Friday, July 29, 2011

விழிக்கும் மொழிக்கும் பழிக்கும் வழிக்கும்

கேள்வியும் பதிலும்:

இது கேள்விக்கேற்ற பதிலல்ல - அதற்குப்
பதில் பதிலுக்கேற்ற கேள்வி.

அடியேன்:
பழித்திருக்கும் பாதக உலகம் பாழுங்கிணற்றில் தள்ளப்பார்க்க
விழித்திருப்பதே விழிக்கும் வழிக்கும் துணையாமோ?
செழித்திருக்கும் மொழியும் எம்மை அணையாய் தடுத்திருக்க
வழித்தடமெல்லாம் வானோர் கண்திறந்து பார்த்திடச்செய்திடும்
விழித்திருத்தலே வாடிக்கையாய்ப் போகாதோ?

கந்தரலங்காரம்:
விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


|

8 comments:

  1. முருகா” வெனும் நாமங்கள் //

    துணையாய் வந்து அருமையாய் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஓம் சரவணபவ...

    ReplyDelete
  3. முருக பெருமான் (ஆன்மீக சிந்தனையில் பாரதியார்)
    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  4. பதிலுக்கேற்ற கேள்வி நல்லாருக்கு :)

    ReplyDelete
  5. இன்றுதான் வலைசரம் மூலம் உங்கள் வலைப்பூ எனக்கு அறிமுகம் . வலைப்பூ பதிவு மிக மிக அருமை..நல்ல விசயங்களைச் சொல்றீங்க.பாராட்டுக்கள்.Followrs -ல்
    சேர்ந்து விட்டேன்..

    ReplyDelete
  6. அருமையாய் இருக்கு. உங்க வலைப்பக்கம் எனக்கு அப்டேட் ஆகிறதே இல்லை. என்னனு தெரியலை. பார்க்கணும். :( இன்று தான் இந்தப் பதிவின் அப்டேட் வந்தது.

    ReplyDelete
  7. தன்யனானேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete