதைக் காணப்போது மெனினும்
இருகண் இருந்தும் பயனென்கொல் எனதருமைத்
திருமுருகினைக் காணா விடில்.
முக்கண்ணனுமை மைந்தன் செந்திற்பதியே தேவாதிதேவா
இக்கணமே எனைக்காக்க விரைவாய் அருள்வாய்.
ஈராறுகண் இருந்தும் எனைக்காணதிருப்பதேன்
ஓராறு அவையங்களும் உனைத்துதி செய்ய
வேறேது கதியேது விரைவாய் அருள்வாய்.
-ஜீவா
----------------------------------------------------------------------------------------------------------
இருகண் இருந்தும் பயனென்கொல் எனதருமைத்
திருமுருகினைக் காணா விடில்.
முக்கண்ணனுமை மைந்தன் செந்திற்பதியே தேவாதிதேவா
இக்கணமே எனைக்காக்க விரைவாய் அருள்வாய்.
ஈராறுகண் இருந்தும் எனைக்காணதிருப்பதேன்
ஓராறு அவையங்களும் உனைத்துதி செய்ய
வேறேது கதியேது விரைவாய் அருள்வாய்.
-ஜீவா
அடுத்து இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது செந்திற்பதியைப் பாடும் சந்தமொன்று சாவேரி ராகத்தில், பெரியசாமித் தூரன் அவர்கள் இயற்றியது.
ஸ்ரீபாலகோபல பாலா எனும் தீக்ஷிதர் கிருதியும்,
சங்கரி சங்குரு சந்திரமுகி எனும் ஷ்யாமா சாஸ்திரிகள் கிருதியும் போலவே
இப்பாடலில் சாவேரி இராகத்தில் இழைந்தோடும் இனிமைய இரசிக்கலாம்.
ராகம்: சாவேரி
தாளம்:ஆதி
எடுப்பு
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ
(முருகா முருகா என்றால்)
தொடுப்பு
ஒருகால் முறைசெய்தாலும் நின்பதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்
(முருகா முருகா என்றால்)
முடிப்பு
தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பேவடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே
(முருகா முருகா என்றால்)
பாடுபவர்: அருணா சாய்ராம்
தேவாதிதேவன் : தேவாTheதேவன்!
முருகனைக் காணாத கண் என்ன கண்ணே?
ReplyDeleteகண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?
ஆறு முகம் இருந்தும் ஆறுமோ? என்னைப் பாருமோ? ஒரு மொழி கூறுமோ? சேவல் "கொடியவனே" செப்பு!
வாங்க கே.ஆர்.எஸ்!
ReplyDeleteகொடியவனின் ஒரு பாதியைக் கொடியாய் கொண்டதாலோ - அவன் கொடியவன்?
அல்லது "கூர்வேல் 'கொடுந்தொழிலன்' குமரனின்" மருகனாதாலாலோ - அவன் கொடியவன்?
// ஓராறு அவையங்களும் உனைத்துதி செய்ய
ReplyDeleteவேறேது கதியேது விரைவாய் அருள்வாய். //
செந்திற்பதி முருகா !
சந்தமொன்று சாவேரியில் கேட்டு மகிழ்ந்தாய் !!
விந்தையாம் அருணாவின் வித்தையினை
விண்ணும் மண்ணும் புகழ யானுமதை கேட்டேன்.
இதோ !!
ஜீவாவின் பாடலை ஒரு விருத்தமாக,
சாவேரியில் இசைத்த பாடலை
சண்முக பிரியாவில் இணைத்து
பாடுகிறான் இந்த வயோதிகன்.
வருவாய் !! அருள் தருவாய் !!
சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
(in a couple of hours from now0
வாங்க சுப்புரத்தினம் ஐயா.
ReplyDeleteஅன்பர்களின் பாடல்களையெல்லாம்
அருமையாய்ப் பாடி வலையேற்றும் தங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள். தங்கள் அரும் தொண்டு அனைவருக்கும் பெரும்பேறு.
நல்ல பாடல். நன்றி ஜீவா.
ReplyDelete